Friday, November 9, 2018

குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting

குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting

தனித்திறனை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு குழந்தைக்கும் வயது வேறுபாடு இருக்கும். உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்
குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting
குழந்தைகளைப் படிப்புடன் எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ்களில் சேர்த்து ஜீனியஸ் ஆக்கும் கனவு எல்லாப் பெற்றோருக்குமே இருக்கும். ஸ்விம்மிங், ஸ்கேட்டிங், கராத்தே எனக் குழந்தைகளுக்கான பன்முக வாய்ப்புகள் திரும்பும் திசையெல்லாம் கொட்டிக்கிடக்கின்றன. பெற்றோர் குழந்தைகளுக்கான எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிடிஸ்களை வளர்க்கும் விதம் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர், சியாமளா ரமேஷ் பாபு.பெற்றோர்

பெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய 2 வயதில், சின்னச் சின்ன செயல்பாடுகளின் மூலம் குறிப்பிட்ட விஷயத்தில் தனித்தன்மையைத் வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். அது தாளத்துக்கு ஏற்ப ஆடுவதோ, பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிப்பதோ, எதைப் பார்த்தாலும் வரைவதோ என இருக்கலாம். இப்படிக் குழந்தை ஆர்வம் காட்டும் செயல்களைத் தொடர்ந்து கண்காணித்து அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தை இப்படி ஏதேனும் ஒரு செயல்பாட்டைத் தொடரும்பட்சத்தில், ``செல்லம், உங்களுக்குப் பாட்டு, நடனம் கத்துக்க ஆசையா? சேர்த்துவிட்டா கத்துப்பியா?' எனக் கேளுங்கள்

.குழந்தை வெளிப்படுத்தும் திறனை வளர்க்கும் இடங்களுக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திப் பாருங்கள். குழந்தை அதில் ஆர்வம் காட்டுகிறதா, அச்சம் அடைகிறதா என உற்றுநோக்குங்கள். குழந்தை திரும்பத் திரும்ப அங்கே போக ஆர்வம் காட்டினால், க்ரீன் சிக்னல் என அர்த்தம்.

புதிதாக ஒரு கலையைக் கற்பிக்க சேர்க்கிறோமே தவிர, அதில் ஜெயிப்பது மட்டுமே நோக்கமில்லை, பரிசுக்காகச் சேர்க்கவில்லை என்பதைக் குழந்தைகளுக்குப் புரியும்விதத்தில் சொல்லுங்கள். அதற்கு முன்பு, பெற்றோர்களுக்கும் இதில் தெளிவு அவசியம்.

தனித்திறனை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு குழந்தைக்கும் வயது வேறுபாடு இருக்கும். உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். குழந்தைக்கான தனித்திறன் 10 வயதிலும் வெளிப்படலாம். எனவே, பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

என் குழந்தை எந்தக் கூடுதல் வகுப்புக்குச் சென்றாலும் ஆர்வமே காட்டுவதில்லை என அங்கலாய்க்கும் பெற்றோர் உண்டு. அதை, அப்போதைக்கு அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். வளர வளர நண்பர்களின் ஊக்கத்தாலோ, சக மாணவர்களின் செயல்களைப் பார்ப்பதாலோ, ஆசிரியர்கள் மூலமோ அவர்களுடைய ஆர்வம் விரிவடையும்.

பெற்றோர்

புதிதாக ஒன்றைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க முடிவெடுக்கும் முன்பு, குழந்தையின் உடல் ஆரோக்கியம், பள்ளிக்கூட நேரம், பாடத்திட்டத்தின் வரையறை, குழந்தையின் ஆர்வம், குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் அனைத்தையும் மனதில்கொண்டு தொடங்குங்கள்.

குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுவதற்குத்தான் இந்த வகுப்புகளே தவிர, வதைக்க அல்ல. `இது எக்ஸ்ட்ரா கிளாஸ். ஃபீஸ் கட்டியாச்சு. நீ போய்த்தான் ஆகணும்' என வற்புறுத்தாமல், அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். ஆர்வம் இருந்தால், அவர்களே எனர்ஜிட்டிக்காகச் செயல்படத் தொடங்குவார்கள்.

சமீப காலமாக, வாய்ப்பாட்டு, நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், தற்காப்புக் கலைகள், வரைதல் போன்றவை ஊடகங்களால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்படுகிறது. எனினும், இவற்றில் ஆர்வம் காட்டாத குழந்தைகள் சாதிக்க முடியாது என்ற எதிர்மறை எண்ணத்தைக் கைவிட்டு, உங்கள் குழந்தையின் திறனை ஊக்குவிப்பது அவசியம்.

சில குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைவிட ரசிக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த ரசனை பின்னாள்களில் பெரிய அளவிலான தனித்திறனாக மாற வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளின் ரசனையை மதியுங்கள். அவர்களுடன் சேர்ந்து ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

எல்லாவற்றிலும் நம் குழந்தையே பரிசை அள்ளி வர வேண்டும் என நினைக்காமல், அவர்களின் குழந்தைப் பருவத்துக்கு மதிப்பு அளித்து, அவர்கள் விரும்புவதைச் செய்ய வழிகாட்டுங்கள்.

இனி உங்கள் குழந்தையும் ஆல்-ரவுண்டரே!

No comments:

Post a Comment