Infinity என்ற கருத்து நம்முடைய வாழ்க்கையில் பல இடங்களில் சம்பந்தப்படக்கூடிய ஒரு கருத்தாகும். ஆன்மீகத்திலும், தத்துவத்திலும் மற்றும் விஞ்ஞானம், கணிதம் என்ற பல துறைகளில் Infinity என்ற இந்தக் கருத்து பயன்படுகிறது. இதை வெறும் தியரிட்டிக்கல் கருத்தாக விஞ்ஞானத்திலும், தத்துவத்திலும் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அது நம் நடைமுறை வாழ்க்கைக்கு உதவாது. நம் நடைமுறை வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கும், நம்முடைய சாதிக்கும் திறனை அதிகரித்துக் கொள்வதற்கும் இந்த Infinity என்ற கருத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
Infinityஐ நம் நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வருவதற்குப் பகவானும், அன்னையும் வகுத்துக் கொடுத்த பூரணயோக நெறி முறைகள் மிகவும் உதவியாக இருக்கும். முதலில் Infinity என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். Infinity என்றால் வரம்போ, முடிவோ இல்லாத நிலையைக் குறிக்கிறது. அதாவது ஒரு ஆரம்பமோ, முடிவோ இல்லாத நிலையை Infinite condition என்கிறோம். இந்த Infinity காலத்திற்கும் பொருந்தும், இடத்திற்கும் பொருந்தும். உதாரணமாகப் பிரபஞ்சத்தை அளவில் Infinity என்று விஞ்ஞானம் வர்ணிக்கிறது. அதாவது பிரபஞ்சம் இங்கேதான் தொடங்குகிறது, இங்கேதான் முடிகிறது என்று நாம் ஒரு ஆரம்பத்தையோ, முடிவையோ காட்ட முடியாது. எவ்வளவு பெரிய ற்ங்ப்ங்ள்ஸ்ரீர்ல்ங்ஐ வைத்துப் பார்த்தாலும் அது விரிந்து கொண்டே போகிறது, முடிவே தெரியவில்லை என்று தான் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இட அளவில் பிரபஞ்சம் Infinityஆக இருப்பது போல் கால அளவிலும் அதற்கு ஒரு ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அதாவது, பிரபஞ்சம் இந்தக் கால கட்டத்தில்தான் தொடங்கியது என்றோ, இந்தக் கால கட்டத்தில்தான் பிரபஞ்சத்தின் ஆயுள் முடிகிறது என்றோ நாம் எதையுமே குறிப்பிட்டுக் காட்ட முடியாது. ஆனால் நம்முடைய வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும் பார்த்தால் இடம் மற்றும் வடிவ ரீதியாகவும் சரி, கால ரீதியாகவும் சரி எல்லாவற்றிற்கும் வரையறைகள் உண்டு. ஆரம்பமும் முடிவும் உண்டு. உதாரணமாக பூமி நமக்குப் பிரம்மாண்டமாகத் தெரிகிறது. ஆனால் அதனுடைய சுற்றளவிற்கு ஒரு Infinity உண்டு. அதாவது 24091 மைல் 38545 ஃம். இவ்வளவுதான் பூமியினுடைய சுற்றளவு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அம்மாதிரியே பூமியினுடைய வயதை 4540 கோடி வருடங்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். கடல் நம் பார்வைக்குப் பிரம்மாண்டமாக தெரிந்தாலும் அதற்கும் ஒரு எல்லையும் அளவும் உண்டு. கவிஞர்கள் இமயமலை போன்ற மலைகளை வானளாவிய உயர்ந்த மலைகள் என்று வர்ணிப்பதுண்டு. ஆனால் இமயமலையின் உச்சிக்கும் ஒரு வரம்பு உண்டு. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை 27,000 அடி என்று கணக்கிட்டுள்ளார்கள். இம்மாதிரியே உலகத்தில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் அதாவது செடி, கொடிகள், மரங்கள், பிராணிகள் மற்றும் மனிதன் உட்பட முடிவில்லா ஆயுள் எதற்கும், எவர்க்கும் கிடையாது. பெரும்பாலானவர்களுடைய ஆயுள் 100 வயது எட்டுவதற்குள்ளேயே முடிந்து விடுகிறது. 100ஐ தாண்டிப் போகின்றவர்கள் குறைவு.
Infinity என்பது வரம்பற்ற ஒரு நிலை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் அதனுடைய அடுத்த சிறப்பம்சமாக Infinityயின் குணாதிசயங்களை உணர்ந்த மேதைகள் என்ன சொல்கிறார்கள் என்றால், நாம் கூட்டினாலும் சரி, கழித்தாலும் சரி, பெருக்கினாலும் சரி, வகுத்தாலும் சரி, Infinityஆக இருக்கின்ற எந்த ஒரு விஷயமும் அதிகரிக்கவும் செய்யாது, குறையவும் செய்யாது என்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நிலையை நம்மால் கற்பனை செய்வது கூட கடினம். நம்மிடம் பத்தாயிரம் ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதோடு 2000 சேர்த்தால் அது 12,000மாகும். ரூ.2000 எடுத்து செலவு செய்தால் எட்டாயிரமாகக் குறையும். 3 மடங்கு பெருகினால் 30,000மாகும். நாலு பேருக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்தால் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் 2500தான் கிடைக்கும். ஆக பணம் என்று எடுத்துக் கொண்டால் இப்படி அது கூடுவதையும் குறைவதையும் நாம் கண்ணால் பார்க்கிறோம். நம்முடைய அறிவை எடுத்துக் கொண்டால் +2 படித்த மாணவன் ஒருவன் கல்லூரிக்கு மேற்படிப்புக்குச் சென்றான் என்றால் அவன் அறிவு வளரும். ஆனால் அதே சமயத்தில் தன்னுடைய அறிவை நாலு பேரோடு பகிர்ந்து கொண்டான் என்றால் அதனால் அது குறையாது. நாலு பேரோடு நம்முடைய பணத்தைப் பகிர்ந்தால் அது குறைகிறது. ஆனால் எத்தனை பேரோடு நம்முடைய அறிவைப் பகிர்ந்தாலும் அது குறையாது. அதாவது நம்முடைய அறிவு என்பது பணத்தைவிட Infinity தன்மை அதிகம் கொண்டதாக இருக்கிறது. இப்படி அறிவைக் கூட்டினால் அது வளர்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இப்படி எவ்வளவு தான் கூட்டினாலும் நம்மால் அதனுடைய அளவை அதிகரிக்க முடியாது என்ற நிலையில் ஒன்று இருக்கிறது என்றால் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? அது தான் Infinity. இப்படிப்பட்ட Infinity நிலையில் இறைவன் ஒருவன் தான் இருக்கிறான். இறை ஜீவியத்தை நம்மால் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது, பெருக்கவும் முடியாது, வகுக்கவும் முடியாது. இப்படிப்பட்ட சிறப்புக் கொண்ட வேறு எந்த விஷயத்தையும் நம்முடைய பூவுலகிலோ, இயற்கையிலோ, சமூகத்திலோ, அல்லது நம்முடைய அன்றாட வாழ்க்கையிலோ நம்மால் பார்க்க முடிவதில்லை என்பதால் Infinityயினுடைய இப்படிப்பட்ட சிறப்பம்சத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.
ஆனால் பகவான் மற்றும் அன்னையும் என்ன சொல்கிறார்கள் என்றால் ஆன்மா Infinity ஆகவும் வரம்பற்றதாகவும் இருக்கிறது என்கிறார்கள். அதாவது அளவிலும் சரி, அதனுடைய ஆற்றலிலும் சரி, அது அளவு கடந்ததாகத்தான் இருக்கிறது. இந்த அளவுகடந்த தன்மை என்பது ஆன்மாவினுடைய முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும். சச்சிதானந்தம் என்பது ஒரு உயர்ந்த ஆன்மீக நிலை. சச்சிதானந்தத்தில் மூன்றாவது அம்சமாக இருப்பது ஆனந்தம். இந்த ஆனந்தம் எப்படி வந்திருக்கிறது என்பதற்குப் பகவான் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆன்மாவினுடைய வரம்பற்ற நிலை எதற்கும் கட்டுப்படாத ஒரு வரம்பற்ற சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது என்று சொல்கிறார். அந்தச் சுதந்திரம்தான் அந்த ஆனந்தத்தை வழங்கியிருக்கிறது என்று சொல்கிறார். அவர் சொல்வதைப் பார்த்தால் Infinityயினுடைய objective expression அதாவது வெளி வெளிப்பாடு சுதந்திரமாகவும் அதே சமயத்தில் subjective expression அதாவது உள் வெளிப்பாடு ஆனந்தமாகவும் தெரிகிறது என்கிறார்.
அளவு கடந்த சுதந்திரம் ஏன் அளவு கடந்த ஆனந்தத்தை தருகிறது என்று புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நம்முடைய சுதந்திரம் எந்த நிலையில் இருக்கிறது, அதனால் நம் சந்தோஷம் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறது என்பதை இறைவனுடைய சுதந்திரத்தோடும், சந்தோஷத்தோடும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும். பூவுலகில் பிறக்கின்ற எந்த ஒரு மனிதனுக்கும் முழுச் சுதந்திரம் கிடையாது. அவன் பிறந்த நாள் முதல் கண்ணை மூடும் இறுதி நாள் வரையிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும். இந்த எண்ணற்ற கட்டுப்பாடுகளும், வரம்புகளும் நம்முடைய சுதந்திரத்தைப் பெருமளவு குறைத்து விடுகின்றன. நம்முடைய உடம்பின் தேவைகளை நாம் மீறி நடக்க முடியாது. நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் நாம் வேலை செய்வதற்கு உடம்பில் தெம்பிருக்காது. சிறுவர், சிறுமியராய் இருக்கின்ற அந்தப் பள்ளிப் பருவத்தில் அவர்கள் இஷ்டம் போல விளையாடிக் கொண்டிருக்க முடியாது. தினமும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று குடும்பமும் சமூகமும் நிர்பந்தப்படுத்துகிறது. 20 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி அந்த வயதிற்கு உண்டான பல்வேறு நிர்பந்தங்களைச் சமூகம் திணிக்கிறது. ஆணாக இருந்தால் அவன் ஒரு வேலை தேடிக் கொண்டு உழைத்துச் சம்பாதிக்க வேண்டும். வேலை செய்ய இஷ்டமில்லை, சும்மா இருக்க விரும்புகிறேன் என்று சொன்னாலும் சமூகம் அவரைச் சும்மா விடுவதில்லை. ஆனால் ஆண்டவனை இப்படி யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது. அவர் இஷ்டப்பட்டால் வேலை செய்வார், இல்லாவிட்டால் அவர் அமைதியாக இருப்பார். அவரைக் கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. ஆண்களுக்கு இருக்கின்ற சொற்ப சுதந்திரம் கூட பெண்களுக்குக் கிடையாது. பெண்கள் விரும்புகிறார்களோ இல்லையோ கல்யாண வயதை எட்டிவிட்டால் அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற இடத்தில் சமூகம் அவர்களை வைத்திருக்கிறது. திருமண வாழ்க்கையில் எனக்கு நாட்டமில்லை, ஆன்மீகத்தில் தான் ஈடுபாடு இருக்கிறது என்று சொல்லும் பெண்களை, அப்பெண்களின் குடும்பத்தால் சுதந்திரமாகச் செயல்பட விட முடிவதில்லை. ஆக, பெண் என்றால் திருமணமாகி, ஓரிரு குழந்தைகளுக்குத் தாயாகி, அதற்குப் பிறகு பேரப்பிள்ளைகளைப் பார்த்துவிட்டுத்தான் கண்ணை மூட வேண்டும் என்ற பெரிய கட்டுப்பாட்டிற்குள்தான் பெண்கள் சமுதாயம் இருக்கிறது.
திருமணம் ஒரு பெரிய கட்டுப்பாடு என்றால், வருமானம் அது தனக்கே உண்டான பல்வேறு கட்டுப்பாடுகளை நம்மேல் திணிக்கிறது. தான் விரும்புகின்ற வருமானத்தைப் பார்ப்பவர்களே மிகவும் குறைவு. மனதில் இலட்ச ரூபாய் வருமானம் இருக்கும் பொழுது கையில் 10,000 அல்லது 15,000 வருமானத்தைப் பார்ப்பவர்கள் தான் அதிகம். தான் ஆசைப்படுகின்ற வருமானம் கிடைக்காதபட்சத்தில் தான் விரும்புகின்ற மாதிரியெல்லாம் செலவு செய்ய எவராலும் முடியாது.
தனக்கு என்ன வருமானமோ அதற்குண்டான செலவைத் தான் ஒருவரால் செய்து கொள்ள முடியும். கார் வைத்துக் கொள்ள ஆசையாக உள்ளது, ஆனால் இருக்கின்ற வருமானத்தில் two wheeler தான் வைத்துக் கொள்ள முடியும் என்றால் அப்படிப்பட்ட நிலையில் உள்ள மனிதர் காரை மறந்துவிட்டு two wheelerல் தான் போகப் பழகிக் கொள்ள வேண்டும்.
திருமணம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வருமானம் சில நிர்பந்தங்களைத் திணிக்கிறது என்றால், குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் மேலும் சில நிர்பந்தங்களை விதிக்கின்றன. பிள்ளைகளாக இருந்தால் பெற்றோர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இளம் பிள்ளைகள் அவர்கள் இஷ்டப்படி எல்லாம் பெற்றோருக்கு அடங்கியிருக்காமல் செயல்பட முடியாது. திருமணமான பல பெண்கள் கணவனுடைய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் குடும்பம் நடத்த முடியும். அவர்கள் இஷ்டப்படியெல்லாம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது. வேலை செய்கின்ற ஒரு ஆண்மகனுக்கு அவனுக்கு மேல் ஒரு மேலதிகாரி இருந்தால் அவர் சொல்லுகின்றபடிதான் வேலை செய்ய வேண்டுமே ஒழிய, இவர் இஷ்டப்படி வேலை செய்ய முடியாது. அரசாங்கத்தின் சட்ட திட்டங்களையும் குடிமக்களால் மீறவும் முடியாது. Licence வாங்காமல் வண்டி ஓட்ட முடியாது, கட்ட வேண்டிய வரிகளைக் கட்டாமல் இருக்க முடியாது, Town Planning Authorityஐ மீறி நம் இஷ்டத்திற்கு வீடு கட்டிக் கொள்ள முடியாது. Traffic விதிமுறைகளை மதிக்காமல் நம் இஷ்டம் போல் வாகனம் ஓட்டவும் முடியாது. இப்படிக் குடும்பம், சமூகம், வேலை, வருமானம், அரசாங்கம் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து பல்வேறு நிர்பந்தங்களை உண்டுபண்ணி அவரவருக்கு இருக்கின்ற சுதந்திரத்தைப் பெருமளவு குறைத்து விடுகின்றன. சுதந்திரம் எந்த அளவு குறைகிறதோ அந்த அளவு நம் சந்தோஷம் குறைந்து விடுகிறது. விளையாட விரும்புகின்ற பிள்ளைகளை home work போடச் சொன்னால் அவர்களுக்கு வருத்தம் வருகிறது. அதிக வருமானம் பார்க்க விரும்புகிறவருக்குக் குறைந்த வருமானம் வரும்பொழுது அவர் சுருங்கிப் போகிறார். தனக்குப் பிடிக்காத வேலையை மேலதிகாரி செய்யச் சொன்னால் அந்த இடத்தில் சங்கடம் வருகிறது. நிறைய வருமானம் பார்க்கிறவர்களை அதற்கேற்றபடி வருமானவரி கட்டச் சொன்னால் அவர்கள் அழுகிறார்கள்.
ஆனால் இப்படி நினைத்துப் பாருங்கள். யாருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லை, எந்த நிர்பந்தமும் இல்லை, இஷ்டம் போல இருக்கலாம், யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. இப்படி ஒரு பூரண சுதந்திரம் நமக்குக் கிடைத்தால் நாம் எவ்வளவு சந்தோஷமாக இருப்போம் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். வேலை செய்கிறோமோ இல்லையோ வேண்டிய வருமானம் கிடைக்கும், யாரும் எதற்கும் நம்மை எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள், இஷ்டப்பட்டால் வேலை செய்யலாம், விரும்பினால் திருமணம், இல்லாவிட்டால் சுதந்திரப் பறவையாக இருக்கலாம், வரி கட்டாமலோ, லைசன்ஸ் வாங்காமலோ விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தாலோ எவரும் கேட்க மாட்டார்கள் என்று இப்படி ஒரு சுதந்திரம் நமக்குக் கிடைத்தது என்றால் நாம் எப்படி மலர்ந்து போவோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வாழ்க்கையில் ஒரே ஒரு நாள் இப்படி ஒரு சுதந்திரத்தை அனுபவித்தாலும் நாம் வாழ்நாள் முழுவதும் அதை நினைவில் வைத்திருப்போம். ஆனால் ஒரு நாள் கூட இப்படி இருப்பதற்குச் சமூகம் எவரையும் அனுமதிப்பதில்லை. அதனால் மனிதன் சுருங்கிப்போயிருக்கிறான். இறைவனுக்கு இப்படி எந்த நிர்பந்தமும் இல்லை என்பதால் அவர் எந்நேரமும் இந்த வரம்பற்ற சுதந்திரத்தின் காரணமாக பேரானந்தத்தில் இருக்கிறார்.
ஆன்மாவினுடைய வரம்பற்ற தன்மை சத்திய ஜீவிய அளவில் தெளிவாக வெளிப்படுகிறது. ஏனென்றால் சத்திய ஜீவிய நிலையே பகவானால் ஆங்கிலத்தில் Infinite Truth Consciousness என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. சத்திய ஜீவியத்திற்குக் கீழே படிப்படியாக இறங்கி வந்தால் அடுத்தடுத்து கீழே உள்ள நிலைகள் இந்த Infinityஐச் சத்திய ஜீவியத்தை விட குறைந்த அளவிலேயே வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக சத்திய ஜீவியத்திற்கு அடுத்த கீழ் நிலையில் உள்ளது Overmind ஆகும். நாம் வழிபடுகின்ற பெருங்கடவுள்கள் பரமசிவன், மகாவிஷ்ணு, கிருஷ்ண பகவான் ஆகியோர் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். சத்திய ஜீவியத்திற்குண்டான முழுமையான அறிவோ மற்றும் அதே அளவிற்கான Infinite Nature இவர்களுக்கு இல்லை. ஆனால் Overmindக்குக் கீழேயுள்ள Human mind உடன் ஒப்பிடும் பொழுது Overmind உடைய capacity for Infinity அதிகம். நம் கண்ணிற்கு நம் கண் பார்வை எட்டும் அளவிற்குத்தான் வெளி உலகம் தெரியும். ஆனால் மகாபாரதத்தில் நாம் என்ன கேள்விப்படுகிறோம் என்றால் கிருஷ்ண பகவான் விஸ்வரூபம் எடுத்தபொழுது பிரபஞ்சமே அந்த விஸ்வரூபத்திற்குள் அடங்கியிருந்ததை அர்ஜுனன் பார்த்தான். இப்படி உலகம் முழுவதும் நம் கண் பார்வைக்குத் தெரிவதற்கு வாய்ப்பேயில்லை. நாம் நம் வீட்டு மாடியில் நின்று வெளியில் பார்த்தால் நம் தெருவில் உள்ள மற்ற கட்டடங்கள் நம் கண்ணில் படலாம். ஆனால் அடுத்த தெருவில் உள்ள கட்டடங்களோ அல்லது அதற்கும் அடுத்த தெருவில் உள்ள கட்டடங்கள் நம் கண்ணில் படுமா என்பது சந்தேகம். கடவுளான கிருஷ்ண பகவானுடைய பார்வை வரம்பற்றது. மனிதனான நம் பார்வை மிகவும் குறுகியது. இம்மாதிரியே Human mindஐ எடுத்துக் கொண்டால் Overmindக்குக் கீழே இருக்கிறது. ஆனால் vital plane என்று சொல்லப்படுகின்ற உணர்ச்சி நிலைக்கு மேலே இருக்கிறது. Overmindஉடன் ஒப்பிடும் பொழுது இதனுடைய capacity for Infinity குறைவு. அதாவது கடவுள்களுக்கு இருக்கின்ற முழுமையான அறிவு மனிதனுக்கு இல்லை. அவனுடைய தேவைக்கு ஏற்ற அறிவு தான் அவனுக்குள்ளது. அதாவது பாண்டவருக்கும் கௌரவருக்கும் இடையே இருந்த அரசாங்க தகராற்றை எப்படித் தீர்ப்பது மற்றும் அந்தக் குருக்ஷேத்திரப் போரை எப்படி நடத்துவது என்று கிருஷ்ண பகவானுக்கு இருந்த அறிவு பாண்டவரில் மூத்தவரான தர்மபுத்திரருக்கு இல்லை. கிருஷ்ண பகவான் தர்மபுத்திரரிடம் சொல்கிறார், "எனக்குத் தெரிந்த பஞ்சாங்கத்தின்படி 12 வருட வனவாசத்தை 12 நாளில் முடித்துக் கொள்ளலாமா, சம்மதமா?'' என்று கேட்கிறார். ஆனால் தர்மபுத்திரரோ அலறி, "அதெப்படி 12 வருடங்களை 12 நாளில் கழிப்பது? உங்கள் பஞ்சாங்கம் எனக்குப் புரியவில்லை. எனக்குத் தெரிந்த வகையில் 12 வருட வனவாசத்தை அதற்குரிய அளவிற்கு நான் அனுபவிக்கிறேன்'' என்று பதிலளித்தார். தெய்வத்தினுடைய வரம்பற்ற பார்வைக்கும் மனிதனுடை
No comments:
Post a Comment