- கேள்வி: எவன் சுகமாக வாழ்கிறான்?
- பதில்: செல்வம் உடையவன்.
- கேள்வி: செல்வம் என்பது யாது?
- பதில்: எது நமக்குப் பிரியமானதோ, அதுவே நமக்குச் செல்வம்.
- கேள்வி: உலகில் எல்லா இன்ப, சுகங்களுக்கும் காரணம் எது?
- பதில்: புண்ணியச் செயல்கள்
- .
- கேள்வி: துன்பத்துக்குக் காரணம் எது?
- பதில்: பாவச் செயல்கள்.
- கேள்வி: எல்லாவிதச் செல்வங்களும் யாருக்குக் கிடைக்கும்?
- பதில்: பக்தியுடன் பகவான் சங்கரனை பூஜிப்பவருக்கு.
- கேள்வி: எவன் மேன்மேலும் வளர்ச்சியுறுகிறான்?
- பதில்: அடக்கம் உடையவன்.
- கேள்வி: எவன் வளர்ச்சி குன்றி வருந்துகிறான்?
- பதில்: திமிர் அல்லது அகங்காரம் கொண்டவன்.
- கேள்வி: எவன் நம்பத் தகாதவன்?
- பதில்: அடிக்கடி பொய் பேசுகிறவன்.
- கேள்வி: எந்த சூழ்நிலையில் பொய் பேசுவது பாவச் செயல் ஆகாது?
- பதில்: தர்மத்தைக் காக்கச் சொல்லப்படும் பொய்.
- கேள்வி: எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தர்மம் எது?
- பதில்: அவரவர் குலத்தில் தோன்றிய முன்னோர்களும் ஆசார சீலர்களும் கடைப்பிடித்த தர்மமே.
- கேள்வி: சாதுக்களுக்கு பலம் எது?
- பதில்: தெய்வம்.
- கேள்வி: சாது என்பவன் யார்?
- பதில்: எதிலும் எப்போதும் திருப்தியோடு உள்ளவன்.
- கேள்வி: தெய்வம் என்பது யாது?
- பதில்: ஒருவனால் செய்யப்பட்ட நல்ல செயல்கள்.
- கேள்வி: ஸுக்ருதி என்பவன் யார்?
- பதில்: நல்லவர்களால் போற்றப்படுபவன்.
- கேள்வி: இல்லறத்தில் உள்ளவனுக்கு உண்மை நண்பன் யார்?
- பதில்: அவனுடைய மனைவி.
- கேள்வி: இல்லறத்தான் யார்?
- பதில்: யாகங்கள் செய்கிறவன்.
- கேள்வி: யாகங்கள் யாவை?
- பதில்: வேதங்களில் சொல்லப்பட்டவையும் மனித சமூகத்துக்கு நன்மை அளிப்பவையுமான செயல்கள்.
- கேள்வி: யாருடைய செயல்கள் பயனுள்ளவை?
- பதில்: நல்ல அனுஷ்டானங்களை உடையவனும், வேதத்தில் கூறப்பட்டபடி நடப்பவனும்.
- கேள்வி: அவனுக்கு பிரமாணம், வழிகாட்டி எது?
- பதில்: வேதமே ஆகும்.
- கேள்வி: அனைவராலும் தாழ்த்தப்படுபவன் யார்?
- பதில்: வேதநெறிப்படி செயல் ஆற்றாதவன்.
- கேள்வி: எவன் உண்மையிலேயே பாக்யசாலி?
- பதில்: முற்றும் துறந்தவன்.
- கேள்வி: எவன் மதிக்கத்தக்கவன்?
- பதில்: புலமையும் சாதுத் தன்மையும் ஒருங்கே கொண்டவன்.
- கேள்வி: எவனுக்கு நாம் பணிவிடை செய்யலாம்?
- பதில்: தானம் கொடுக்கும் தாராளமனம் படைத்தவனுக்கு.
- கேள்வி: கொடைக்குணம் படைத்தவன் என்பவன் யார்?
- பதில்: உதவி நாடி வருபவனை திருப்திபடுத்துகிறவன்.
- கேள்வி: உடலைப் பெற்றவர்களுக்குச் சிறந்த பாக்கியம் எது?
- பதில்: உடல் நலம்.
- கேள்வி: உழைப்பின் பலனை முழுமையாகப் பெறுபவன் யார்?
- பதில்: பயிர்த் தொழில் செய்பவன்.
- கேள்வி: யாரை பாவங்கள் அணுகுவதில்லை?
- பதில்: ஜபம் செய்கிறவனை.
- கேள்வி: முழுமையான மனிதன் என்று யாரைச் சொல்லலாம்?
- பதில்: மக்கட் பேறு பெற்றவனை.
- கேள்வி: செயற்கரிய செயல் எது?
- பதில்: மனத்தை அடக்கி நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது.
- கேள்வி: பிரும்மசரியம் உடையவன் என்று யாரைக் கூறமுடியும்?
- பதில்: தன்னுடைய வீரியத்தை வீணாக்காமல் கட்டுப்படுத்தி தியானத்தின் மூலம் அதை நல்ல முறையில் பயன்படுத்துபவனை.
- கேள்வி: உலகுக்குத் தலைவன் யார்?
- பதில்: சூரியன்.
- கேள்வி: அனைவருக்கும் வாழ்வைக் கொடுப்பது எது?
- பதில்: மழை.
- கேள்வி: சூரன் என்று யாரைக் கூறலாம்?
- பதில்: பயந்தவனைக் காப்பவனை அல்லது பயத்திலிருந்து மற்றவர்களைக் காப்பவனை.
- கேள்வி: நம்மைக் காப்பவர் யார்?
- பதில்: நம்முடைய குரு.
- கேள்வி: ஜகத்குரு என்று யாரைக் கூறலாம்?
- பதில்: பரமசிவனை.
- கேள்வி: ஞானம் யாரிடமிருந்து கிடைக்கும்?
- பதில்: பரமசிவனிடமிருந்து.
- கேள்வி: எவ்வாறு நாம் மோட்சத்தைப் பெறலாம்?
- பதில்: முகுந்தனிடம் பக்தி செய்வதன் மூலம்.
- கேள்வி: முகுந்தன் என்பவன் யார்?
- பதில்: உலக மாயை அல்லது அவித்யையில் இருந்து நம்மை விடுவிக்கிறவன்.
- கேள்வி: அவித்யை என்பது யாது?
- பதில்: ஆத்மாவைப் பற்றிய அறிவு அல்லது நினைப்பு இல்லாமை.
- கேள்வி: யாருக்குத் துயரம் வராது?
- பதில்: கோபம் கொள்ளாதவனுக்கு.
- கேள்வி: சுகம் என்பது எது?
- பதில்: மன நிறைவு.
- கேள்வி: அரசன் என்பவன் யார்?
- பதில்: மக்களை மகிழ்விப்பவன்.
- கேள்வி: யாரை நாய்க்கு ஒப்பிடலாம்?
- பதில்: நீசர்களை அண்டி, அவர்களுக்குச் சேவகம் செய்பவனை
- .
- கேள்வி: மாயாவி என்பவன் யார்?
- பதில்: பரமேஸ்வரன்.
- கேள்வி: இந்திரஜாலம் போல் தோற்றம் அளிப்பது எது?
- பதில்: இந்தப் பிரபஞ்சம்.
- கேள்வி: கனவுத் தோற்றத்துக்கு நிகரானது எது?
- பதில்: விழித்திருக்கும்போது நடைபெறும் நிகழ்ச்சிகள்.
- கேள்வி: ஸத்யமானது, உண்மையானது எது?
- பதில்: பிரும்மம்.
- கேள்வி: பொய்யான தோற்றம் எது?
- பதில்: உண்மை அறிவால் போக்கக் கூடிய தவறான எண்ணம்.
- கேள்வி: பயனற்றது எது?
- பதில்: முயலுக்குக் கொம்பு உண்டா என்பது போன்ற வீண் சர்ச்சைகள்.
- கேள்வி: விவரித்துச் சொல்ல முடியாதது எது?
- பதில்: மாயை (பொய்த் தோற்றம்).
- கேள்வி: நாமாக நினைத்துக் கொண்டிருப்பது எது?
- பதில்: ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்ற எண்ணம்.
- கேள்வி: பாரமார்த்திகம் அல்லது முற்றும் உண்மையானது எது?
- பதில்: அத்வைதம், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அறிவு.
- கேள்வி: அறியாமை எப்போது உண்டாயிற்று?
- பதில்: அது அனாதியாய் உள்ளது; தோன்றிய காலம் தெரியாது.
- கேள்வி: உடலைக் காப்பது எது?
- பதில்: அவரவர் செய்த நல்வினை, தீவினைகள். நாம் ஜென்ம ஜென்மாந்திரத்தில் செய்த பாவச் செயல்தான் அன்னத்தையும் கொடுத்துஆயுளையும் வளர்க்கச் செய்கிறது.
- கேள்வி: வழிபாட்டுக்கு உரியவர் யார்?
- பதில்: காயத்ரி மந்திரம், சூரியன், அக்னி மூன்றிலும் அடங்கியுள்ள பரமேச்வரனே.
- கேள்வி: காயத்ரி, சூரியன், அக்னி ஆகியவற்றில் அடங்கி நிற்பது எது?
- பதில்: பெற்ற தாய்.
- கேள்வி: நம் பூஜைக்குரியவர் யார்?
- பதில்: தந்தை.
- கேள்வி: எல்லா தெய்வங்களையும் உள்ளடக்கி இருப்பவன் யார்?
- பதில்: கல்வியும் கர்மானுஷ்டானங்களும் நிறைந்தவர்கள்.
- கேள்வி: குல நாசத்துக்குக் காரணம் யாது?
- பதில்: சாதுக்கள் மனம் வருந்தும்படி செய்யும் செயல்.
- கேள்வி: யாருடைய சொற்கள் பொய்க்காதவை?
- பதில்: சத்யம், மௌனவிரதம், சாந்தி ஆகியவற்றை விரதமாக மேற்கொண்டவர்களின் சொற்கள்.
- கேள்வி: பிறவிக்குக் காரணம் யாது?
- பதில்: சிற்றின்பத்தில் ஏற்படும் பற்று.
- கேள்வி: நமது மேல் பிறப்பு என்பது எது?
- பதில்: பிள்ளையாகப் பிறத்தல்.
- கேள்வி: தவிர்க்க முடியாதது எது?
- பதில்: மரணம்.
- கேள்வி: எப்படிக் காலடி எடுத்து வைக்க வேண்டும்?
- பதில்: நன்றாகப் பார்த்து, கவனித்து, சுத்தமான இடமென்று தெரிந்து கொண்டு.
- கேள்வி: அன்னதானம் பெறத் தகுந்தவன் யார்?
- பதில்: நல்ல பசியோடு இருப்பவன்.
- கேள்வி: உலகில் யாரை நாம் பூஜிக்க வேண்டும்?
- பதில்: பகவானின் அவதாரங்களை; அவதார வடிவங்களில் உள்ள மூர்த்தங்களை.
- கேள்வி: பகவான் யார்?
- பதில்: சங்கரனாகவும், நாராயணனாகவும் உள்ள பரம்பொருள்.
- கேள்வி: பகவானிடத்தில் செலுத்தும் பக்திக்குப் பயன் என்ன?
- பதில்: மாறாத, கலப்பற்ற ஆனந்தம்.
- கேள்வி: மோட்சம் என்பது என்ன?
- பதில்: அவித்யை நீங்குதல்.
- கேள்வி: எல்லா வேதங்களுக்கும் உற்பத்தி இடம் எது?
- பதில்: ஓம் என்னும் பிரணவம்.
என் கனவுகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில் … பார்த்ததை, கேட்டதை, மனதில் தோன்றியதை பகிர்ந்து கொள்ள... தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே ... தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.
Wednesday, July 24, 2013
இன்ப, துன்பத்துக்குக் காரணம் எது?
Labels:
மன அமைதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment