Thursday, January 21, 2016

STRESS MANAGEMENT நெருக்கடியை சமாளிப்பது எப்படி?

stress என்றால் என்ன? அதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன?என்று தேடி தவித்து கொண்டு இருக்கும் பொது உதவிக்கு ஓடி வந்தார் வள்ளுவர்

இடுக்கண் வருங்கால் நகுக என்று நமட்டு சிரிப்போடு சொன்னார் அவர் உடனே கவிஞரோ அட போயா, பாம்பு வந்து கடிக்கையில்,பாழும் உயிர் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு என்று சுய அனுபவத்தை புலம்பினார்.
      
stress என்றால் distress என்று சொல்லலாம். நிகழ்ந்த,நிகழ்கின்ற,அல்லது நிகழப் போகின்ற ஒரு நிகழ்வோ சம்பவமோ நமது உடல்,உயிர்,மற்றும் மனதுக்கு துயரையோ, நெருக்கடியையோ கொடுத்தால் அதை இருக்கண்,இடும்பை என்று சொல்லலாம்.
       
எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தாலும் சரி அல்லது எதிர்பாராத ஏமாற்றம் அடைந்தாலும் சரி அல்லது எதிர்பாராத ஏமாற்றம் வந்தாலும் சரி மனம் நெருக்கடிக்கு ஆளாகிறது.
    
ஆனால் நடைமுறையில் வாழ்வின் எல்லா மட்டங்களில் உள்ள எல்லா மனிதருக்கும் நெருக்கடி என்பது நொடிக்கு நொடி அடிக்கடி சந்திக்க கூடிய,சந்திக்க வேண்டிய ஒரு இயல்பான நிகழ்வாகும்.
    
துயரம்,துன்பம் வரும் போது துக்கமும்,சோர்வும் வருவதுதானே இயல்பு.அதனால் என்ன தவறு?இடுக்கண் வரும் போது சிரிக்க முடியுமா?யாராலும் முடியாது என்பது இயல்பு.
     
பிறகு ஏன் வள்ளுவர் அப்படி சொன்னார்?துயரம் வரும் போது சிரித்தால் எல்லாரும் பைத்யம் என்றல்லவா சொல்வார்கள்?
    
ஆனால் நன்றாக சிந்தித்து பார்ப்போம் சிரிக்கவா சொல்கிறார் நுணுக்கமாக அழாதே தைர்யமாக இரு அப்போது தான் கலங்காமல் அதை எதிர்த்து போராடி வெற்றி காணமுடியும் என்றல்லவா சொல்ல பார்க்கிறார்.
   
நாம் வழக்கம் போல துன்பம் வரும் பொது அழகிறோம்,சோர்வடைகிறோம்.
தூசு போல வெள்ளம் நம்மை இழுத்து கொள்ளும்.எதிர்ப்பும் உறுதியும் இல்லை என்றல் இன்னும் சுலபமாக வீழ்வோம் தூசும் துரும்பும் போல.
    
ஆகவே துன்பம் என்பது வலி போல இயல்பாக வேதனையும் சோர்வும் தரும் அது எதற்காக?அப்போது தான் நாம் அந்த செயலை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்ற நடத்தை உருவாவதற்காக.
     
ஆனால் நடைமுறையில் மனிதனில் சமூக பரிணாம வளர்ச்சியில் இது பல மாற்றங்களை அடைந்தது.உணவு,உறவு,உறக்கம் மட்டும் மிருகத்துக்கு போதுமானது ஆனால் மனிதனான சமூக மிருகத்துக்கு அதை தாண்டி பணம்,பதவி,புகழ் என்ற பல பகட்டான பாக்கள் தேவைப்பட ஆரம்பித்தது.
    
எனவே அவனுடைய தேவையின் எல்லைகள் விரிவடைய உணவு,உறவு,உறக்கத்தை கூட துறக்கவும் தியாகம் செய்யும் உயிரையே கூட விருப்பத்துடன் பலியிடவும் தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டிவந்தது.
   
இந்த கட்டத்தில் விரக்தியை,தோல்வியை,துயரை,னெருக்கடியை தாங்கி,சமாளித்து, நின்று நிலைத்து  எதிர்த்து போராட வேண்டிவந்தது.
அப்போதுதான்  தகுதியுள்ளவரே உயிர் வாழ்வார் புகழ்பெறுவார் என்ற தத்துவம் வலுபெற்றது.
      
எவரொருவர் நெருக்கடியை சுலபமாக எதிர் கொள்ளும் மன உறுதி உடையவரோ அவருக்கு எல்லா வெற்றிகளும் என்பது நடைமுறையில் நிரூபிக்கபட்டது.
    
எனவே தான் இடுக்கண் வருங்கால் நகுக என்ற தத்துவம் போதிக்கபட்டது.அது வாழ்வில் வெற்றி பெற அவசியமான அத்யாவசயமான அடிப்படை கொள்கையாக அறிவுறுத்தப்பட்டது.
   
இதை நம் வாழ்வியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

ஒவ்வொரு வயதின் பயணத்திலும் மனிதன் நேர்கொள்ள வேண்டிய நெருக்கடிகள்தான் எத்தனை.
  
20 வயதுக்குள்ளாக பெற்றோரில் யாராவது  ஒருவர் குறிப்பாக தந்தை பிரியும் போதோ,மரணமடையும் போது நிச்சயமாக ஒரு பெரும் நெருக்கடி உருவாகிறது.சாதராணமாக எல்லா குழந்தைகளும் இந்த துயரினால்உடைந்துநொறுங்கி,படிப்பில் ,பொருளாதாரம்,வேலை,
சுறுசுறுப்பு,உற்சாகம் போன்ற பல செயல்களில் பின் தங்கி இருப்பதை நடைமுறையில் பார்க்கிறோம்.
   
ஆனால் இந்த போராட்டமான வாழ்வினில் வெற்றி பெற்றவர்களே இன்று உலகில் முன்னணியில் வாழ்கின்றனர்.
    
எனவே நெருக்கடிகளை சமாளிக்க அதை வருமுன்னரே காக்க அதை பற்றிய முழமையான விழிப்புணர்வும் போராடக்கூடிய முன் பயிற்சியும் மிக அவசியமாகிறது.
    
———————————————————————————————

வாழ்வின் நெருக்கடிகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

ஒன்று தனிப்பட்ட மனிதனுக்கே சொந்தமான பிரச்சனைகள்.

இரண்டு நட்பு,உறவு,குடும்பம் போன்ற நெருங்கிய மனிதரால் வரும் பிரச்சனைகள்.

மூன்றாவது வேலை,அயலார்,தொழில்,சமூகம்,அதிகாரிகளால் வரும் பிரச்சனைகள் இதை personal/interpersonal/occupational/socialstresses என்று பகுக்கலாம்.

      
நெருக்கடிகள் ஒன்று உடல் ந‌லம் மற்றது மன நலத்தை பாதிக்கும் அல்லது இரண்டையும் பாதிக்கும். நேரம்,பொருளாதாரம் வலி,துன்பம்,தோல்வி,அவமானம்,இழப்பு போன்ற பல்வேறு வகையான விளைவுகள் நெருக்கடியை தோற்றுவிக்கின்றன.
       
இதை வாழ்வின் நெருக்கடியை தரக்கூடிய துன்ப இயல் சம்பவங்கள் என பட்டியலிட்டனர்.அதை எந்த நிகழ்வு மிக துயரமானது என மதிப்பெண் போட்டு வரிசையும் படுத்தினர்.குறைந்த பட்சம் 50 முதல் அதிகபட்சம் 100 வரை உள்ள இந்த நிகழ்வுகளின் பட்டியல் உலகில் உள்ள எல்லா வயதினருக்கும் ஆண்கள் பெண்களுக்கும் பொருந்தும்.
       
அறிவியல் ஆன்மீகம்,இலக்கியம்,தத்துவம்,மனோத்துவம் போன்ற அறிவுகளில் தெளிவான ஈடுபாடு உள்வர்களுக்கு அவர்களது சொந்த வாழ்வில் துயரம் வருவதற்கு முன்பாகவே இந்த நெருக்கடிகளை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது.
       
அதை ஏற்று கொள்லும் மனபக்குவம் உள்ளவர்களுக்கு நெருக்கடிகள் குறைந்த பட்ச துன்பமே தருகிறது .அதுமட்டுமல்ல மனதளவில் நெருக்கடிகளை சமாளிக்க கூடிய முன்னறிவும் மன நல பயிற்சிகளும் அவர்களுக்கு படகு போல உதவியாய் இருக்கின்றன.

பொறுமையாக அமைதியாக இருந்து நெருக்கடி தீறும் என்ற நம்பிக்கையுடன் அதை எதிர்த்து போராடி வெல்கிறார்கள்.பல நேரங்களில் தெளிவாக தவிக்காமல் தளராமல் உறுதியாக இருந்தால் கொத்த வந்த பாம்பு கூட திரும்பி போகிறது 
கொதித்து வந்த வெள்ளமும்
நெருப்பும் கூட த‌ணிந்து போகிறது.
       
——————————————————————–

நவீன வாழ்விலே கருவறையிலிருந்து கல்லறை வரை ஒவ்வொரு மனித உயிரும் கணக்கில் அடங்காத பல நூறு நெருக்கடிகளை சமாளிக்க வேண்டியுள்ளது.

கருவில் இருக்கும் போதே இன்று உயிர்களுக்கு தாயின் உடல் நல மன நல துயரங்கள் அவள் சாப்பிடும் மருந்து மாத்திரைகள் அவளோடு சேர்ந்து அதன் பயணங்கள் என்று பல துயர்கள் பல நேரங்களில் கருவுக்கே அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

பெண்குழந்தையாய் இருந்தால் கருவிலேயே உயிருக்கு பாதுகாப்பில்லை.இறுதியில் உயிர் இறந்து கல்லறைக்கு போனாலும் எரிப்பதோ புதைப்பதோ என போராட்டத்தில் பிணத்துக்கு கூட stress
விட்டு வுடுவதில்லை.
      

பிரசவமாகி வளர்வதற்குள் பெற்றோரது வாதங்கள் யுத்தங்கள் பிரிவுகள்,முறிவுகள்,உதைபடும் கால் பந்து போல பல பிஞ்சு உள்ளங்கள் வளர்கின்றன.
கல்விச் சாலைகள் ஒரு புதிய வாழ்வு 

ஆனால் சில ஆண்டுகளிலேயே புத்தக மூட்டை சுமை,வீட்டுபாடம்,முதல் இடம் என்ற போட்டியால் குழந்தைகள் கூன் விழுந்து நரை போடாததுதான் மிச்சம் 

அணுசக்தி ஆராய்ச்சி பற்றி ஜஸ்கிரீம் குழந்தைகள் மனப்பாடம்.
படி இல்லையென்றால் அடி 
பாலூட்ட வேண்டிய தாய் மார்கள் கைத்தடியுடன் 
ஆசிரியர்களோ குழந்தைகளுக்கு அரக்கர் போல தோன்றுகிறார்கள்.
       
பயணம் செய்ய நெருக்கடி,பள்ளியில் இடம் கிடைக்க நெருக்கடி படிப்பிலே போட்டி,ஆலையிட்ட கரும்பு போல சக்கையாய் வந்து சேரும் வாலிபம்.

பாலுணர்வு உந்த படிப்பிலே கவனம் சிதற பழக்கங்கள் தீமையாகி வாழ்வே நரகமாகிறது.தட்டு தடுமாறி பட்டம் படித்து ஏறி இறங்கி வேலை வாங்கி எப்படியோ திருமணமாகி உட்கார்ந்ததும் 

அடுத்தது குடும்ப சண்டை,பங்காளிதகராறு ,மாமியார்ப்மருமகள் யுத்தம்,தனிக்குடித்தனம் என்று தொடர்கிறது துயரம்.       
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


கணவன்,மனைவி யுத்தம், நோய்பட்ட குழந்தைகள்,குறைந்த வருமானம் நிறைய வேலை அவமானம் ஆத்திரம் என தொடர்கிறது வாழ்வு.
     
நிறைய எதிர்ப்பார்ப்புகள் நிறைய ஏமாற்றங்கள் 

சரிக்கட்ட கடன்கள் சமாளிக்க முடியாத சவால்கள்.

உருண்டு புரண்டு எழுந்து நிமிர்ந்து புதல்வர்களை முதல்வராகளாக்கி ஆயிரம் பொய் சொல்லி அவரை  படிக்க வைக்க வேலை வாங்க,காதலை தடுத்து,கண்ணீரோடு போராடி எதிர்த்து பேசி தீய பழக்கங்களுக்கு வருந்தி அவரை திருத்தி மனிதனாக்கி புனிதனாக்குவதற்குபடுவது பெரும் பாடு.மாலை போட்டு ஒய்வு வாங்கி உபயோகமில்லாது வீட்டில் முடங்கி கடனை கட்டி காசை இழ்ந்து மறுபடி வறுமை.
   

இறகு முளைத்த கிளிகள்  பறந்து போக தனிமையில் ஏங்கி முதுமையில் தளர்ந்து எப்போது வருவாய் எமனே என அழைத்து வரும் மரணத்திலும் துயரம் 

இறந்த உடலின் முன்பு பங்காளி சண்டை பாகப்பிரிவினைகள் முரண்பட்டதோளில் சுமந்து எரிப்பதா புதைப்பதா என்ற வாதம்.

இறந்த பின்னும் தீராது துயரம் திதிக்கு ஏங்கும் ஆவிகள் ஆசைகள் தீராது உலாவி வரும் உயிர்கள்.
    
இத்தனை துயரையும் எண்ணிபார்த்தால் வாழ முடியுமா?

ஆனால் அவை யாவும் துயர்களா விரும்பி ஏற்று கொண்ட சுமைகளா? 

இல்லை நாம் ரசித்து நாமே நடிக்கும் நாடகம்.

இன்பமும் துன்பமும் வாழ்வின் இருபக்கங்கள் துயரம் என்பது வாழ்விலே நொடித்து ஓடக்கூடிய தறி நூல் 

அப்போதைக்கு அப்போது இடை இடையே வரும் குறுக்கு நூல்களே இன்பங்கள்.

அவற்றை ரசித்து கொண்டே துயர நூல் எல்லாவற்றையும் தாங்கி கொள்கிறது.
       
சரி ஆனால் துயரத்தை துடைப்பதே எப்படி அது தானே கேள்வி.

துயரத்தை தடுக்க முடியாது ஆனால் மறுக்கலாமே.
    
இந்த துன்பங்கள் பிறந்து இறந்த அத்தனை உயிருக்கும் பொது தானே நமக்கு மட்டுமே உரிமையில்லையே.துயரத்தை துயரோடு சுமக்கிறவன் தானே துயரடைகிறான்.குழப்பமாக இருக்கிறதா?
     
சுமையை சுமையாக சுமப்பவன்தானே சுமையால் அழுகிறான்.தோளிலே இரு கிலோ அரிசி மூட்டை சுமை.ஆனால் வயிற்றிலே 2 கிலோ குழந்தை இனிமைதானே தாய்க்கு தோளிலே 10 கிலோ குழந்தைய்ம் இன்பம்தானே தந்தைக்கு.
       
லட்சலட்சமாய் பணத்துக்காக திரையிலே அழும் நடிகருக்கும் இதயத்திலே இன்பம்தான்.

ஆடிக்கொண்டே பாடிக்கொண்டே படகோட்டும் உழைப்பாளிக்கும் உழவனுக்கும் கூட உலகம் சுமையாக தெரியவில்லையே.
    
ஒரு துளி தங்கத்துக்காக ஒரு மலையளவு மணலை சலிப்பில்லாமல் சலித்தெடுக்கிறோமே.

எனவே வாழ்வு 

துயரமானது,
துன்பமானது,
சுமையானது, 
நெருக்கடியானது,
கடினமானது,
போராட்டமானதென்பது 

என்று சொல்வது பயமுறுத்துவதற்காக அல்ல 

அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் 
என்று புரிய வவைப்பதற்குதான் 

அதைவிட அதற்காக நமது உடலையும் மனதையும் தயார்படுத்தி கொள்வதற்காகத்தான்.
   
மன நல பயிற்சிகளாலும்,முயற்சிகள் பண்படுத்தபடுகிறது.
முன்னறிவு மன உறுதி தருகிறது 
வாழ்வை ஒரு விளையாட்டு போட்டியாக பாவித்து மகிழ்ச்சியுடன் விளையாடும் மனோபாவத்துடன் வாழ கற்று கொள்வதே விவேகமாகும் 

இதை மனோபவம் அதாவது நம்பிக்கையுடன் எதிர் நோக்கும் சந்திக்கும் சுபாவம் இருந்தால் சுமையான வாழ்வு கூட சுமையாகும்.
  
எப்படி ஒரு விளையாட்டு வீரன் 
முதல் நாள் தோல்வியை கனவு போல் உதறிவிட்டு 
மறு நாள் புதிய உற்சாகத்துடன்,
உத்வேகத்துடன் விளையாடுகிறானோ 
அது போல நாமும் வாழ வேண்டும்.

   
அப்போது நெருக்கடிகளை சவால்களாக ஏற்கும் மனோபவம் வந்து விடும் மேலும் பெரிய சவால்களை, மனம் விரும்பி வரவேற்கும் 

ஒன்றில் வெற்றி பெற்றதும் ஓயாமல் மற்றதற்கு விரும்பி விரும்பி ஏற்கும் அப்போது தான் அந்த மனிதன் மாமனிதனாவதற்கு வழி பிறக்கும் எந்த துறையில் இருந்தாலும் அதன் சிகரத்தை எட்டுவதற்கு அவனுக்கு வாய்ப்புகள் குவியும் சாதனைகள் உயரும்.
      
ஒரு இரும்பு துண்டை எஃகாக மாற்ற என்ன செய்கிறார்கள் அதற்கு மீண்டும் மீண்டும் ‘stress’ கொடுக்கிறார்கள் எப்படி அதீதமான குளிரிலும் வெப்பத்திலும் மாற்றி மாற்றி வதைக்கிறார்கள்.
     
அது போலவே துரும்பாக இருக்கும் மனிதன் இதய்ம் இரும்பாவதற்கு செய்யப்படும் சோதனைகள் வாழ்வு நமக்கு கொடுக்கும் நெருக்கடிகள் இந்த சோதனைகள் யாவும் நீ சாதனையாளன் ஆவதற்கு தகுதி உடையவன் தானா என்பதற்காக நடத்தப்படும் பரீட்சைகள் தானே 

தகுதியுள்ளவை மட்டுமே தொடரும் என்பது தானே உயிரின் பரிணாம தத்துவம்.
   
எனவே நெருக்கடிகளை கொசுக்கடிகள் போல உதாசினம் செய்து பழக வேண்டும்.

இடுக்கண் வரும் போது நடுக்கம் எடுக்க கூடாது 

துன்பம் வரும் பொது நடுக்கம் எடுக்க கூடாது 

துன்பம் வரும் போது துவள கூடாது.

அமைதியாக பதட்டபடாமல்  தயங்காது தளராது 
போராட்ட மனோபாவத்துடன் சந்திக்க வேண்டும்.

காலப்போக்கில் நெருக்கடி தரும் சம்பவங்கள் கூட பழகிப் போய்விடும்.

No comments:

Post a Comment