Thursday, July 18, 2013

அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை


சவால்கள், அபாயங்கள் ஆகியவற்றைக் கண்டு சுருங்காமல், கடும் உழைப்பிற்குக் கலங்காமல், இலக்கு நோக்கி நடக்கும் மனிதன் அபாரமான வெற்றிகளை அள்ளிக்கொண்டு வருகிறான்.
- ரூஸ்வெல்ட்

கடின உழைப்புடன் தன் மீதான நம்பிக்கையும் மிகமிக அவசியம். ஏதோ ஒரு சாதனைக்காக தகுதி எல்லோரிடமும் இருக்கிறது. அந்த சாதனையை எட்டுவதற்காகவே இந்த வாழ்க்கை தரப்பட்டிருக்கிறது.
- மேரிக்யூரி

உணவுக்கான பசியைக் காட்டிலும் உலகில் அதிகமாக இருப்பது அன்புக்கான பசி.
- அன்னை தெரசா

எரியும் வீட்டிற்குள் நுழையலாம். குழந்தையைக் காப்பாற்ற முடியாது. துன்பங்களுக்குள் நுழையலாம். துன்பத்தை கடந்தவர்கள் கிடையாது.
- ஹென்றி நௌமென்

முன்னேறுவது என்று முடிவெடுப்பதென்னவோ மௌனமாய் நிகழ்கிறது. நீங்கள் முயன்று வெறும் வெற்றியை உலகமே முரசறைந்து கொண்டாடுகிறது.
- ஏன்னஸ்மேல்.

No comments:

Post a Comment