எத்தனையோ குரங்குகள் இருக்க ஹனுமனுக்கு மட்டும் ஏன் அத்துனை ஏற்றம் ஹனுமான் ஒரு வானர வீரர். அதாவது குரங்கின் இயல்பை உடையவர். சுக்ரீவனது வானர சைன்யத்தில் எத்தனையோ குரங்குகள் இருக்க ஹனுமனுக்கு மட்டும் ஏன் அத்துனை ஏற்றம்? ஏன் என்றா...ல் ஹனுமான் தன்னை முழுமையாக இறைவனான ராமபிரானுக்கே அற்பணித்ததால், ராமரின் கட்டளையை மீறி ஹனுமான் மூச்சு கூட விடமாட்டாராம். குரங்கின் இயல்பு கட்டுக்கடங்காமல் அங்கும் இங்குமாக ஓரிடத்தில் தாங்காமல் தாவிக்கொண்டே இருப்பது. ஆனால், ஹனுமான் குரங்கின் இயல்பில் இருந்து மாறி (அங்கும் இங்கும் தாவாமல்) எப்பொழுதும் ராமன் எங்கு உள்ளாரோ அங்கயே இருப்பார். சலனம் இல்லாமல் அந்த ஸ்திரமான தன்மையே குரங்கை ஹனுமனாக ஆக்கியது.
இங்கு ஒரு தத்துவம் ஒளிந்துள்ளது. நம்மிடமும் ஒரு குரங்கு கட்டுப்படாமல் நம்மை துன்புருத்துகிறது. அக்குரங்கை நாம் கட்டுப்படுத்தும் நுணுக்கத்தை மறந்துவிட்டோம். அது என்ன குரங்கு என்று யோசிக்கிறீர்களா? அந்த குரங்கின் பெயர் தான் "மனம்"
நமக்கு கட்டுப்படாமல் சதா அலைந்துகொண்டே இருக்கிறது. சிறு சிறு விஷயங்களைக்கூட பெரிதாக்கி நம் நிம்மதியைக் கெடுக்கிறது. நாம் ராமரை த்யானம் செய்து நம் மனதை கட்டுப்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
"மனம் ஒரு நல்ல வேலைக்காரன் ஆனால் கெட்ட எஜமானனாம்"
இனியாவது மனதை நம்கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்வோமாக...ராம நாமம் எழுதி
No comments:
Post a Comment