ஒரு நிமிடம் கூட ஓயாதீர்கள்….
- எப்போதும் விரிந்து மலர்ந்து கொண்டே இருப்பது தான் வாழ்க்கை. யாருக்கும் பயனில்லாமல் சுருங்கி விடுவது தான் மரணம். தோல்வியின் மூலம் நாம் புத்திசாலிகள் ஆகிறோம். அதனால், எத்தனை முறை தோற்றாலும் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள்.
- ஒரு நிமிடம் கூட ஓயாமல், ஏதாவது ஒரு பணியைச் செய்து கொண்டே இருங்கள். அது தவறோ சரியோ, எதுவாக இருந்தாலும் பொருட்படுத்தவேண்டாம். நமது அகவாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டுமே நாம் காணும் உலகமும் சிறப்பும் தூய்மையும் கொண்டதாக இருக்கும்.
- சண்டையிடுவதோ, குறைசொல்வதோ தேவை இல்லை. நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை சிறிதும் உதவப்போவதில்லை. நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சூட்சும தன்மையை அடைந்து நம்மிடமே வந்து விடும்.
No comments:
Post a Comment