Thursday, March 20, 2014

பண்புள்ள பாதுகாப்பான ரசனைகள்

பண்புள்ள பாதுகாப்பான ரசனைகள்

உள்ளத்தில் ரசனைகள் உள்ளவரை
உலகத்தின் துயர்களால் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது
உள்ளம் என்பது ஆமையின் உடல் போல மென்மையானது
குளிர்,சூடு தாங்காது
அதற்கு ஒரு ஓடு வேண்டும்
மனித மனம் என்பது தோல் இல்லாத பல்லி,
ஒரு துயரத்தை தாங்காது
ஒரு சொல்லைத் தாங்காது
தான் நினைத்தது எல்லாம்
நினத்த உடன்
நினைத்த படியே
நடக்க வேண்டும் என்ற பேராசை காற்று நிரப்பிய பலூன்
     
சிறு ஊசி பட்டாலும் காற்றுப் போய் சுருங்கி விடும்
தொட்டாற் சுருங்கியான குழந்தை அது
 
அதை சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல‌
திட,திரவ,வாயு என‌
அதை அழவிடாமல் தூங்க வைக்க‌
அதை ஏங்க விடாமல் தாங்கிக் கொள்ள‌
மனிதன் கண்டு பிடித்தது ஏராளம்,
அதனால் விளைந்த துயர்களும் ஏராளம்

ஆனால் அழகு,அன்பு,இசை,இயற்கை,மனிதநேயம்
எனும் பண்புள்ள பாதுகாப்பான ரசனைகள்
கவசங்களாக உள்ளவரை இந்தத் துயரங்களால் நம்மை தொடமுடியாது

No comments:

Post a Comment