Thursday, January 21, 2016

தோல்வியை தாங்குவது எப்படி?

வெற்றியெனும் ஆல மரத்துக்கு

விதையாவது தோல்வியின் அனுபவங்களே
    
மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டா என்பது நமக்கு தெரியாது ஆனால் நிச்சயம் தோல்விக்கு பிறகும் வாழ்வு உண்டு என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
    
வாழ்வு என்பது ஒரு எண்ணெய் தடவிய வழக்கு மரம் சாண் ஏறினால் முழம் சருக்குகிறது.வாழ்வு என்பது ஒரு சுழலும் சக்கரம் எந்த இடத்தில் புறப்பட்டதோ திரும்ப அங்கு வந்து நிற்கிறது.
      
ஆனால் முயன்றவருக்கு வாழ்வு என்பது ஒரு பரமபத விளையாட்டு ஒவ்வொரு காலடியிலும் ஒரு சிறிய அல்லது ஒரு பெரிய பாம்பு கொத்துகிறது.
     
அஞ்சாமல் அடுத்த அடி எடுத்து வைத்தால் 
அங்கே ஒரு சிறிய அல்லது ஒரு பெரிய ஏணி அதிட்ட தேவதையாக நமக்காக காத்திருக்கிறது.எத்தனை அற்புதமான விளையாட்டு இந்த வாழ்க்கை சுவையான திருப்பங்கள் சோகமான வீழ்ச்சிகள் சுழன்றடிக்கும் காற்று.
    
வெற்றி திருமகள் ஒரு மோசமான விலைமகள் யாரிடமும் நிரந்தரமாக நிலைப்பதில்லை நிற்பதில்லை அடிக்கடி மாலை மாற்றி கொள்கிறாள் ஆளை மாற்றி கொள்கிறாள்.
    
இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாம் எல்லோரும் நாமே பார்க்கின்றோம்.
    
இந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதி தானே இயக்குபவன் இறைவன் அவன் சுயவிருப்பத்திற்காக காரணமே இன்றி காட்சியை மாற்றுவான்.
    
நாடகம் சுவையாக இருக்க வேண்டுமானால் கதாபாத்திரங்களையும் தன் விருப்படி மாற்றுவான் கொன்று கூட விடுவான்.
    
இவையேல்லாம் பல கவிஞர் அறிஞர்  சொன்ன கற்பனைகள் மட்டுமல்ல ஆழமாக அர்த்தமுள்ளதாக நாம் தோல்வியை தாங்கும் மனவலிமை பெறுவதற்காக ஊட்ட பட்ட ஊக்க சத்துக்கள் ஊட்ட மருந்துகள்.ஆனால் சிலருக்கு தூக்க மாத்திரைகளாக போகிறது.
     
விதி என்றோ வினை என்றோ போதித்தது தாங்குவதற்காகத்தானே 
தவிர,தூங்குவதற்காக அல்ல  


கடந்தது நதி நடந்தது விதி இறந்தது பினி இனி நடப்பதை நினை எழுந்து நில் தொடர்ந்து செல்

             
ஆண்டாண்டு அழுதாழும் மாண்டவர் வருவதில்லை ஆற்றிலே போன நீர் திரும்புவதில்லை
      
புதுமழை வரும் புது நீர் வரும் புது உயிர்கள் பிறக்கும் புது வாழ்வு மலரும் புதிது புதிதாக தொடர்
தொடராக வாழ்வு நீண்ட தொலை காட்சி தொடராக தொடரத்தானே போகிறது.
     
உடல்தானேமுற்றுகிறது அது ஒரு சிறுகதை 
உலகம் என்றும் முற்றுவதில்லை முடிவதில்லை அது ஒரு
முடியாத முழ நீள தொடர்கதை தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும் கருவறை தொடங்கி கல்லறை வரை எத்தனை எத்தனை இழப்புகள்  நாம் அடைந்த கணக்கை விட இழந்த கணக்கு அதிகம்.
    வெற்றி இழப்பு,
    பொருள் இழப்பு,
    பணம்  இழப்பு,
    மானம் இழப்பு,
    உறுப்பு இழப்பு,
    உயிர்  இழப்பு,
      
இழப்புகளுக்கு கணக்கேயில்லே தோல்விகளுக்கு முடிவேயில்லை.
      
ஆனால் நீ எதை இழந்தாய் நீ எதையாவது கொன்டு வந்தாயோ?இங்கிருந்து தானே எடுத்து கொண்டாய் ஆசை பட்டாய் அனுபவித்தாய் விட்டு விட்டு கிளம்ப வேண்டியதுதானே என்று கேட்கிறானே நியாயம்தானே.
        
சொல்வது சுலபம் வயிற்றுவலி நமக்கென்று வரும் போது சிரிப்பது கடினம் ஆனால் உடற் பயிற்சி போல இது மன பயிற்சி செங்கல்லில் அடித்து அடித்து கையை பலப்படுத்துவது போல சுயமாக தானே சொல்லிக் கொன்டு வந்தால் தன்னை தானே தயார் படுத்தி வைத்து கொண்டால் துயரம் கொஞ்சம் குறையும் இதுவே மனதை வலுபடுத்தும் பயிற்சி
         
தோல்வியை தாங்குவது என்பது வேறு அதை ஏற்று கொள்வது என்பது வேறு. விரக்தியை தாங்கும்   மனபக்குவம் வேண்டும் இது ஒரு நீர் அணைக்கட்டு போல பலரது கொள்கலன் சில அடி மட்டம் ஆனால் சிலரது தாங்கும் கொள்கலன் பல நூறு அடி உயரம் இதையே கொள்கிறன் தாங்கும் சக்தி என்கிறோம்
      

நமது சகிப்பு திறனும் விரக்தி குறைவும் நமது மனதினுடைய பலத்தை வலுப்படுத்துகிறது  
ஆனால் சிலர் சுலபமாக தோல்வியை இயல்பாக ஏற்று கொள்கிறார்கள் நான் தோற்கத்தானே பிறந்தேன்
என்று வேதனையாக விட்டு விடுவார்கள் இது தோல்வியை தாக்குவதல்ல.சாண் போனாலன்ன முழம் போனாலன்ன என்ற விரக்தி சோகம் இதில் எந்த பயனுமில்லை
     

அதே போல் தோல்விக்கு தயாராக இருப்பது என்பது வேறு தோல்விக்கு அச்சபடுவது என்பது வேறு
   
தயார் நிலை என்பது தீப்பிடித்தால் அணைப்பதற்கு எச்சரிக்கையாக இருப்பது போல எதிர் மறையாக நிச்சயம் நான் தோற்று விடுவேன் என விரக்தியாக பேசுவது ஒடுகிற நீரில் தானே குதித்து தற்கொலை செய்வதற்கு ஒப்பாகும்
      
எனவே நிச்சயம் வெல்வோம் ஒருவேளை தோற்றுவிட்டால் அது ஒரு வருத்தமில்லை மீண்டும் முனைப்பும் போராடி வெல்வோம் இது போன்ற எண்ண ஒட்டங்கள்தேவை. சிறு வயதிலே இருந்து இந்த பயிற்சியும் முயற்சியும் நமது இயல்பான சுபாவமாக அமைந்து விடுவது மிக சிறப்பானது.    

தோல்வி மனப்பான்மையும்,தன்னை தானே தோற்கடித்து கொள்வதும் ,எதிர்மறையான சிந்தனைகளும்,தோல்வி பற்றிய அச்சமும் தோல்விக்கு பிறகு அவமான உணர்வும்மனசோர்வும்,தாழ்வுமனபான்மையும் தன்னம்பிக்கை குறைவும்,தற்கொலை முயல்வும் போன்ற பல மன நல பாதிப்புகள் ஆபத்தானவை.
       
ஒருவரது திறமையையும்,செயல் திறனையும் முடக்க கூடியது.கல்வி,வேலை, நட்புறவு,உடலுறவு போன்ற பல அத்யாவசய தினசரி நடவடிக்கைகளையும் பாதிக்ககூடியது.
     
எனவே தோல்வி என்பதும் இழப்பு என்பதும் தவிர்க்க முடியாதது ஆனால் தாங்க கூடியது என்பது தெளிவாக உணரப்பட வேண்டும்.
      
அதே போல் தோல்வியும்,இழப்பும் நிலையானதும் நிரந்தரமானதும் அல்ல அது ஒரு சுழற்சி மீண்டும் லாபமும் வெற்றியும் உறவும் அன்பும்,பதவியும்,பொருளும் ஏதாவதொரு மாற்று வழியாக நாம் வெல்வோம் என்ற நம்பிக்கையும் முயற்சியும் தொடர வேண்டும்.
      
உலக இயல்பும்,வரலாறுகளும்,ஆழ்ந்த சுய அனுபவங்களும் பெற்றவரதுஆலோசனைகளும் அறிவுரைகளும் வாழ்வின் நுட்பமான நுணுக்கமான செய்திகளை நமக்கு உணர்த்துகின்றன.
      
ஆனால் பெரும்பாலோனோர்களுக்கு வெளுத்ததெல்லாம் பால் போல ஒரு வெகுளித்தனமான அறியாமை தொடர்கிறது.தோல்வி என்பதையே இயற்கைக்கு புறம்பானது என்பது போல‌ எண்ணத்தில் இருப்பார்கள்.தான் இது வரை தோற்றதில்லை என இருமாந்திருப்பார்கள் தோல்வியை தாங்க மாட்டேன் என்று சொல்லி தனக்கு தானே இறுக்கமான வலை பின்னி கொள்வார்கள்.
              
நாம் ஒரு செய்தியை நுனுக்கமாக புரிந்து கொள்ள வேண்டும் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் உலகம் பல ஆயிரம் விதமான நுட்பமான திறமைகளை எதிர்பார்க்கிறது எல்லா திறன்களும் எல்லா
மனிதரிடமும் இருக்க வாய்ப்பில்லை.
              
உதாரணமாக உலோகங்கள் மற்றும் அதன் கலவைகளிடம் நாம் பல இயல்பியல் குணங்களை எதிர்பார்க்கிறோம் சில குணங்கள் சில உபயோகங்கள் உள்ளது ஆனால் அதுவே சில இடங்களுக்கு உபயோகமில்லாது போய் விடுகிறது உதாரணமாக வன்மையான இரும்பும்மென்மையான தங்கமும்
வெவ்வேறு விதமான குணாதிசயங்களை உடையவை அவற்றின் உபயோகத்துக்கு தகுந்த மாதிரியும் புகழும் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.
இதே மாதிரியாக மனிதன் பழக்கப்படுத்தும் விலங்குகளும் அமைகின்றது.பூனையும் ஆனையும் அதன் புகழும் விலையும் குணத்துக்கு தகுந்த மாதிரி அமைகிறது.
                  
இது இயல்பான மனித சமுதாய அமைப்பிலும் காணப்படுகிறது உடல் உழைபாளிகளை விட அறிவு ஜீவிகள் புகழும் பணமும் அடைகிறார்கள் ஆனால் இயற்கையின் படைப்பை நாம் குறை கூற முடியாது.  


                                
உடலின் ஒவ்வொரு அங்கமும் போல யாவரும் அத்யாவசயமானவர்கள்.இதயக் குழாயாகட்டும் மலக்குடலாகட்டும் இரண்டுமே முக்யமானவை புகழும் இக‌ழும் தற்கலிகமானவை.
                    
தோல் மருத்துவரை விட இதய மருத்துவர் புகழடைவது இயல்பு ஆனால் எவரும் தாழ்ந்தவரில்லை.
         
தெரு கூட்டுபவர் முதல் தேசிய கொடி நாட்டுபவர் வரை கொள்கையளவில் சமமே ஆனால் புகழிலும் பொருளிலும் சிலர் உயர்வடைவது உலக இயல்பு.மெல்ல மெல்ல இந்த இடைவெளி குறைந்து சமதர்ம சமுதாயம் மலரும்.
எனவே வெற்றி தோல்வி என்பது நம்மை தாண்டி பல நூறு நுட்பமான பிண்ணனி உண்டு என உணர வேண்டும்.அதை பயின்று மென்மேலும் உயர முயல வேண்டும்.தன்னைத்தானே நொந்து கொள்வது தவறு.அதற்காக இல்லாத ஒரு காரணத்தை சொல்லி தன்னை ஏமாற்றி கொள்வதும் தவறு.
                 
நமது தெளிவான சிந்தனைகளால் எதிர்பாராத ஏமாற்றத்திற்கும் தயாராக வேண்டும் எமாற்றத்தை ஏற்று எதிர்த்துபோராடவும் தயாராக வேண்டும்.
                
தோல்விக்கு பின் தோல்வி மனப்பான்மை தாழ்வு மனப்பான்மை துயரம் சோர்வு தளர்வு விரக்தி சுய பச்சாதாபம் குற்ற உண்ர்வு தன்னம்பிக்கை குறைவு ஏற்படுவது இயல்பு உடல் காயத்தை விட மனக்காயத்தின் வலி அதிகம். ஆனால் வீரர்கள் தமது முயற்சியால் சுய பயிற்சியால் இரு விதமான காயங்களையும் தாங்கும் வலிமையை வளரித்து கொள்கிறார்கள்.

                              தோற்றவர் கூட வெல்லலாம்
                               துவண்டவர் என்றும் வெல்லமுடியாது
                               மாண்டவர் கூட மீளலாம்
                               சோர்ந்தவர் என்றும் எழ முடியாது
         
நாளை நமதே வெற்றி நமதே என்ற ஜெய ஜெய கோஷங்கள் உற்சாகமூட்டும் பானங்கள்.
தன்னம்பிக்கையுள்ள தலைவர்கள் ஊக்க மருந்துகள்  
       

          
ஊக்கமூட்டும் எழுத்துக்கள் பேச்சுக்கள்,கவிதைகள் காவ்யங்கள் யாவும் அற்புதமான மருந்துகள்.
             
பெற்றோர் உற்றோர் ஆசிரியர் நண்பர் யாவரும் ஊட்டும் நம்பிக்கை வார்த்தைகள் மனம் என்ற
 மரம் செழித்து வளர போடப்படும் உரங்கள்.
           
மாறாக வதைகளும் வசைகளும் குறை கூறலும் குற்றம் சாட்டுதலும் இழிவுபடுத்தலும் அழிவு தரும் வழி முறைகளாகும் இந்த முறைகளை ஆசிரியர் பெற்றோர் உற்றார் அயலார் அனைவரும் கை விடுவது மிக ந்ல்லது.
        
எனவே தோல்வியை விட பிறரது விமர்சனங்களுக்கு வேதனைப்படுவதே ஆபத்தானது ஆகவே மற்றவர் யாவரும் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் உற்சாக
வார்த்தைகளை கூறுவது நல்லது.
                              
வென்றவரை கை தட்டி பாராட்டுவோம் தோற்றவரை கை தூக்கி ஆற்றுபடுத்துவோம்.வென்றவரை தோள் தட்டி ஊக்கபடுத்துவோம் பிறகு தோற்றவரை தோள் நிமிர்த்த பாடுபடுவோம்.
               
எனவே தோல்வியை தாங்கும் மனபக்குவம் மிக அவசியம் மேலும் பிறரது தவறான விமர்சனங்களை மறப்பதும் மிக மிக அவசியம்.
           
இறந்த பின் post martum செய்வது போல தோல்விக்கு பின் தெளிவான சுய ஆலோசனை சுய பரிசோதனை செய்வது அவசியம்.
                
நடு நிலையான ஆராய்வில் ந‌மது மீது குறைகள் தவறுகள் இருந்தால் முழுமனதோடு ஏற்று கொண்டு அதை மாற்ற முயல்வோம்.
             
அல்லது நம்மை மீறிய இடம்,காலம், நேரம்,சூழல்,அதிட்டம்,போன்றவை காரணமாக இருந்தால் மீண்டும் முழு உத்வேகத்துடன் மறு முயற்சி செய்வோம்.
                      

பல நேரங்களில் நமக்கு நம்பிக்கையான ந்ண்பர் உறவினர் கற்றோர் மற்றோரிடம் ஆலோசனை கேட்பது தவறோ,பலவீனமோ அல்ல. நமக்கு புலப்படாத ஒரு பெரிய விஷயம் அவர்களுக்கு தெரியலாம்.
           
தேவையானால்அடிப்படையானநல்லகுணங்களையோ,கொள்கைகளையோ மாற்றாமல் சில புதிய பாதைகளில் புதிய அணுகு முறைகளில் முயற்ச்சித்தால் மீண்டும் வெற்றி பெறலாம்.

No comments:

Post a Comment