தர்ம சாஸ்திரத்தில் 120 விரதங்கள் இருப்பதாகவும் அதை தர்மபுத்திரர் நாரதருக்கு உபதேசம் செய்துள்ளதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் வீடு சொந்தமாக அமையவில்லையே! என்று ஏங்குவோர் வீட்டில் ஐந்து கற்களை ஈசான்ய மூலையில் வைத்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பூமி தேவியையும், வாஸ்து பகவானையும் செவ்வாய் கிரகத்தையும் நினைத்து விரதமிருந்து பூஜை செய்து வரவேண்டும்.
காலை செவ்வாய் கோலமும் போட்டு அதன் மேல் நல்எண்ணைய் நெய், தேங்காய் எண்ணைய் கலந்து ஊற்றி தீபம் ஏற்றி கற்கண்டு, தாம்பூலம் அவல் பொரி கடலை படைத்து கற்பூர ஆரத்தி காட்டி 5 கற்களுக்கும் மலர் நவதான்யம் போட்டு வழிபட்டு இரவு பாலும், பழமும் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு 21 செவ்வாய் விரதம் இருந்து ஒரு வாஸ்து நாளில் பூஜையை நிறைவு செய்தல் வேண்டும். புவிமகள் புத்திரனே! நிலமதின் வேந்தனே செவிமருத்து அருள்தருவாய், மங்களனின் பார்வையோடும் குருனோடு பிறையோனும் பார்வையிட பாரினில் ஒதுக்கிடு வாய் ஒரு அருட்தளமே!
No comments:
Post a Comment