மூன்று வகை உழைப்பு ...
உழைப்பை அகம், புறம் என்று பிரிப்போம். . வெளியல் தெரியாமல் உழைப்பது அகம். தெரிந்த்தது உழைப்பது புறம். அறிவு வெளியில் தெரியாமல் செயல்படுவது. உடல் உழைப்பு வெளியில் தெரிந்தது செயல்படுவது. இவை இரண்டும் போக இரண்டையும் இணைத்து செயல் படுவது மனம். மனம் உற்சாகமாக இருந்தால் மட்டும் தான் அந்த உழைப்பு வெற்றி பெற்றதாக இருக்கும்.
அப்படியானால் மனதை மூன்றாவது உழைப்பாக கொள்வோம்.
அனுபவமுள்ளவர்கள், படித்தவர்கள் அறிவைக் கொண்டு செயல்படுவர்.
மற்றவரையும் தங்களுடைய ஆலோசனை படி செயல்படச் செய்வர். இது அகச் செயல்.
இரண்டாவது ரகம் உடல் உழைப்பை மட்டும் கொண்டு செயல் படுவது. உடல் உழைப்புக்கு எச்சரிக்கை உணர்வைத்தவிர வேறு அதிக சிந்தனையோ, அறிவோ தேவையில்லை. சொன்னதைச் செய்யவேண்டும். சொந்தமாகச் செய்யத் தேவையில்லை. இவர்கள் மரபு வழி மாற்றங்களை பார்த்து அப்படியே செய்துகொள்வர். இது புறச் செயல்.
மூன்றாவது பலருக்குப் புரியாத தெரியாத அக உழைப்பு -உள்ளம், மனது. உழைக்கும் போது மனதில் உறுதி வேண்டும் என்று சொல்லுவது இந்த மனது சார்ந்த உழைப்பைத் தான் .உழைக்கும் போது மனதில் சலிப்பு ஏற்படாமல் உறுதியுடன் உழைப்பது.
மனம், உள்ளம் வலிமையாக இருக்க சூழ்நிலைகள் முக்கிய காரணம். உடல் பலம், பண பலம், சாதி மத பலம், அதிகார பலம், சேர்க்கை கூட பலம் தான். இவைகள் மனிதனுக்கு அறிவை விட உற்சாகத்தைக் கொடுக்கிறது. உறுதியான மனம் கொண்டவன் வெற்றிக்கு மேல் வெற்றி கொள்கிறான்.
உதாரணங்கள் : உடல் உழைப்பு - விவசாயர்கள் ,கைவினைக் கலைஞர்கள்
அறிவியல் உழைப்பு - விஞ்ஞானி, மருத்துவர், சட்டவல்லுநர்,
உள்ளம், மனது உழைப்பு -போர்வீரர்கள் ,அரசர்கள் மந்திரி அரசியல்வாதிகள்
No comments:
Post a Comment