நம்மால் என்ன முடியுமோ "செய்ய முடிவதையே செய்யுங்கள்"..
இது எப்பொழுதும் நம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மால் செய்ய இயலாத,முடியாத அதிகமான பொறுப்புகளை, கவுரவத்துக்காக ஏற்று கொள்ளுகின்றோம்.அதனால் சில சங்கடங்கள் ஏற்ப்படுகின்றன.
இதை தவிர்க்க வேண்டும்.
முதலில் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எது நம்மால் முடியும், எது நம்மால் முடியாது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
அதிகப்படியான சுமையை ஏற்றுக்கொண்டு பின்பு ஏன் வருத்தப்பட வேண்டும்?.
நம்முடைய வெளியுலக நடவடிக்கைக்களை அதிகரித்து கொண்டு நம்மால் உள்ளுக்குள் மன அமைதியை பெற முடியாது.
நாம் நமது இயந்திரமயமான வேலை பளுவை குறைத்து கொண்டு,
தினமும் சில நேரங்களை நண்பர்களுடன்,குழந்தைகளுடன் செலவிடுங்கள்.
தினமும் உடற் பயிற்ச்சி,தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.
இது நம்முடைய ஓய்வற்ற எண்ணவோட்டத்தை குறைக்கும்.
வாழ்க்கையில் ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் இருந்தால்,
உங்களை எந்த நோய்களும் எட்டிக் கூடப் பார்க்காது.
No comments:
Post a Comment