கனவுகள் தரும் பலன்கள்
* சந்திரனை சூரியன் பிடிப்பதாக கனவு கண்டால் யோகம் தரும்.
* பழ மரங்கள், மலைப்பிரதேசம் போன்றவை கனவில் வந்தால் நன்மை அளிக்கும்.
* பழங்கள் அதிகமாக இருக்கும் மாமரம், புளிய மரம், காய்கள் நிறைந்த பாக்கு மரம், தென்னை மரம் கனவில் வந்தால் செல்வம் சேரும்.
* எதிலாவது ஏறுவது போல் கனவு கண்டால் உயர்நிலை பெறுவார்கள்.
* வெள்ளைப்பட்டு அணிந்த அழகான பெண்ணை கனவில் கண்டால் புகழ் கிடைக்கும்.
* அரசன், குதிரை, பசு, காளை போன்றவை கனவில் தோன்றினால் குடும்பம் மேன்மை பெறும்.
* இளம்பெண் தாமரை ஏந்தி கனவில் வந்தால் அதிர்ஷ்டம் வரும்.
* தேவர்களுடன் பேசுவதாகவும், அரசனுடன் இருப்பதாகவும் கனவு கண்டால் உயர்வு நிலையை அடைவார்கள்.
No comments:
Post a Comment