Monday, November 11, 2013

இராமலிங்க அடிகள் கொள்கைகள்

* கடவுள் ஒருவரே.  அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். 

* புலால் உணவு உண்ணக்கூடாது. 

 * எந்த உயிரையும் கொல்லக்கூடாது. 

* சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. 

*  இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். 

 * எதிலும் பொது நோக்கம் வேண்டும். 

* பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். 

 * சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது. 

 * எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

* நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. 
  
* தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.

 * மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. 

 * ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. 

* பொருளை இச்சித்து பொய் சொல்லாதே. 

 * பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. 

* இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. 

* குருவை வணங்கக் கூசி நிற்காதே. 

* வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே 

* தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

No comments:

Post a Comment