பதில் இங்கே ... இந்த பதிவை படித்து முடிக்கும்போது கண்டிப்பாக உங்களுக்கு ஒருபுதுவித அனுபவம், உணர்வு , வாழ்க்கையை பற்றிய பார்வை புதியதாய் இருக்கும்.இனிமேல் நீங்க பார்க்கும் உலக வாழ்க்கைமாறக்கூடும்.கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு ஒரு நல்ல ஒருபுத்துணர்ச்சியை கொடுக்கும். இன்று காலையில் ஒரு விபத்து நடந்தது எனது அப்பார்ட்மென்ட் அருகில் ..அப்போது மனதில் கொஞ்சம் வலித்தது ..ஏன்னா அவனை நம்பியிருக்கும் குடும்பம் ...அவன் கனவுகள் ....ஒரு நிமிடத்தில் சிதைந்து விட்டதே ... சரி நான் விசயத்துக்கு வர்றேன் ... பொதுவாக நான் இந்த வாழ்க்கை பற்றிய ஒரு பயிற்சி கொடுக்கும் போது தயவு செய்து கண்களை மூடி நான் சொல்வதை கேளுங்க என்று சொல்வேன் ( இப்போ நீங்க கண்ணை மூடினால் படிக்க முடியாது , ஆதலால் அமைதியாய் மனசு லேசாக இருக்கும் பொது படிக்கவும் ) என்னடா இவன் இப்படி சொல்றான்னு நினைக்காதீங்க பதிவைபடித்து முடிங்க வாழ்க்கை என்றால் என்ன? பதில் நிச்சயம். நீங்க அதிகாலை எழும் போது உங்களால எழ முடியல ... நீங்க உங்க வீட்ல , உங்க பெட்ரூம்ல படுத்து இருக்கீங்க ... உங்கள் அம்மா, மனைவி அல்லது உங்கள் அன்புக்கு உரியவங்க வந்து எழுப்புறாங்க முடியல .... நீங்க பேசுறது அவங்களுக்கு கேட்கல ... எல்லாரும் அழுறாங்க, உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் வராரு கைகளை புடிச்சி பார்த்து ஏதோ உங்க அப்பா/ அம்மா/ மனைவிகிட்ட சொல்றாரு.. நீங்க சொல்றது யாருக்கும் கேட்கல ... உங்களால அசைய முடியல ... ஒரே போன் மேல போன் ... சொந்தம் பந்தம் எல்லாம் வர்றாங்க , உங்க அத்தை மாமா, ஆபீஸ் மக்கள், பக்கத்து வீட்டு மக்கள் எல்லாரும் வராங்க ..எல்லாரும் கண்கள் வலிக்க அழுவுறாங்க..உங்களுக்கு ஒன்றும் புரியவில்லை உங்களுக்கு மாலைகள் போடுகிறார்கள் ..உங்க கட்டில் பக்கத்தில் உங்கள் அன்புமிக்க தம்பி/தங்கைகள் அம்மா அப்பா எல்லாரும் ஒரே சத்தம் ஒரேஅழுகை காரணம் உங்கள் உயிர் பிரிந்தாயிற்று .... பக்கத்துவிட்டுக்காரன் -" நல்ல மனுசன்யா தொந்தரவு செய்ததே இல்லை ... சின்ன வயசு" ... ஆபீஸ் மேனேஜர் -" நல்ல வேலை பார்ப்பான் இப்போ எவன வச்சி வேலை பார்த்து ப்ராஜெக்ட் முடிக்கிறது , இவனுக்கு தான் தெரியும் "... கடன்காரன் - "பாவி பய வாங்கின கடன தராம போய்ட்டான்" கடன் வாங்கினவன் - "நல்ல வேலை இவரு நமக்கு கொடுத்த கடன் யாருக்கும் தெரியாது" ... குடும்பம் -"நேத்து வர நல்ல தான் இருந்தார் வேலை வேலை என்று இருந்தாரு, நல்ல மனுஷன்". நேத்து காப்பி கேட்டு சண்டை போட்டு இப்படி காப்பி கூட குடிக்காம போயிட்டிங்களே... ஓர சோகம் நீங்கள் ஹெல்ப் செய்தவர்கள் உங்களை நல்லவர்கள் என்றும், நீங்கள் ஹெல்ப் செய்யாதவர்கள் உங்களை போய் தொலைஞ்சன் டா என்றும் சொல்வது ... உங்கள் காதில் விழுது.. உங்களை குளிக்க வைத்து மாலை போட்டு அப்படியே எல்லாரும் வந்து பார்த்து அழுத பின்பு உங்களை ஏற்றி கொண்டு சுடுகாட்டுக்கு போய் எரித்தோ புதைத்தோ உங்கள் வழக்க படி முடிந்தாயிட்டு .. அடுத்த நாள் காலை சொந்தம் பந்தம் எல்லாம் காலி.. உங்கள் வீடு , உங்கள் மனைவி, மக்கள், அப்பா, அம்மா, தம்பி, அண்ணன் ,தங்கை ...இவர்கள் மட்டும் உங்கள் விட்டு சென்ற நினைவுகளோட ... ரெண்டு நாள் கழித்து ...உங்கள் போட்டோ மாலை மாற்றி நடு வீட்டில் இருக்க.. தம்பி, உங்கள் மனைவி, மக்கள், அண்ணன், தங்கை, அக்கா எல்லாரும் அவர் அவர் வேலையை பார்க்க கிளம்பியாச்சு ... ஆபீஸ் போறவங்க ஆபீஸ் .... ஸ்கூல் காலேஜ் போறவங்க காலேஜ் ... நீங்கள் இல்லாமலும் உலகம இயங்கும் ... ஆபீஸ் கட்டிக்கொண்டு காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு இருந்த நீங்கள் ... உங்களுக்கு அதிர்ச்சி தான் ...நீங்க இல்லாம உலகம சுற்றும் ... நீங்க இல்லாம மக்கள் வேலையை செய்வார்கள்... அப்போ அப்போ உங்கள் நண்பர்கள், உங்கள் உறவுகள் உங்கள் நினைவுகளை அதுவும் பசுமையான நினைவுகளை சுமப்பார்கள் ... உங்கள் மனைவி அப்பா அம்மா, பிள்ளைகள், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டும் ஒரு மாதமாவது உங்கள் நினைவில் இருந்து வருந்துவார்கள் ...அதுவும் நீங்கள் அவர்களோட வாழ்ந்த விதம் பொறுத்து ... ரெண்டு தலை முறைக்கு அப்புறம் உங்கள் பெயர் சொன்னால் யாருக்கும் தெரியாது அப்படி ஒருத்தர் இருந்ததுக்கு அடையாளம் என்று ஒன்னும் இருக்காது. எனவே ... நம்ம உயிர் நம்மளிடம் இருக்கும் வரை ... நல்லதை செய் .. நாலு பேரை சந்தோஷ படுத்து ... நல்ல நல்ல காரியங்களா பண்ணு ..வேலை வேலை வேலை என்று மட்டும் சுற்றாமல் உங்கள் மனைவி, அம்மா, அப்பா,மக்கள் ( உங்கள் பிள்ளைகள்) , நெருங்கிய நண்பர்கள், தம்பி, அண்ணன்,அக்கா, தங்கை ... எவர்களோட நேரம் ஒதுக்கு ... அன்பாய் இருக்கு நல்ல நினைவுகளை கொடு ... அன்பு காட்டு ... உணர்ச்சி இல்லாமல் உன்னோட அன்பை கொண்டு செல்லாதே ! ....உனது அன்பு எதையும் எதிர் பார்க்காத அன்பா இருக்கட்டும் ... நீ இறந்தால் ரெண்டு வாரம் தான் துக்கம் ... அப்புறம் வருடம் ஒருமுறை படையல் ... அதுவும் நீ இறந்த அன்று .. உன்னோட நல்ல நினைவுகள்... நீ இல்லாத அந்த இடைவழியை குறைக்கும் ... காதல் செய் ... உன் காதலி இடம் மட்டும் அல்ல ... அனைவரிடமும் அன்பு செய் ... நீ இல்லாமலும் இருப்பாய் :-)
No comments:
Post a Comment