Tuesday, November 19, 2013

கைக்குத்தல் அரிசியின் முத்தான மகத்துவங்கள்

 இன்று மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நமது உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகின்றன. அதனால் நமக்கு ஏற்படும் நன்மையை காட்டிலும் தீமையே அதிகம். இதனால் இன்று பலர் தனது உணவு பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ள பெரிதும் ஆசைப்படுகின்றனர்.

நாவிற்கு சுவை தரும் உணவை காட்டிலும், உடலுக்கு நன்மை தரும் உணவுகளே சிறந்தது.

கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும்.

இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை அரிசியைக் காட்டிலும் கைக்குத்தல் அரிசியானது அதிக சுகாதார பலன்களை கொண்டது.

கைக்குத்தல் அரிசியானது நார்ச்சத்தை தக்கவைப்பதால் நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவும்.

உடல் எடையை குறைக்க உதவும் உணவுவகைகளில் இது ஒரு முக்கிய உணவாகும்.

மங்கனீஸ் நிறைந்துள்ளது

ஒரு கப் கைக்குத்தல் அரிசியில் நமக்கு ஒரு நாளில் தேவைப்படும் 80% மாங்கனீஸ் சக்தியை கொண்டுள்ளது.

மங்கனீஸ் நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டில் இருந்து சக்தியைப் பெற்று நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை கட்டுப்படுத்த உதவுகின்றது.

எடை குறைப்பு

கைக்குத்தல் அரிசியின் முக்கிய சுகாதார பலன் அதில் உள்ள எடைகுறைக்கும் தன்மை தான்.

அதில் நிறைந்துள்ள நார்ச்சத்து நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைத்து அதனை ஜீரணிக்க அதிக சக்தி தரும். இவை மட்டுமல்லாது நார்ச்சத்து நமது பசியை நீண்ட நேரம் வரை தக்க வைத்து அதிக உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும்.

இதயத்திற்கு நல்லது

கைக்குத்தல் அரிசியின் பதப்படுத்தலில் அதன் மேல்தோல் மட்டுமே நீக்கப்படுவதால் அதன் தன்மை குறையாமல் முழுதானியமாக இருக்கின்றது.

இதன் முழுதன்மையினால் நமது உடலில் அர்டீரியல் பிளேக் உருவாக்குவதிலும் இதய நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் அதிக இரத்தக் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள மெக்னீஷியம் நமது உடலில் க்ளுகோஸ் இன்சுலின் சுரக்கும் நொதிகள் போன்ற 300 மேலான நொதிகள் உருவாக்க உதவுகின்றது.

பதப்படுத்தப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் தரும் கார்போஹைட்ரேட்டுகளை காட்டிலும் கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

குழந்தைகளின் உணவு

கைக்குத்தல் அரிசியில் இயற்கை சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த முதல் உணவாக இருக்கின்றது.

வளர்ந்து வரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவைப்படும். கைக்குத்தல் அரிசியானது குழந்தைகளிடையே ஆஸ்துமா நோயை 50% வரை கட்டுப்படுத்தியுள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment