Friday, July 26, 2013

வெற்றி உங்களுக்குத்தான்


வெற்றி உங்களுக்குத்தான். இந்த சமூகத்தில் நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு வியாபாரம் செய்வபவராக இருக்கலாம், ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவராக இருக்கலாம், ஒரு அதிகாரியாக இருக்கலாம், ஆனால் வெற்றி என்பது உங்களுக்கு எல்லா விசயத்திலும் தேவை.

வெற்றி தேவை என்றால் உங்களுடைய எண்ணம செயல் பேச்சு எல்லாவற்றிலுமே வெற்றி பிரதி பலிக்க வேண்டும். ஆனால் நடை முறையில் பார்த்தால் இது சாத்தியம் ஆகுமா?

முதலில் குறைந்த பட்சம் உங்களுடைய மனதளவில் நீங்கள் வெற்றி அடைந்த மாதிரி நினைக்க வேண்டும். அப்படி நினைத்தால்தான் அது உங்களது எண்ணத்தில் பிரதிபலிக்கும். எண்ணத்தில் பிரதி பலித்தால் அது உங்களுடைய செயலில் பிரதி பலிக்கும். செயலில் பிரதி பலித்தால் அது காரியத்தில் பிரதி பலிக்கும். காரியத்தில் பிரதி பலித்தால் அப்புறம் என்ன அந்த காரியம் வெற்றிதான்.

மனித மனதை வசபடுத்த வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். நம்முடைய கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் கஷ்டமான காரியமாகும். வெற்றியடைந்து விடுவோம் என மனதளவில் நினைக்க தொடங்கினால் கூடவே இன்னொரு எண்ணமும் உதயமாகும். அது என்னவென்றால் நம்மால் வெற்றியடைய முடியுமா என்று?

உடனே என்னவாகும் பரம பதத்தில் பாம்பு கொத்தியது போல சரேலென்று வெற்றி சிந்தனையிலிருந்து அதல பாதாளத்திற்கு வந்து விடுவோம்.
அப்புறம் என்ன வெற்றியடைவோம் என்ற நம்பிக்கை காற்றோடு பறந்துவிடும்.

ஆனால் மனதை நம் வசபடுத்தி விட்டோம் என்றால் வெற்றி சிந்தனையும் நம் வச படுத்தி விடலாம். மனதை வச படுத்துவது என்பது அவ்வளவு சாதாரண் விசயமா? அதற்க்கு பயிற்சி வேண்டும். என்ன பயிற்சி தேவை?
தியானம் அறிய பயிற்சியின் மூலம் ஒருவர் தன்னுடைய மனதை கட்டு படுத்தலாம். அதாவது உட்கார் என்றால் உட்கார வேண்டும் , நில் என்றால் நிற்க வேண்டும் இதை நினைக்க வேண்டும் என்றால் அதை மட்டும்தான் நினைக்க வேண்டும் அதை நினைக்காதே என்றால் அதை நினைக்க கூடாது. இது போன்ற பல விசயங்களை தியானம் என்னும் அறிய பயிற்சியின் மூலம்தான் மனதினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

மனதை கட்டு பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டால் பிறகு வெற்றி என்பது உங்களுக்குத்தான்.

No comments:

Post a Comment