Friday, July 5, 2013

வன்முறை வேண்டாமே...

வன்முறை இல்லாமல் விலங்குகளால் வாழ முடியாது.

ஆனால் வன்முறை செய்து மனிதனால் வாழ முடியாது.ஆனால் மனிதன் விலங்காய் இருந்த காலத்தில் பதிந்த வன்முறை இன்னும் தொடர்கிறது.

கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போர்கள் நடந்துள்ளன.

ஒரு நாளில் இருபத்தி நாலு மணி நேரமும் நாம் நமக்குள் சண்டை இட்டுக் கொண்டே இருக்கிறோம்.

பகைவரோடு சண்டை போடுகிறோம்..சில சமயங்களில் நண்பர்களுடன் சண்டை போடுகிறோம்.

ஏன் நம் தாய்,தந்தையர்,உற்றார் உறவினர்,என்று இல்லாமல் எல்லோரிடமும்தான் நாள் தோறும் சண்டையிட்ட வண்ணமே இருந்து வருகின்றோம்.

பணத்துக்காக சண்டை போடுகிறோம்.பதவிக்காகவும், புகழுக்காக சண்டை போடுகிறோம்.

சண்டை போடுவதே பழக்கமாகி விட்டதால் காரணமின்றியும் சண்டை போடுகிறோம்.

வேட்டைக்குப் போகிறவன் காரணமின்றி சண்டை போடுகிறான்.சண்டை போடுவது அவனுக்கு விளையாட்டு.

நேரடி சண்டைக்கு போக முடியவில்லை என்றால் சண்டையிடும் உணர்வுள்ள விளையாட்டுக்களை மனிதன் தேடிக் கண்டு பிடிக்கிறான்.

அவற்றை வளர்க்கிறான்.

ஆழ்ந்து நோக்கினால் மற்றவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமும் பிறரோடு சண்டை போடுவதில் உள்ள ஆர்வமும் புலப்படும்.

வன்முறை உள்ள மனம் சண்டை போடாமல் திருப்தி அடையாது.

பிறரைத் துன்பப் படுத்துவதில் மகிழ்ச்சி காணும்.அத்தகைய மனம் ஒருபோதும் நிரந்தர மகிழ்ச்சி அடைய முடியாது.

வன்முறை மனிதனைப் பிடித்திருக்கும் நோய்.

அது தவிர்க்க முடியாதது அல்ல.

மனிதத் தன்மை என்னும் மலர் ஒரு நாளும் வன்முறைக்கு இடையே மலர முடியாது.

அன்புச் சூழலில் மட்டுமே அது மலர்வது சாத்தியம்.


அன்பு - எதிர்பார்ப்புகள் அற்றது;

அன்பு- சுயநலமற்றது!

அன்பு அமைதியில் நிலைத்திருக்கும்.

நாம் அனைவரும் எல்லோரிடமும் அன்பாக இருக்க நடந்து கொள்ள பழகிக் கொள்வோம்.

No comments:

Post a Comment