நன்றி
நன்றி என்ற வார்த்தை கூட நாளடைவில் ஒலி குறைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
பரபரப்பான பொருளாயுத உலகத்தில் , பொருள் ஆதாய தத்துவம் வளர்ந்தது ஆட்சியாளர்கள், தலைவர்கள், ஆசிரியர்கள், அந்நியர்கள், சகோதரர்கள் , பெற்றோர்கள் கூட சிலர் பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு , திசை மாறிப் போன போது ,நஞ்சு விளைந்தது, நன்றி மறந்து,கொஞ்சம் கொஞ்சமாக இணைப்பும் பிணைப்பும் மங்கும் போது நன்மையை உணரும் அறிவு தேய்ந்தது.
அந்த இடத்தில் நட்பிலே விரிசல் விழுந்தது தலைவனை , ஆசிரியனை , அனைதுள்ளவரையும், கூலிக்கு மாரடிக்கும் கும்பல் போல ஏளனமானபார்வை வளர்ந்தது.
தாய்மையை , தாம்பத்தையத்தை கூட உங்கள் உடலுறவுத் தேவைக்குத்தானே நாங்கள் பிறந்தோம் என வசைப்பாடியது.
விலை போகாது என்று தெரிந்த பின்னே, விவசாயிகள் விளைச்சலை நிறுத்தினார்கள். நன்றியில்லை என்ற போது தியாகத்தில் பிடிப்பில்லாது போனது, சமுதாயத்துக்கு பசை வறண்டு போனது,
அடுக்கி வைத்த செங்கல் போல ஆடுகிறது மாளிகை .தேனில் விழுந்தவர் ருசியுங்கள், தீயில் விழுந்தவர் எரியுங்கள் என்ற மனப்பான்மை வந்துவிட்டது. கிடைத்ததை சுருட்டும், கீழ்தரம் வந்து விட்டது. மேலிருந்துவிசம் கீழே பரவியது , தாம்பத்யம் கூட இறுக்கம் குறைந்தது. தாய்மை கூட வலிமை இழக்கிறது.
நன்றியுணர்வு மழுங்கியதால் நன்றி யென்ற வார்த்தை காணாமல் போனது நாவை விட்டு. நன்மைக்கு , நட்புக்கு நற்குணங்களுக்கு, நற்செயலுக்கு ஊக்கத்தொகை இல்லாது போனால் உணவிட்டு வளர்க்க ஆளில்லாது போனால் அது நசிந்து மடிந்து விடும்.
தாமரை இலையில் தண்ணீர் போல ஒட்டாது வாழும் நகரங்கள் நரகமாகிக் கொண்டே போகிறது. வக்கிரம் வன்முறை, கலவரம் வளர்கிறது உறவில்லாத, ந்ட்பில்லாத, ஒட்டுணர்வில்லாத மனிதர்கள் அடுத்தவரைப் பற்றி அக்கரையில்லாத, அலட்சியமான வாழ்வை வாழ்கிறார்கள்.
மீண்டும் ஒரு தன்னலமிக்க தனியொரு மிருகம் மனிதத்தின் மனக்குகையிலே முகாமிட்டு விட்டது. விளைவு? நல்லது இருந்த இடத்தில் கெட்டது இருக்கிறது. நன்மை செய்த பண்பு தீமையாகிவிட்டது. நட்பு உணர்வு கூட பகையாகிப் போனது. நன்றி என்பதுகாணாமல் போய் நயவஞ்சகமானது
இந்த மாற்றம் என்பதுஏமாற்றம் என்பதில் சந்தேகமில்லை. சிலர் பார்வையில் இது ஒன்றும் தவ்றில்லை . ஆனால் பலர் பார்வையில் இந்த போக்கு ஆபத்தாகுமோ என்ற அச்சமிருக்கிறது.
நமது கலாச்சாரத்தில் பயிருக்கு ஒளி தந்த பகலவனுக்கு நன்றி செலுத்தும் பண்பட்ட வழக்கமிருந்தது. நம்மோடு உழைப்புக்கு வந்த மாடுகளுக்கும் நன்றி செலுத்த மறந்ததில்லை. நாம் நமது சடங்குகள், சம்பிரதாயங்கள் யாவும் நட்புக்கு , உறவுக்கு, தாய்மைக்கு , வாய்மைக்கு, தலைவனுக்கு , தங்களுக்கு உரிய நன்றியும் , மரியாதையையும் ஒரு போதும் செலுத்த மறந்ததில்லை.
தேச பக்தியும் , தெய்வ பக்தியும் கூட நன்றியுணர்வினால் விளைந்த பண்புணர்வே. நன்றி என்பது நாய்களுக்கு மட்டுமே வரும் ஒரு நோய் என்றார் ஒரு தலைவர். அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை ஆனால் நமது அர்த்தமுள்ள இனிய கவிஞர் தனது வீட்டில் தனது நாய் படத்துக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
அது மனிதர்களுக்கு தமது குறைகளைச் சொல்லிக்காட்டவே உண்மை , வேறெந்த மிருகத்திடம் காணாத அந்த பண்புகள்தான் , இன்றும் அதை தன்னுடன் படுக்கையில் படுக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு அதற்கு அந்தஸ்து தந்துள்ளது. நாயாகப் பிறந்ததினால் நன்றியாவது மிஞ்சியிருக்கும் என மனம் வருந்தி எழுதினான் , ஒருவன் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் என்றான் . மற்றொருவன்.
நன்றி என்பது நம் இதய நாளங்களில் உறைந்து கிடக்கும் ஞாபகம். அது மறக்கப்பட கூடாது. நன்றி என்பது தான் நற்குணங்கள், யாவையும் பெற்றெடுத்த தாய். அதில் இருந்து தான் மற்ற நல்ல பண்புகள் யாவும் விளைகின்றன.
நன்றி என்ற ஒரு சிறிய வார்த்தைக்கு ஈடான இனிப்பானது, வேறெதுவும் உலகில் இல்லை . தான் மறக்கப்படுவதை உலகில் யாராவது விரும்புவார்களா என்ன?
ஆனால் நன்றி என்பது ஒரு விளைச்சல். அது ஒரு பழமரம், அது நஞ்சை நிலங்களில் தான் வளரும் . நல்ல மனங்களில் தான் நன்றியெனும் பயிர் விளையும். அது போல மனம் பண்பட்டவருக்கும், மனம்பண்பட பண்படத்தான் நன்றி போன்ற உயர் குணங்கள் உருவாகும் என்றார்கள்
தேளை எடுத்து கரையில் விட்டால் விட்டவரையே கொட்டுவது. ஆனால் தர்மங்களில் உயர்தர்மமாக போற்றப்படுவதுசுதர்மம் என்றார் கவிஞர். நட்பு அறுத்தவரை நன்றி கொன்றவரை கொன்று நீக்குதல் தர்மம் தான். ஆனால் நன்றி மறந்தவருக்கும், நன்மையே செய்வதுதான், சுதர்மம் என்பார்.
நன்றி கொன்றவர் வாசலுக்கு நாய் கூட வாராது . செஞ்சோற்றுக் கடன் மறந்தவன் பாவி என்றார்கள். நல்லவர்க்கும் பகையுண்டு. இங்கு ந்ன்றியில்லாதவர் சிலருண்டு என்றழுதார்கள்.
ஆனால்பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும். பால் தரும் கருணையானது என்று தாய்மை உயர்ந்தது. அன்பு, நன்றி, கருனை, கொண்டவன் மனித வடிவில் தெய்வம் என்றார். மனிதன் மனிதனாக இந்த மூன்று மந்திரங்கள் போதும் ,
அன்னை தந்தையே நேசிக்கும் நன்றியே முதல் அன்பு அது வாழ்ந்து மனித நேயமாக மாறி , சீவ காருண்யமாக மாறி புல் பூண்டுகளையும் நேசிக்க வைக்கிறது
நன்மை செய்தவருக்கு நாம் காட்டும் அன்பு என்பதே நன்றி. நன்மை அறியும் பண்பை நன்றியெனப் பெயரிட்டது நம் தமிழ்
நன்மை தனக்கு என்றறிவில்லாத விலங்குகள் நன்றியறியாதவர், நீரில் இழந்த தேளை நிலத்தில் விட்டவரைக் கொட்டும் பண்பு அது .
நன்மையை மதிக்கும் நன்றியெனும் உணர்வே மீண்டும் மீண்டும் நன்மை செய்ய ஊக்கும் மருந்து. மகன் பாசத்தின் நன்றியே தாய்மைக்கு விலை. மாணவன் காட்டும் மரியாதையே ஆசிரியனுக்கு சம்பளம். மனிதன் சொல்லும் ந்ன்றியே மருத்துவருக்கும் மருந்து. தொன்டன் செய்யும் நன்றியே தலைவனுக்கு ஊக்கம். மக்கள் வணங்கும் நன்றியே மன்னனுக்கும் கிரீடம் . அன்பும் , நன்றியும் வளர்ந்து கருணை என்பது செயலாகும்.
கிடைத்தவர் கிடைக்காதவருக்கும் பகிர்ந்தளிப்பது கருணை. இருப்பவர் இல்லாதவருக்கு விருந்தளிப்பது கருணை நல்லது நன்றி என்று சொல்ல மறக்க வேண்டாம். நன்றி வணக்கம் , இதைப் படித்தற்கு , அதைச் செய்தவருக்கு அநேக நன்றிகள்.
No comments:
Post a Comment