Tuesday, July 16, 2013

நாம் திருத்திக் கொள்வோம்..!பிறரை திருத்த முயல்வோம்..

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.

அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம். தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது.

அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

சண்டை முற்றி, ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.

வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,

"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து,

"என்ன சொல்கிறீர்கள்.

ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா?

அது குற்றமில்லையா?" என்று கேட்டார்.

"ஐயா..

என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம்.

பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன்.

பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன்.

இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார்.

சமமாக இருந்தது.

நீதி:

எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய,

தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று நினைப்பதில்லை.

ஆமாம்.

எல்லோரும் திருந்த வேண்டும் என்று நினைகின்றார்களே

தவிர தான் முதலில் திருந்த வேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை.

பழமொழி சொல்வார்களே,

"ஊருக்குத்தான் உபதேசம் நமக்கில்லை".என்று.

அதுபோல்தான் உள்ளது மற்றவர்களின் செயல்பாடும்,
எண்ணங்களும்.,

நம் மத்தியில் சொல்வதற்கு ஆயிரக்கணக்கில் இருக்கின்றன -

அற்புதமான அறிவுரைகள், அட்டகாசமான சொற்பொழிவுகள்.

ஆனால் அதன்படி நடப்பதற்குத்தான் ஆட்கள் இல்லை.

அதைக்கூட உன்னால் செய்ய முடியாதா?

நானாக இருந்தால் இந்நேரம் அதனை முடித்திருப்பேன் என்று பெரிய அளவிற்குப் பேசுவோம்.

பேசுகிறவனை மக்கள் நம்ப மறுப்பார்கள்.

ஆனால் செய்பவனை மக்கள் மதிப்பார்கள்.

எனவே,

நம்மை திருத்திக் கொள்வோம்.,

பிறரை திருத்த முயல்வோம்.,

No comments:

Post a Comment