Friday, November 9, 2018

எதையும் மாற்றக்கூடிய வழிகள் ..!..!!

நண்பர்களே... இன்றையதினம் உலகில் நாம் சந்திப்பதையும் சிந்திப்பதையும் என்னவென்னவோ செய்து , இது இப்படி மாறி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லது அது நன்மையாக இருக்கும் என நினைக்கிறோம். ஒரு சிலர் அதற்கு முயற்சி செய்கிறோம்.அது எப்படி என உலகை மாற்றக்கூடிய வழிகள் என்ற கட்டுரை மூலம் காண்போம்.இது தமிழ் நண்பர்கள் இணையத்திலிருந்து படித்தவை.

1. அழுகின்றவர்களுக்கு தோள் கொடுங்கள்.
2. உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம் செய்து இயலாதவர்களுக்கு தானமளியுங்கள்.
3. இரத்தம் தானமளியுங்கள்
4. வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள்.
5. தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள்.
6. அனைவரிடமும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் சரி சமமாக பழகுங்கள்.
7. உங்கள் சுற்றத்தார்களை உற்சாகப்படுத்துங்கள், அவர்களை தட்டிக் கொடுங்கள்.
8. யாரையும் பார்க்கும் பொழுது கண்களால் சிறிது புன்னகை பூத்திடுங்கள்.
9. உங்கள் வாழ்க்கை அகராதியில் இருந்து பிடிக்காது, முடியாது, என்ற வார்த்தையை அழித்து விடுங்கள்.
10. உங்கள் திறமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
11. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துரோகம்
செய்தவர்களை மனப்பூர்வமாக மன்னியுங்கள். மேலும்
அவர்களுக்காக பிராதித்துக்கொள்ளுங்கள்.

12. வயதானவர்களுக்கு, இயலாதவர்களுக்கு உங்கள்
இருக்கையை விட்டுக்கொடுங்கள்.

13. நல்ல செய்திகளை உலகிற்குஉரக்க சொல்லூங்கள்.
14. நீண்ட நாளைய நண்பனை கண்டவுடன் அவர்களை
தளுவிக்கொள்ளுங்கள், அவர்கள் முதுகில் தட்டிக் கொடுங்கள்.

15. உங்களை இதயப்பூர்வமாக, ஆத்மப்பூர்வமாக ஆழமாக நம்புங்கள், பின்னர் உலகம் உங்களை நிச்சயம்
கண்டுக்கொள்ளும் மேலான அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.

16. கோபம், பொறாமை கொள்ளாதீர்கள்.
17. தொல்வியுற்றவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள்.
18. நூலகங்களுக்கு உங்களால் முடிந்த புத்தகங்களை பரிசளியுங்கள், இயலாதவர்கள் அதனால் பயனடைவார்கள்.
19. மரங்கள், பூச்செடிகளை நடுங்கள்.
20. மக்களையும் அவர்களின் போக்கையும் விரும்புங்கள், அவர்கள் என்னதான் ஊமையாய் இருந்தாலும், ஒன்றுப்படாமல் இருந்தாலும் சரி காலம் அதற்கான சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.
21. ஜாதி, மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் பழகிடுங்கள்,
அவ்வாறு உங்கள் சுற்றத்தார் இருப்பின் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறார்கள் என்றெண்ணி விலகிவிடுங்கள்.

22. தெருவில் அனாதையாய் திரியும் குட்டி நாய்களுள் ஒன்றினை தேர்ந்தெடுத்து அதனை வளர்த்திடுங்கள் (இருக்கும் காலம் வரை உங்களுக்கு நன்றியுடன் இருக்கும்).
23. நீங்கள் இவ்வுலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவ்வாறே அதனை காணுங்கள், உங்களால் மற்றவர்களும் மாறுவார்கள் உலகமும் தன்னை நிச்சயம் மாற்றிக்கொள்ளும் அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும்.
24. இதுபோன்ற நல்ல விடையங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment