அதிர்ஷ்டம் - தத்துவம்
அதிர்ஷ்டம் என்று குறிப்பிடுவது - எண்ணங்களுக்கே அல்லது ஏதேனும் முயற்ச்சிக்கோ உரமிடும் வகையில் கிடைக்கும் சக்தியை (உதவிகள்,பணம்,புகழ் ......) அதிர்ஷ்டம் எனலாம் இது நேரடியாகவே மறைமுகமாகவே கிடைக்கும்.
அதிர்ஷ்டம் சம்பந்தமான கருத்துக்கள்
- ஒருவருக்கு நல்லநேரம் பிறந்து விட்டால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.
- சுக்கிரன் பார்த்து விட்டான்
- இலட்சுமி கடாச்சம் உள்ளவர்
- செல்வதேவதை பார்த்துவிட்டாள்.
இப்படியாக அதிர்ஷ்டத்தை பணம் மூலமாக கணக்கிடுகின்றனர்.
அதிர்ஷ்டத்தை அடையும் வழிமுறைகள்
01. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ஊக்கம் உடையான் உழை'- திருக்குறள்
02.வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு - திருக்குறள்
03.'எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது' - ஷிவ்கரோ
04.'பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்பது பழமொழி
05.'வாழ்வு வருங்கால் வராது கண் தூக்கம்' என்பது பழமொழி
06.'முயலும் வரை முயல்வதல்ல முயற்சி முடியும் வரை இடைவிடாமல் முயல்வதே முயற்சி' - எங்கோ கேட்டது
.எங்கே இந்த விடா முயற்சி இருக்கிறதோ, அங்கே அதிர்ஷ்ட வாசல் திறந்து கொள்கிறது
எங்கே ஊக்கமும் அதன் பலனான விடாமுயற்சியும் இருக்கிறதோஇ அங்கே செல்வம்,அதிர்ஷ்டம் வழி கேட்டுக்கொண்டு வரும்.
மகிழ்ச்சியான மனநிலை வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.
ஒளியை நோக்கிச் சென்றால் நிழல் நம் பின்னால் தானாக பின்தொடர்ந்து வரும்.
மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கும்போது வெற்றிக்கனி அதாவது அதிர்ஷ்டத்தை நம் கைக்கு எட்டவைக்கலாம்.
தீய பழக்கங்களில் இருந்து வெளியே வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு நமக்கு திறந்துகொள்கிறது.
ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரமே இவ் அதிர்ஷ்டமானது சொந்தமாகவுள்ளது .ஏன்? எப்படி? என்றுபார்போமானால் ,அவர்கள்
- தாய் தந்தையரின் செல்வாக்கு,அரவணைப்பு.
- வாழும்மிடம் (வாஸ்து).
- ஜாதக அமைப்பு ("நந்தி வாக்கியம்" என்ற ஞானநூலின் செய்யுள் ).
- உழைப்பும், தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும், இன்முகப் பேச்சும் இருத்தல்.
- செல்வாக்கு.
அதிர்ஷ்டத்தை குறைக்கும் செயல்முறைகள்
- சில தீய பழக்கங்கள்.
- விழிப்புணர்வு இன்மை.
- இக்கரைக்கு அக்கரை பச்சை.
- ஒரு செயலைச் செய்யும் முன் நன்றாக திட்டமிடாமை.
- செயல் இன்றி பலன் இல்லை என்பதை உணரவேண்டும்
- மகிழ்ச்சியற்ற மனநிலை
- வெற்றி மனப்பான்மையின்மை.
- உள்ளத்தில் உயர்வு உள்ளல்லல்
- பொறுத்திருக்க வேண்டும் என்ற உணர்வற்ற நிலை
- தோல்வியைக் கண்டு பயந்து பின்வாங்குதல்
அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?
அது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?
No comments:
Post a Comment