Tuesday, April 1, 2014

பாஸிடீவ் திங்கிங்...

பாஸிடீவ் திங்கிங்...

டிஸ்கி : Fan ஓடாத ( UPS Down ) ஒரு ராத்திரி வேளையில் , மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் , கொசுவோடு கபடி விளையாடிட்டு இருக்கும் போது என் சிந்தனையில் குதிச்சது.. கரண்ட் கட் ஆகறதால எவ்ளோ நன்மைகள் இருக்கு தெரியுமா..!?

1. கரண்ட் பில் அதிகமா வராது.,

2. T v ஓடாது.., ஜவ்வு மிட்டாயில இருந்து கொஞ்ச நேரம் தப்பிச்சுக்கலாம்..!

3. குழந்தைங்க வெளிய போயி விளையாடுவாங்க.. உடம்புக்கு நல்லது தானே..!

4. நாம ரொம்ப Punctual-ஆ இருப்போம்.., கரண்ட் போறதுக்குள்ள வேலைகளை Correct-ஆ செய்யணுமில்ல...!

5. கடிகாரத்தை பார்க்காமலே Time தெரிஞ்சிக்கலாம்..,
  1. கரண்ட் போனா - 8 மணி
  2. கரண்ட் வந்தா - 9 மணி

6. போர் அடிக்குதுன்னு Books படிப்போம்.., General Knowledge வளரும்..!

7. நைட் கரண்ட் போனா.. வீட்லயே " Candle Light Dinner " சாப்பிடலாம்..

8. Fan ஓடாது., புழுக்கமா இருக்கும்., அதனால வியர்வை வெளியேறும்..
அது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டரே சொல்றார்ல..

9. மிக்ஸி., கிரைண்டர், வாஷிங் மெஷின் எதுவும் ஓடாது.. அதனால மாவாட்டறது,  துணி துவைக்கறது சட்டினி அரைக்கறது எல்லாம் உடம்புக்கு எக்ஸர்ஸைஸ் ( யார் உடம்புக்குன்னு கேக்க கூடாது.. யார் ஆட்டினா என்ன... உடம்புக்கு நல்லதுதானே ஹி., ஹி,,, )

என் husband கிட்ட " நீங்க ஒரு Point சொல்லுங்கன்னு " சொன்னேன். அப்ப அவர் சொன்னது...  10. கரண்ட் இல்லாததால., நீ Computer முன்னாடி உட்காராம.., என்கூட நாலு வார்த்தை பேசிட்டு இருப்ப...! இப்ப புரியுதா...

" வடையில ஓட்டை இருக்கேன்னு பீல் பண்ணாம.. ஓட்டையை சுத்தி வடை இருக்கேன்னு நினைச்சி  சந்தோஷப்படணும்...!!! "

இதுக்கு பேரு தான் பாஸிடீவ் திங்கிங்..!

No comments:

Post a Comment