Wednesday, July 17, 2013

வாஸ்துவில் எட்டுத்திசையின் பலன்கள்

வாஸ்துவில் எட்டுத்திசையின் பலன்கள்
எட்டுத்திசையில், ஒவ்வொரு திசைக்கும் ஒரு விதமான பலன்களும் பிரதிகூலங்களும் உண்டு. இவற்றை நாம் தெரிந்து வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் அடையலாம்.

வடக்கு :
இந்த திசையை நாம் சரியாக அமைத்தால் வீட்டுப் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வடதிசை ஒரு தூய்மையான பகுதி. அதனால் குடும்பத்தில் பொருள் சேர்க்கை அதிகம் இருக்கும். குடும்பப் பொருளாதாரம் நல்ல சிறப்பாக இருக்கும்.

கிழக்கு :
கிழக்கு திசை அறிவு, ஆற்றல் மற்றும் ஆண்மையைக் குறிக்கும். இந்த திசையை நன்றாக முறைப்படி அமைத்தால் குடும்பத்தில் உள்ள ஆண்கள் மகிழ்ச்சியாகவும், போக பாக்கியங்களோடு வாழ்வார்கள்.

மேற்கு:
இத்திசை குறையோடு அமைக்கக் கூடாது. மேற்கு திசை சரியாக இல்லாவிட்டால் எதிர்மறைப் பலன்கள் உருவாகும். இந்தப் பகுதி ஆண்மையைக் குறிக்கும். முறையாக அமைத்தால் நல்ல புகழும், செல்வாக்கும் கிடைத்து வாழ்வில் மேன்மை உருவாகும்.

தெற்கு:
செல்வம் மற்றும் நீதிநேர்மையை குறிக்கும் பகுதி இது. தெற்கு திசையை சரியாக அமைத்தால் வீட்டுப் பெண்களுக்கு நோயற்ற வாழ்வு கிடைக்கும். இந்த திசையை குறையாக அமைத்தால் நேர் எதிர் விளைவுகள் உருவாகும். அதனால் அதிக கவனம் தேவை.

வடகிழக்கு:
இந்த திசை நல்ல பொருள்வரவு, வீடு, செல்வம் போன்றவற்றைக் குறிக்கும். வீட்டு ஆண் குழந்தைகளுக்கு நல்ல வளர்ச்சி கொடுக்கக்கூடிய திசை. வடகிழக்கு திசை சரியாக அமையாவிடில் வீட்டில் வறுமை ஏற்படும். குடும்பத்தலைவன் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். விபத்துக்கள், கருச்சிதைவு போன்றவை ஏற்படும். குழந்தைகள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

வடமேற்கு:
இந்த திசையை நன்றாக அமைத்தால் வியாபார விருத்தி, தொழில் முன்னேற்றம், அரசியல் லாபம், பொருள் வரவு போன்றவை கிடைக்கும். வடமேற்கு திசை சரியாக இல்லாவிடில் வீண்வம்பு, வழக்கு, திருட்டு, குடும்ப கஷ்டம், நோய்நொடி, உறவுக்குள் தகராறு போன்றவை ஏற்படும்.

தென்மேற்கு:
இத்திசை கன்னிமூலை என்று அழைப்பார்கள். உடல்நலம், ஒழுக்கம், செல்வச்செழிப்பு போன்றவற்றைக் குறிக்கும். சரியாக அமையாத பட்சத்தில் மனநோய், தற்கொலை மற்றும் வறுமை போன்றவற்றை உருவாக்கும்.

தென்கிழக்கு:
பெண்களுக்கு சாதகமான திசை. நல்ல செல்வ வளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். தென்கிழக்கு திசை சரியாக அமையாவிடில் வம்பு, வழக்கு, தீ விபத்து, அதிக செலவு, பகை, வறுமை போன்றவை உருவாகும்.

உங்கள் வீட்டு வாஸ்து திசைகளை சரியாக அமைத்து வாழ்வில் முன்னேற்றம் காணுங்கள்.

No comments:

Post a Comment