Monday, November 18, 2013

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்? *எனது இந்த பிறப்பிற்கு முன்னர்வரை நான் எங்கு இருந்தேன்? *வாழும் இந்த வாழ்வினை சரியான முறையில் வாழ்கின்றேனா? *என் ஆயுட்காலம் முடியும் போது நான் எப்படி மரணத்தை எதிர் கொள்ளப்போகிறேன்? *இறந்த பின்னர் நான் எங்கு செல்லவிருக்கிறேன்? *மறுமைக்கு தேவையானே அனைத்து புண்ணிய காரியங்களையும் செய்து விட்டேனா? -போன்ற மனித வாழ்வின் அடிப்படை கேள்விகளை, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னை தானே கேட்டிருக்க வேண்டும். பின்னர் அதற்கு விடை தேடும் புண்ணிய பணிகளிலும் இறங்கி இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லையெனில், ஒருவன் தனது இந்த கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை வீனடித்துகொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

“செல்வம், மனைவி, மக்கள், உறவெல்லாம் சிலகாலமே நம்முடன் இருக்கும். நாம் ஒருநாள் இறக்கும் தருவாயில் நமக்கு அனுகூலம் தரப்போவது நாம் இதுவரை செய்து வந்த புண்ணிய கர்மாக்களே. நம்முடன் கடைசி வரை துணை வரப்போவதும் அந்த கர்மாக்கள் மட்டுமே. ஆகவே முடிந்த வரை அந்த புண்ணிய காரியங்களை செய்து வர வேண்டும். சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும். என்றும் ஆன்மாவுக்கு நலம் தரும் செயல்களையே செய்ய வேண்டும். பகவான் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதைமட்டும் தான்.
- எனவே உயரிய எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, பின்னர் அவைகளை செயல்படுத்த தொடங்க வேண்டும்

No comments:

Post a Comment