Thursday, March 20, 2014

அம்மா

அம்மா
                             
ஒரு விடலைப் பெண்ணுக்கும், அவளது அம்மாக்கும் ஏற்படும்,
கெமிக்கல் ரியாக்சன் என்பது சுவரஸ்யமானது
ஒரு ஜோடி ஆசிரியை மாணவி போல,
ஒரு ஜோடி சகோதரிகள் போல,
ஒரு ஜோடி தோழிகள் போல,
பெரும்பாலும் அப்பா என்பவர்

சரியாக,தெளிவாக,குடும்பத்தலைவனாக‌
இருந்துவிட்டால்,
இந்த அம்மா மகள்
தோழிகள் போல நெருக்கமாக‌
உல்லாசப் பறவைகளாக திரிகிறார் சிறகடித்து
சில அப்பாக்கள் நல்லவராக இருந்தும்
வல்லவராக இல்லாத போது தாயும் மகளும்
பொருளாதாரம்,குடும்ப நிர்வாகத்தில் சகோதரிபோல‌
ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்
ஆனால் அதிக பட்ச குடும்பங்களில்,
அப்பா அம்மா திருமண பந்தம் என்பது லயமில்லாத‌
அபஸ்வரமாகத்தான் இருக்கிறது
அப்போது அன்னையும் மகளும் எலியும் பூனையுமாக‌
கீரியும் பாம்புமாக எதிர் எதிராக நடக்கும் யுத்தம்
விவகாரமானது.அப்பாவும் ஏதாவது ஒரு கோஷ்டி
பக்கம் சேர்ந்து விட்டால் அப்பப்பா கேட்கவே வேண்டாம்

ரணகளமாகிப் போகிறது குடும்ப அமைப்பு.

No comments:

Post a Comment