Tuesday, July 2, 2013

மற்றவர்களும் நம்மைப்போலவே

ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.

அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.

கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.

அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும்,நல்லஉயரமாகவும், கரு,கருவென்று இருந்தார்.

வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,

''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள்.

என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.

பெட்டகக் காப்பாளர் சொன்னார்,

பரவாயில்லை,கொடுங்கள்.

நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று,

உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும்,

சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி,

அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''என்றார்.

உலக இயல்பு...
=============

நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.

நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.

நம்மைப்போல்தான் மற்றவர்களும் எண்ணம் கொண்டு இருப்பார்கள் என்று எண்ண வேண்டும்.

எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால் நமக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை வந்துவிடும்.

No comments:

Post a Comment