வாஸ்து என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து வந்தது. வாஸ்தி என்ற லத்தீன் சொல்லுக்கு வசிப்பிடம், வளமான இடம் உண்மையானது, மங்களகரமானது என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்ந்திட வசிப்பிடத்தில் மனைவியை அன்பு மயமாக்குவதால் இல்லறம் இனியதாக அமையும்.
வாஸ்துவை வணங்கி வலப்படுத்துவதால் இல்லம் செல்வச் செழிப்போடு திகழும். அவரது திருக்கதையைப் படித்தறிவோமா? ஒரு காலத்தில் அந்தகன் என்ற அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் இடையே போர் ஏற்பட்டபோது சிவபெருமானது வியர்வையில் இருந்து வெளிப்பட்டு அந்தகனை விழுங்கியது.
சில காலங்கள் கழித்து சிவனிடம் பெற்ற வரத்தால் அதிக பலம் கொண்டதாகி உலகையே ஆட்டிப் படைத்தது. அதனைக்கண்டு வருத்தமடைந்த சிவபெருமான் வீரபத்திரனை ஏவி அசுரனை அடக்கச் சொல்ல அவன் அசுரனை அடக்கிக் கீழே தள்ளினான். குப்புற விழுந்த அசுரன் வடகிழக்காகத் தலை வைத்து விழுந்து விட்டான்.
மீண்டும் அவன் எழுந்திருக்காமல் இருக்க தேவர்களை அவன் மேல் வசிக்கும்படி செய்தான். அவன் உலகையே விழுங்க முற்பட்டபோது பூமி வடிவமான பூசணிக்காயை உணவாகக் கொடுத்தனர். தேவர்களது பாதங்கள் பட்டதால் புனிதத்துவம் பெற்ற அந்த அசுரன் மனிதர்களால் பூஜை செய்யும் தெய்வத்தன்மையைப் பெற்றான்.
பூமியின் அதிபனாக வாஸ்து பகவான் என்ற பெயரைப் பெற்று பூமி, மனை தொடர்பான தொடக்க நிகழ்ச்சிகளுக்கு உன்னை வணங்கி விட்ட பிறகே மற்ற பணிகளைத் தொடங்குவார்கள் மக்கள் என்று ஈசன் ஒரு சிறப்பை அருளினார். இந்த வாஸ்து ஒரு ஆண்டுக்கு 8 முறை உறக்கத்திலிருந்து எழுகிறார். பூஜை முடிந்ததும் மறுபடியும் படுத்து உறங்குவார்.
மரீசி மகரிஷி தந்த விமான அரச்சனை பூஷ்பம், மயன் பதம், சில்பரத்னம், சிற்ப நகரம், காஸ்யபம், சர்வார்த்த சாகரம், வாஸ்து வித்யா, சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, வாஸ்து பிரதிட்டா அங்கம், வாஸ்து பூமி க்ரியா கல்பம் ஆகிய நூல்கள், வீடு, கட்டிடம் கட்டும் கலை ஆகியவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லும் இந்த நூல்களாகும்.
வாஸ்து பூஜை என்பது எளிதாகப் புரிந்து கொண்டு நிறைவான பலன் பெறும் ஒரு பாரம்பரியக் கலையாக போற்றப்படுகிறது. வாஸ்துவின் பூஜை மற்றும் அருளும் ரகசியங்களை அறிந்து பலன் பெறுவோமா!
No comments:
Post a Comment