Tuesday, July 16, 2013

கற்றுக் கொடுங்கள்...

ஆபிராகாம் லிங்கன் தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு இப்படி ஓரு கடிதம் எழுதினார்.

அவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனக்குத் தெரியும்.எல்லோரும் நேர்மையானவர்கள் அல்ல;

எல்லோரும் உண்மையானவர்களும் அல்ல.

ஆனால்,

ஒவ்வொரு அயோக்கியனுக்கும் ஒரு தலைவன் உண்டு.

ஒவ்வொரு சுயநலவாதிகளுக்கும் ஓர் உண்மையான தலைவன் உண்டு என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் உண்டு என்று கற்றுக் கொடுங்கள்.

அதற்குச் சிறிது காலம் ஆகும் என்று எனக்குத் தெரியும்.

ஆனால்,

அவனுக்கு முடிந்தால் சொல்லிக் தாருங்கள்.

அவனாகவே சம்பாதித்த ஒரு டாலர், ஐந்து பவுனைவிட உயர்ந்தது என்று.

அவனுக்குத் தோல்வியால் துவண்டுவிடக் கூடாது என்பதை உணர்த்துங்கள்.

வெற்றியை எப்படிக் கொண்டாடுவது என்பதையும் சொல்லித் தாருங்கள்.

உங்களால் முடிந்தால் பொறாமையில் இருந்து அவனை விலக்கி வையுங்கள்.

அமைதியான சிரிப்பின் ரகசியத்தையும் கற்றுக் கொடுங்கள்.

அதே நேரத்தில் வானத்துப் பறவைகளையும்,

வெயிலில் சுற்றும் வண்டுகளையும்,

பசுமையான மலைப்பகுதியில் இருக்கும் பூவையும்,

அவனுக்கு ரசிக்க கற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதை விட,

தோற்று போவது எவ்வளவோ உயர்ந்தது,

என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

என்னுடைய மகனுக்கு பலம் கொடுங்கள்.

தவறான பாதையில் போகும் கூட்டத்தில் தொடர்ந்து செல்லாமல் இருக்க,

எல்லோரின் கருத்தையும் கேட்டுக் கொள்ள கற்றுக் கொடுங்கள்.

அதே சமயத்தில்,

கேட்டதை எல்லாம் உண்மை என்னும் துணியால் வடிகட்டி நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

கண்ணீர் சிந்துவதில் வெட்கப்பட தேவையில்லை

என்பதையும் என் மகனுக்கு உணர்த்துங்கள்.

No comments:

Post a Comment