Monday, October 16, 2017

நேர்மறை எண்ணங்கள் பெருகனுமா? வெறுப்பவரையும் நேசி!!

எல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்டது என்று எதுமே இல்லை உலகில். ஒருவருக்கு பிடித்த ஒரு ஆள், அல்லது செயல் அல்லது பொருள் மற்றவருக்கு பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இதனால் பிடிக்காதவரிடம் இருந்து எதிர்மறை கருத்துகள் அல்லது விமர்சனங்கள் வரலாம்.


ஷாப்பிங் வர்த்தகம் மற்றும் நிறுவனங்கள் கூட மோசமான விளம்பரம் கூட ஒரு வகை விளம்பரம் என்று ஒரு கூறி உள்ளது. அன்பிற்கு எதிர்சொல் வெறுப்பு மட்டும் இல்லை அலட்சியம் கூட தான். அதனால் உங்கள் மேல் அன்பு இல்லாமல் உங்களை எதிர்மறையாக விமர்சிப்பவர்களை நீங்கள் வெறுக்காதீர்கள், அவர்கள் கருத்துக்களை மட்டும் அலட்சியம் செய்யுங்கள்.

உங்களை நோக்கி வரும் 10 நல்ல நேர்மறை விமர்சனங்களை விடுத்து, 1 எதிர்மறை விமர்சனத்தின் தாக்கம் ஏன் மனதில் நிலைக்கிறது? உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள். இதை கூறும் அளவிற்கு நடைமுறை படுத்துவது எளிது இல்லை . ஆனால் நம்மை எதிர்மறையாக விமர்சிப்பவர்களையும் நேசிக்க கற்று கொள்வது நம்மை வளரச் செய்கிறது.

நம்மை வெறுப்பவர்ளை விரும்பும் போது கீழே குறிப்பிடும் நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.நாம் வலிமை அடைகிறோம் :

நாம் விமர்சனங்களை தவிர்த்தால் தலைவன் ஆக முடியாது. நமது அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக , அவற்றை எதிர்கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை நிச்சயம் இருக்க வேண்டும்.

ஆழ் மனதை கட்டுப்படுத்தி தான் உடலுக்கு வெற்றியை தேடி தர வேண்டும். விமர்சனங்கள் நமக்கு கிடைத்த ஒரு பரிசு போல.. மக்கள் நம்மை கவனிக்கிறார்கள் என்பதே ஒரு சிறந்த விஷயம். எத்தனையோ பேரின் செயல்கள், கண்டும் காணாமல் இருக்க படும் போது நம் செயல்களுக்கு ஒரு எதிர்மறை விமர்சனமாவது கிடைப்பது நம் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.

கற்று கொள்ளுங்கள்:

நாம் செய்யும் எந்த ஒரு வேலையும் அதனால் ஏற்படும் தோல்வியும் தவறல்ல. அனைத்துமே அனுபவங்கள் மற்றும் பாடங்கள். உறவுகளில் விரிசல் ஏற்படும்போதும், பரீட்சை அல்லது தொழிலில் தோல்வி அடையும்போதும், நாம் மறுமுறை எதை செய்ய கூடாது என்பதை கற்று கொள்கிறோம், அனுபவத்தை போன்ற சிறந்த ஆசான் யாருமில்லை. வாழ்க்கையை போன்ற சிறந்த பாடம் வேறு ஏதும் இல்லை.

முயற்சித்து கொன்டே இருப்போம். விழுவதை பற்றிய நினைப்பு இன்றி.. குழந்தைகள் நடக்க கற்று கொள்ளும் போது பல முறை விழுந்து எழும். நாம் குழந்தைகளாக இருந்து தான் பெரியவர்களாக வளர்கிறோம். அதனை நினைவில் கொண்டு முயற்சித்து வெற்றி காண்போம்.

பணிவோடு இருங்கள் :

பணிவோடு இருப்பது எல்லாவற்றிலலும் சிறந்த ஒழுக்கமாகும்.ஒரு தலைவனுக்கு இந்த பணிவு மிகவும் முக்கியம். தலைவனை பார்த்து தொண்டர்களும் இந்த ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள். விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது பணிவு மிகவும் முக்கியம்.

விமர்சனங்கள் நம்மை நோக்கி வரும்போது, அதற்குள்ளேயே மூழ்கி விடுவதும், அதனை விட்டு விலகி போவதும் இரன்டுமே தவறானது. விமர்சனங்களுக்கு பெரிய இடம் கொடுக்காமல் இருப்பது சிறந்த செயலாகும்.

நீங்கள் அதிகாரம் செல்லுபவராக மாறுகிறீர்கள் :

ஒரு தலைவனாக நமது கருத்துக்களை வலியுறுத்தி கூறுவதாலும், அந்த கருத்தில் இருந்து பின்வாங்காமல் இருப்பதாலும், நம் பின்னால் நிற்பவரும் நம்மை பார்த்து அதே வழியில் நடக்க தொடங்குவார்கள்.

நம்மை நோக்கி வரும் விமர்சனங்களில் சில மட்டுமே ஆக்க பூர்வமாக இருக்கும். மற்றவை நம்மை பயமுறுத்தவும், பின்னடைவு கொள்ளவும் செய்பவையாக தான் இருக்கும். இவற்றை நாம் நமது மனதுக்குள் ஏற்றி வேண்டிய தேவை இல்லை.

விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள் . நல்லதோ கெட்டதோ ,அந்த விமர்சனங்கள் நாம் வளங்களோடு சிறப்பாக வாழ வாய்ப்புகளை பெற்று கொடுக்கும்.

No comments:

Post a Comment