வெற்றி என்பது என்ன?
தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு சோதனைகளைக் கடந்து, சாதனை படைத்த சரித்த நாயகர்களின், தன்னம்பிக்கை வரிகள் இங்கே…
மகாத்மா காந்தி
வன்முறை மூலம் அடையும் வெற்றி தோல்விக்கு சமமே. அது தற்காலிகமான ஒன்றே அன்றி வேறு இல்லை. அகிம்சை மூலம் பெறும் வெற்றியே உண்மை வெற்றி.
ஸ்டீபன் ஹாக்கிங்
இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவு கடினமாக வேண்டுமானாலும் தெரியலாம். ஆனால், செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கிறது.
சுவாமி விவேகானந்தர்
ஒரே ஓர் எண்ணத்தை கையில் எடுங்கள். அந்த எண்ணத்தையே உங்கள் வாழ்க்கை ஆக்குங்கள். அந்த எண்ணத்தையே சிந்தியுங்கள், கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு செல்லும் நரம்பும் அந்த எண்ணத்திலேயே ஊறட்டும். இதுவே, வெற்றியின் ரகசியம்.
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும். பிரச்னைகளை தோல்வியுறச்செய்து, வெற்றி காண வேண்டும்.
ஒப்ரா வின்ஃபிரே
இந்த நொடியில் உங்களது 100 சதவிகிதத்தையும் கொடுத்து உழைப்பது, அடுத்த நொடியின் வெற்றியையும் சந்தோஷத்தையும் உறுதி செய்துவிடுகிறது.
எடிசன்
துவண்டுபோவதே ஒரு மனிதனுடைய மிகப் பெரிய பலவீனம். வெற்றிக்கான நிச்சய வழி, தோல்வி அடைந்த பிறகும், இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது.
பெர்னாட்ஷா
நான் ஆரம்பத்தில் 10 காரியங்களைச் செய்தால், 9 தோல்வியாகவே முடியும். தோல்வி என்னைக் கேலி செய்தது. 9 முறை வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன். 90 முறை முயன்றால் 9 வெற்றி கிடைக்கும் அல்லவா? அன்று முதல், முயற்சியின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். இதுதான் எனது வெற்றியின் ரகசியம்.
வால்ட் டிஸ்னி
விடாமுயற்சியுடனும் தைரியத்துடனும் கனவுகளைத் துரத்திக்கொண்டு ஓட முடிவெடுத்தவரின் ஒவ்வொரு கனவும் நனவாகும்.
No comments:
Post a Comment