இன்றைய இளைய சமுதாயத்தினர், மது குடித்தல், சிகரெட் பிடித்தல், போதை மருந்து உட்கொள்ளுதல், உடலுறவில் நாட்டம் போன்ற தீய பழக்கங்களில் தனது வாழ்நாளை தொலைத்து விடுகின்றனர். இது அவர்களை சொல்லி குற்றமில்லை. பெற்றோர் கள் ஒழுங்காக வளர்த்த தவறியதால் அதாவது சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்துகாட்டியிருந்தால் இன்றைய இளைய சமுதாயம் நல்ல பாதையில் சென்றிருக்குமே! சரி விடுங்க வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் வெற்றி பெற்ற ஒருவர் கூறி யதை இங்கு காண்போம்.
ஒரு மனிதர் தன்வாழ்வில் தொட்டதுறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார். அவரது வெற்றிக்கெல்லாம் யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர் தான்” என்றுசுட்டிக்காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க ஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப் படம்! நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார்,“இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங் களைக் கற்றுத் தந்தது.
பல விஷயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையா க நம் கைகளில் ஒப்படைக்கிறது.- அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம். சீவும்போதெல்லாம் கூர்மையடைகிறது.- தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.- வெளியே எப்படியிரு ந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது. சின்னஞ்சிறிய பென்சிலா கும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது. கடைசிவரை தன் சுவட்டினைக்காகிதத்தில் பதிக்கிறது. இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன்.
பல அரிய விஷயங்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு என்னைக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திரு க்கிறேன்.- சோதனைகள்வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர் மையாகிக் கொள்கிறேன்.- தவறுகள் செய்திருப்ப தாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.- வெளிச்சூழலில்புகழ் வந்தாலும் பழிச்சொல் வந்தா லும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறே ன்.- கடைசி வரையில் உழைத்துக்கொண்டே இருக் க வேண்டும் –கா லத்தில் நம் சுவட்டைப் பதித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, பெரிய பெரிய விஷயங்கள் பென்சிலி ல் இருப்பது புரிந்தது!
No comments:
Post a Comment