உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நீங்கள் தோந்தெடுத்து சொல்கிற வார்தை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அது எவ்வாறு மற்றவர்கள் மனதை உங்கள்பால் ஈர்க்கச் செய்கிறது என்பதை உணர முடியும்.
சில வார்த்தைகள் உறவுக்கு பாலம் போடும். அந்த வார்த்தைகள் உண்மையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். ஒற்றுமையை உண்டாக்கும். தன்னம்பிக்கையை வளர்க்கும். மனதளவில் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உண்டாக்கும்.
ஆரோக்கியமான சூழலும் அன்யோனியமும் அதிகமாகும். நெருக்கத்தையும், பாசத்தையும் பெருக்கும். பிரியத்தையும், விருப்பத்தையும் அதிகப்படுத்தும். நேர்மறையான எண்ணங்களையும், அதனால் மேலான பலன்களையும் உண்டாக்கும். இந்த வார்த்தைகள் நம்பிக்கையை ஊட்டி வெற்றிக்கு வழிகாட்டும்.
சில வார்த்தைகள் உறவுக்கு வேலி போடும். இவைகள் ஒற்றுமையை குலைக்கும். வெறுப்பை உண்டாக்கும். அதிருப்தியை அதிகப்படுத்தும், மனக்காயங்களை உருவாக்கும். பணி நேரத்திலே அழுத்தங்களும், மனச்சோர்வுகளும் உருவாகும். ஈடுபாட்டை குறைக்கும். வெற்றிகளுக்கு விலங்கு போடும். வினைகள் உங்களுக்கு பரிசாகத்தரும். இதனால் இழப்புகளுடன் கூடிய எதிர்மறையான விளைவுகள் உண்டாகும்.
உங்களிடம் பணிபுரிபவர்களிடம் இந்த வேலையை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை செய்து முடித்தே தீர வேண்டும். இன்று மாலைக்குள் இதை முடித்துவிட்டு என்னிடம் பேசுங்கள் என்று கட்டளையிடுகிற அதிகாரதோரணைக் காட்டுகிற, ஆணைணயிட்டுப்பேசுகிற, அழுத்தமான வார்த்தைகளை உபயோகிக்கும்போது அந்த வார்த்தைகள் உங்களுக்கு முன்னால் இருப்பவர்கள் முகத்தில் அல்லது மனத்தில் எந்த மாற்றத்தை உண்டாக்குகிறது என்பதை பார்க்க வேண்டும்.
இந்த வார்த்தைகளை கேட்டு அவர்கள் அதிர்ச்சியுற்றார்களா…? அல்லது உடைந்து போனார்களா…? அல்லது கோபப்பட்டார்களா…? அல்லது ஏதாவது எதிர்வினை ஆற்றினார்களா…? என்பதை பார்க்க வேண்டும். இதே வார்த்தைகளை உங்கள் மேல் அதிகாரிகள் உங்களிடம் உபயோகித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். அந்த வார்த்தைகள்தான் உறவுகளுக்கிடையே சுவர்களை எழுப்புகின்றன.
உங்களிடம் பணிபுரிவர்களிடம் “நான் சொல்லுகின்ற யோசனைகளை யோசித்துப்பார், உன்னால் அதை உறுதியாக செய்ய முடியும். உன்னால் மட்டுமே செய்ய முடியும். வேறு ஒருவரிடம் இந்தப்பணியைத்தர விருப்பம் இல்லை. இந்தப்பணியை முடிக்கிற திறமை உன்னிடம் மட்டுமே இருக்கிறது. உன்னைத்தவிர யாரும் செய்ய முடியாது என்று நம்புகிறேன். முயற்சித்துப்பார், இன்று மாலைக்குள் வேலை முடியும்” என்று அனுகூலமான, மென்மையான, நம்பிக்கையூட்டுகிற ஆனால், அழுத்தத்துடன் கூடிய வேண்டுகோள்களை முன்வையுங்கள். அந்த வேலையை அவர்கள் எளிதாகவும் விருப்பத்தோடும், மகிழ்ச்சியோடும் செய்வார்கள்.
No comments:
Post a Comment