நமது பஞ்சாங்களின் மூலம் மழையின் அளவை தெரிந்து கொள்ள கூறப்பட்டுள்ள கணித முறை.....
அந்த,அந்த வருடத்திற்க்கான சாலிவாகன சகாப்தத்தை 8 ஆல் பெருக்கி 9 ஓன்பதால் வகுக்க ,ஈவு போக,மீதி
#ஒன்றானால் வர்த்தமேகம் என்று பெயர் அதாவது புன்மழையாம் அதாவது மழைக் குறைவு எனவும்.
#இரண்டானால் கங்கு வர்த்த மேகம் என்று பெயர் அதாவது புயல் வீசும் என்றும்...ஆக வெறும் புயல் என்று மட்டும் என்று அறியலாம்.
#மூன்றானால் புஷ்கரை மேகம் என்றும், பிரளயமாய்ப் பொழியும் என்றும்.
#நான்கானால் துரோண மேகம் என்றும் அதாவது வெள்ளப்பெருக்கேற்படும் என்றும்.
#ஐந்தானால் காள மேகம் என்றும் அதாவது காற்றும் மழையும் கலந்து வீசும் என்றும்.
#ஆறானால் நீல மேகம் என்றும் அதாவது பெய்த இடத்தே பெய்து மற்ற இடத்து பொய்க்கும் என்றும்.
#ஏழானால் வருண மேகம் என்றும் அதாவது வெகு மழை பொழியும் என்றும்.
#எட்டானால் வாயு மேகம் என்றும், மழை பொய்த்து வறட்சி மிகும் என்றும்.
#ஒன்பதானால் தமோ மேகம் என்றும்,நல்ல மழை பொழிந்து சுபிட்சம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது....
அவ்வாறானால் இந்த மன்மத வருடம் #சாலிவாகன சகாப்பத வருடம் 1937 ஐ 8 ஆல் பெருக்க 15496 வரும்,இதை ஒன்பதால் வகுக்க மீதி ஏழு வரும் என்றும் அதன் மூலம் பார்க்க#வெகு_மழை என்பது கணித கணக்கு...
அடுத்ததாக....
வருட மேகாதிபதி சூரியனால் கிழக்கு திசையிலும்,சந்திரனாயின் தென்மேற்கிலும்,செவ்வாயின் தெற்கிலும்,புதன்,குருவாகில் வடக்கிலும்,சுக்கிரனாயின் தென்கிழக்கிலும்,சனியாயின் மேற்கிலும் மேகம் உற்பத்தியாகி மழை பெய்யும் என்கிறது சாஸ்திரமே.
அப்படியாயின் இந்த #மன்மத வருடம் மேகதாதி பதியாக சந்திரன் வந்துள்ளார் எனவே தென் மேற்க்கு என்றாகிறது....
மேலும் இந்த வருட மேகாதிபதியின் பலனாக#ஆறு_குளம்_நிரம்பும்_என்றும்_பலவித_நிறம்_உள்ளவர்கள்விருத்தி என்றும் கூறப்பட்டுள்ளது....
ஆக இதன்படி காணும் போது இது பருவகால மழை என்றும்,இந்த #பேரழிவுக்கு காரணம்,ஏறி,குளம்,கூவம் என்றும் மண்ணின் தன்மை அறியாமல் கட்டங்களை கட்டி,மழை நீர் வடிய,செல்ல வழியில்லாததால் தான் இந்த கஷ்டம் என அறிய முடிகிறது.
#இயற்க்கை_குறை_சொல்லக்கூடாது என்பது...வினை விதைத்தோம்,வினை அறுக்கிறோம்...காலத்தின் கோலம்
No comments:
Post a Comment