Wednesday, January 20, 2016

பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்

புகழ்

சாதனைகளை அளக்க 
துல்லியமான அளவு கோள்கள் இல்லை______கந்தாராமசாமி

இசை வேன்டி நசையழிந்து வசைநீக்கி புகழெய்து______புறநானூறு

பிறந்த இடத்தில் இல்லாமல் 
சென்ற இடத்தில் புகழடைவது சிறப்பு____‍நீதிவெண்பர்

பணமில்லாமலும் புகழ் வெற்றி மரியாதை கிடைக்கும் 
எனபதற்க்கு உதாரணாம் மகாத்மா____தயானந்த சரஸ்வதி

சிறந்த நிலத்தில் பிறந்த பொருளும் புகழ் பெறுகிறது ____வாரியார்

பொய்யுடம்பு போன பின்னும் புகழடம்பு வாழுது____கண்ணதாசன்

தன்னைச் சுற்றி புகழ் ஒளி வீசுபவன் மனிதருள் மாணிக்கம்___விரார்

பேடிமையகற்று ஈடில்லாப்புகழுண்டு எழுக எழுகவே____பராதி

மலர் நடப்பதில்லை அதன் மணந்தான் நடக்கும் ____சுரதா

ஒளியோடு வாழி ஊழிதோறு ஊழி வாழி– மணிமேகலை.
                    
வெற்றி

ஜெயமுண்டு பயமில்லை மனமே____பாரதி

வெற்றி வேண்டுமென பதட்டம் இல்லாமல் இருப்பதே 
வெற்றி பெற வழி___காலம்

கற்பனை வாய்ப்பு உழைப்பு சேர்த்தால் வெற்றி நிச்சயம்___பிசிகணேசன்

கரும்புக்கு எந்த பெயரானால் என்ன 
இனிக்காமல் போய் விடுமா___புதுமைபித்தன்

கண்டுபிடித்தவனை விட 
பிறருக்கு பயன்படுத்தியவனுக்கே வெற்றி__

திறமையே வித்தாகும் நன்மையே வேராகும் 
உழைப்பே வரமாகும் வெற்றியே மரமாகும் விதுரர்

மெய் வருத்தக் கூலி தரும் ___வள்ளுவர்

வெல்வது வேண்டின் வெகுளா நோன்பினிதே____இனியவை நாற்பது

சாதிக்க வல்லார் தம்மை யுணர்ந்தவர்___திருமந்திரம்

வாதித்து வெல்ப‌வரை விட
சாதித்து வெல்பவரே மேதையாவார்___தாகூர்
                       
வாய்ப்பு

போனால் வருமோ பொன்னெனும் வாய்ப்பே______கபீர்தாசர்

இரும்பு பழத்திருக்கும் போது 
ஒங்கி அடிக்கத்தான் வேண்டும்____நேதாஜி

யார்தான் காத்திருக்கவில்லை இந்த உலகில் _வல்லிக்கண்ணன்

கொத்தும் போது 
கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை____கண்ணதாசன்

கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் ____பாரதி

சாத்யப்பட்ட வாய்ப்புகளை கொண்டே 
முன்னேனும் தகுதி வேண்டும்____கலாம்

வாய்ப்புக்களே இல்லாத வாழ்க்கை 
என்று ஒன்று இருக்க முடியாது_____பிசி கணேசன்

நாலு பக்கம் வாசலுண்டு நமக்கும் ஒரு வழியுண்டு______கண்ணதாசன்

நன்மை வருக தீது நலிக 
இன்றெமை வாட்டும் இன்னல்கள் மாய்க____பாரதி

சூர்யனையும் சந்திரனையும் சத்யத்தையும் 
யாராலும் நீண்ட நேரம் மறைக்கமுடியாது–புத்தர்.

காலம்

காலம் கருதி இருப்பார் கலங்காது_____‍வள்ளுவார்

நல்ல காலத்தை எதிர்பார்த்து காத்திருப்பவரால் 
நல்ல கார்யம் நடக்காது___வியாசர்

காலம் கனிந்திடில் அனைத்தும் உன்னை வந்தடையுமே____கபீர்தாசர்

பூண்டமைந்த காலம் அறிதல் 
ஞாலம் அறிந்த புகழ் தரும்_____கணிமேதையார்

நாளை பார்க்கலாம் என்ற 
மனோபாவமே பிரச்னைகளின் பிறப்பிடம்_____‍தயானந்த சரஸ்வதி

பருவத்துக்கு முன்பு நட்டாலும் 
பின்பு நட்டாலும் பயன் தராது______சித்பவானந்தா

காலம் போனால் திரும்புவதில்லை 
காசுகள் உயிரை காப்பதில்லை____கண்ணதாசன்

காலமே மதியினுக்கோர் கருவியாம்_____பாரதியார்

கருவியும் காலமும் அறிந்தால் அரியதென்னை_____மசுபிள்ளை

காலம் வரும் முன் என்ன பாடுபட்டாலும் உண்மை விளங்காது___முவ.
           
திட்டமிடுதல்

செயலின் முன் எண்ணுக_ஆசாரக்கோவை

ஒரு முறை அகலக்கால் வைத்தவன் திருந்துவது 
முடியாத கார்யம்_ராகுல் சாங்கிருத்யாயன்

முறை தவறாக செய்யப்படும் செயலால் 
நஷ்டமும் கஷ்டமும் உண்டாகும்__சந்திரசேகர சுவாமிகள்

வறுமை வம்பு நோய் 
வருவதற்கு முன்புதான் தடுக்க முடியும்__‍குன்றக்குடியடிகளார்

தாகம் எடுக்கும் முன் கிணறு தோண்டி விடுங்கள்___பிசிகணேசன்

நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே__கண்ணதாசன்

விளைவுகளை ஆராயாது தொடங்கிய வேலை விபரீதமாகும்___விதுரர்

எரியும் நெருப்பனைக்க 
கிணறு வெட்ட தொடங்குவார் மூடரே___விவேக சிந்தாமணி

கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கினால் 
கை கொட்டிச் சிரிப்பாரோ__பாரதி

சாத்தியம் அசாத்தியம் ஆய்ந்தறிந்து 
ஆற்றும் திறமுள்ள யாகமே யோகம்__‍மசுபிள்ளை
                                     
பயிற்சி

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் ___அவ்வையார்

பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள் __________சுஜாதா

வெயில் பட்டால் துணி கெடும் 
வெயில் படா விட்டால் நீர் கெடும்____விதுரா

படைப்பை மலர வைக்கும் அம்சங்கள் 
செயல்பாட்டு பரிணாமங்கள்தான்____கலாம்

ஙால் அறிவே ஆகுமாம் ஙண்ணறிவு_____மூதுரை

வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்___‍‍முதாமாழிக்காந்சி

காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரி____கம்பன்

கல்வி கரையில கற்பவர் நாள் சில____நாலடியார்

வாயின் அடங்குதல் துப்புரவாம் ____திரிகடுகம்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே_____புறநாணூறு.

No comments:

Post a Comment