Wednesday, June 17, 2015

விடாமுயற்சி தத்துவங்கள்

விடாமுயற்சி தத்துவங்கள்

விடாமுயற்சி எனும் செயலின் இறுதிவடிவம் வெற்றியாகும்.இவ் வெற்றிக்கனியை அடைவதற்கு இலட்சியம் எனும் ஒளி எவ்வித தடையுமின்றி பிரகாசமாக இருத்தல் மிக மிக அவசியமானதாகும்.

ஆனால் விடாமுயற்சியானது இவ்வுலகில் வாழும் உயிருள்ள அனைத்திற்கும் பொதுவானதாகும்.(சில உயிரற்றவற்றுக்கும் பொருந்தும்)
இதற்கு சில உதாரணங்கள் சில

  1. தேனீகளின் தேன் சேகரிக்கும் விடாமுயற்சி
  2. கடலலையின் விடாமுயற்சி
  3. தாவித் தாவி வளரும் கொடிவகைகள்(வெற்றிலை,பாகற்கொடி.....)
  4. புற்று கட்டுவதில் கறையானின் விடாமுயற்சி.
  5. அறிவாற்றலை பெருக்குவதை விடாமுயற்சியாகக்கொண்டு பல கண்டுபிடிப்புக்களை உலகிற்கு வழங்கியவர்கள்(தோமஸ் அல்வா எடிசன், ஜன்ஸ்டைன்....)
  6. மனதை கூர்மையாக்குவதை விடாமுயற்சியாக மேற்கொண்டு பல சூட்மங்களுக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டமை (யோகா)

இப்படியாக இறந்தகாலத்தில் நடந்தவற்றை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சிக்கு விளக்கங்கள் கொடுக்கலாம் இதனால் என்ன பயன் இருக்கிறது,? 

உதாரணமாக மனிதனை எடுத்துக்கொண்டால் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான  இலட்சியங்கள் உள்ளன ஒரு சிலரே மாத்திரம் இலட்சியத்தை விடாமுயற்சி மூலம் வெற்றியடைகின்றனர் மற்றவர்கள் தோல்வியை சந்திக்கின்றனர். ஒரு கேள்வி ஏன்? இவர்களும் விடாமுயற்சியினால் வெற்றியடையலாமே?

தேடிப்பார்த்ததில் சில காரணங்கள் தெளிவாகப்பட்டது அவை.....
  1. ஒருவருடைய ஜாதகப்பலன்-கிரகமாற்றங்களின் விளைவுகள் (விஞ்ஞானத்தில் எடுபடாதவை)
  2. அனுபவம் இல்லாமை
  3. வறுமை
  4. தோல்வி மனப்பான்மை.
  5. சேம்பேறித்தனமான உழைப்பு.
  6. இலட்சிய ஒளி பிரகாசிக்காமை.
  7. திறமையான ஆசிரியர்கள் வளம் இல்லாமை.
  8. சூழ்நிலைகள்
  9. நேரத்தின் வலிமை தெரியாமை
  10. புகழ்ச்சிக்கு அடிமையாதல்

இப்படியாக பல காரணங்கள் உள்ளன .

விடாமுயற்சியின் கணித சமன்பாடு
பயிற்சி+விடாமுயற்சி =வெற்றி

எப்படி இருப்பினும் விடாமுயற்சியினால் அனைவரும் வெற்றியடைந்தால் ????? 

விடாமுயற்சி
விடாமுயற்சியும் உடலுறுதியும் உறுதியாக இருந்தால் ஏணியில் ஏறுவதும் இறங்குவதும் இலகுவாகும்

No comments:

Post a Comment