Wednesday, June 17, 2015

இரு முறை தத்துவம் -Two Times

இரு முறை தத்துவம் -Two Times
இரு முறை தத்துவம் என்பது அன்றாட வாழ்வில் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டியவையாகும் .

உதாரணமாக
  • வினாக்களுக்கு அளித்த விடைகள் சரியாக உள்ளதா என்று இரு முறை பார்த்தல்.
  • பணம் பரிமாறும் இடங்களான வங்கி ,கடைகள் என்பவற்றில் கூட பணம் இரு முறை எண்ணிப்பார்க்கப்படுகிறது
  • நோயளிக்கு மருந்து கொடுக்கும் போது.
  • காய்கறி வாங்கும் போது இரு முறை பார்த்த பின் தான் வாங்கப்படுகிறது.
  • துணிக்கடைகளில் உடுப்பு வாங்கும் போதும்
  • விமான நிலையத்தில்.
  • தொழிற்சாலைகளிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் கூட இரு முறை பரிசோதித்த பின்  தான் விற்பனைக்கு அனுமதிக்கிறார்கள்.
  • ஏன் உணவு வகைகளில் கூட முதலில் ருசி,மணம்,நிறம் பார்த்த பின் தான் வாங்குவதோ, சாப்பிடுவதோ உண்டு

இப்படி அன்றாட வாழ்க்கையில் பல விடயங்களில் இரு முறை ஆராய்ந்து தீர்மாணம் எடுக்கப்படுகிறது. ஏன் என்றால்?
  • ஏமாத்தப்படுவேம் என்ற உள்ளென்னம்
  • செயல்களில் உறுதி .
  • மன நிம்மதி
  • தரத்தை உறுதிப்படுத்தல் ஆகும் 

இவைகள் அனைத்தும் அன்றாட வாழ்வில் நடைபெறுபவை .

ஆனால் தமிழ் மருத்துவ முறைப்படியும்,சித்தர்களின் வாக்குப்படியும் இரு முறை என்பது காலத்துடன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்கள் ,அவற்றில் எனக்கு கிடைத்தவை,

தினம் இரு முறை
  • பல் துலக்குதல்
  •  மலம் கழித்தல் 
  • குளித்தல்
வாரம் இரு முறை
  • புதன் , சனிக்கிழமைகளில் தலைக்கு எண்ணை தோய்த்து முழுகுதல்
  • வீடு வாசல் கழுவுதல்
மாதம் இரு முறை
  • மனைவியுடன் கலவியில்  (உடலுறவு) ஈடுபடல் 
  • ஓய்வு எடுத்தல்.
  • வருமானம், செலவு என்பவற்றை மீட்டல்
  • பல் துலக்கியை மாற்றவேண்டும்
வருடம் இரு முறை
  • பேதி போக வைக்க வேண்டும்
  • வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்க மாத்திரை எடுக்கவேண்டும்
  • புது இடங்களுக்கு பயனித்தல்
  • முக்கிய இரத்தப்பரிசோதனைகள் (நீரழிவு,கொலஸ்ரோல்,....)

No comments:

Post a Comment