Wednesday, July 24, 2013

சகல மங்களங்களும் பெருக..

சகல மங்களங்களும் பெருக..

பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய
காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய
(மீனாட்சி ஸுந்தரேச்வர ஹாலாஸ்யநாத ஸ்தோத்திரம்) 

பொதுப்பொருள்: 

பக்தர்களுடைய மனக் கவலையைப் போக்கி அருள்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம். பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே, பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே, காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே, பிர மதகணங்களுக்கு ஈச்வரரானவரே, மூவுலகங்களையும் படைத்தவரே, ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே, மீனாட்சி சுந்த ரேஸ்வரா, நமஸ்காரம். 

(ஒவ்வொரு சனிப் பிரதோஷத்தன்றும் இத்துதியை பாராயணம் செய்தால் சிவ அபசாரம் நீங்கி சகல மங்களங்களும்  பெருகும்.)

No comments:

Post a Comment