Wednesday, June 17, 2015

வாழ்க்கையின் தத்துவங்கள் ஏழு

வாழ்க்கையின் தத்துவங்கள் ஏழு

ஏழு என்பதற்கும் வாழும் வாழ்க்கைக்கும் நிறைய சம்பந்தமுண்டு.

சூரியனே மிகப்பெரிய சக்தியாக உள்ளது இச் சூரிய ஒளியில் மறைந்திருக்கும் நிறங்கள் ஏழு  ,

இந்த ஏழு நிறங்களும் ஒன்றேடுடன் இணைந்து  (இறைவனுக்கு மாத்திரம் தெரிந்த தொழிநுட்பத்தில்) வெள்ளெளியாக பூமி‌யை மிக சக்திவாய்ந்த ஒளிக்கதிர்களாக வந்தடைகிறது.

ஆகவே ஏழுக்கு ஒருவித சக்தியுள்ளது என்பது வெளிப்படையாகிறது,இதனை கருத்திற் கொண்டு எமது முன்னோர் வாழ்க்கைக்கு மிக முக்கிய பக்கபலமாக இருப்பவற்றை ஏழு  விதமாக பிரித்துள்ளனர் அவையாவன.

கவனிக்க ஏழு விடயங்கள்
  1. கவனி உன் வார்த்தைகளை
  2. கவனி உன் செயல்களை
  3. கவனி உன் எண்ணங்களை
  4. கவனி உன் நடத்தையை
  5. கவனி உன் இதயத்தை
  6. கவனி உன் முதுகை (பின்னாலுள்ளவர்கள்)
  7. கவனி உன் வாழ்க்கையை

வழிகாட்டும் ஏழு விடயங்கள்
  1. சிந்தித்து பேசவேண்டும்
  2. உண்மையே பேசவேண்டும்
  3. அன்பாக பேசவேண்டும்.
  4. மெதுவாக பேசவேண்டும்
  5. சமயம் அறிந்து பேசவேண்டும்
  6. இனிமையாக பேசவேண்டும்
  7. பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விடயங்கள்
  1. மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
  2. பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
  3. பிறருக்கு உதவுங்கள்
  4. யாரையும் வெறுக்காதீர்கள்
  5. சுறுசுறுப்பாக இருங்கள்
  6. தினமும் உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்
  7. மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

நன்மை தரும் ஏழு விடயங்கள்
  1. ஏழ்மையிலும் நேர்மை
  2. கோபத்திலும் பொறுமை
  3. தோல்வியிலும் விடாமுயற்ச்சி
  4. வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
  5. துன்பத்திலும் துணிவு
  6. செல்வத்திலும் எளிமை
  7. பதவியிலும் பணிவு

மனித வாழ்வில் இருந்தும் பயனற்றவை ஏழு
  1. தன்னுடைய குறையை மறைத்து மற்றவர்களின் குறை,குற்றங்களை ஆராய்தல்
  2. கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத மனைவி
  3. கோபத்தைக் கட்டுப்படுத்த தெரியாத அரசர்
  4. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்
  5. தாக விடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்
  6.  நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு
  7. வயதான காலத்தில் பெற்றோருக்கு உதவாத பிள்ளை

தீமை தரும் ஏழு விடயங்கள்
  1. பேராசை
  2. முதியோரை மதியாமை
  3. மண்,பொன்,‌பெண் ,போதை என்பவற்றின் பக்கவிளைவுகளை சிந்திக்காமை
  4. நம்பிக்கை துரேகம்
  5. நேரத்தினை வீணடித்தல்
  6. அதிக நித்திரை
  7. வதந்தியை நம்புதல்

No comments:

Post a Comment