நம் வாழ்வில் ஒரு சில நேரங்களில் பிறரின் அறிவுரைகளை நாட வேண்டி வரும். குறிப்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும். பணிசார்ந்த தீர்மானங்கள் எடுக்கும் போதும் மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால், ஒரு சிலர் நமக்குதேவையில்லாத போதும். நம்மை கட்டுக்குள் வைக்க தானாகவே அறிவுரைகளை வழங்குவார்கள். இவ ர்கள் நமக்கு அறிவுரைகள் அளிப்பது மட்டுமல்லாது, நமது வாழ்வை தீர்மானிக்க முற்படுவார்கள்.
ஒரு சிலர் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும், தன் கட்டுப் பாட்டுக்குள் வைக்க விரும்புவார் கள் அல்லது, தான் நினைக் கும் வழியில் செல்வதற்கான எல்லாவ ற்றையும் செய்வார்கள். கண்டிப்பா க உங்கள் வாழ்நாளில் ஒரு தட வையாவது இப்படிப்பட்ட சிலரை நீங்கள் சந்திக்க நேர்ந்திருக்கும். இவர்கள் தானே எப்பொழுதும் முத லாளியாக இருக்க வேண்டுமென்று நினைத்து நம்மை ஆட் டிப் படைப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களை நம்ப வைப்ப து மற்றும் அவரோடு சேர்ந்து இரு ப்பது சிறிது கடினம் தான். இவர்கள் யாருடைய அறிவுரைகளையும் கேட்க மாட்டார்கள். மேலும் அவர் களின் வழியை கட்டுப்படுத்த விரும் பமாட்டார்கள். இப்படிப்பட்டவர்க ளை சிறிது காலம் தான் பொறுக்க முடியும். பின்னர் இந்த கட்டுப்பாடுகள் பெரும் தொல்லையா கிவிடும். இப்படி மனம் போன போக்கில் நம்மை கட்டுப்படுத் துபவர்களின் நடவடிக்கைகளும், கட்டளைகளும் எல்லோ ரையும் சினம் கொள்ளச்செய்யும்.
இப்படிப்பட்டவர்களை கட்டுப்படு த்த திறமையான நடவடிக் கைக ளும் எண்ணங்களும் கொண்ட சிலரால் மட்டுமே முடியும். அவர் களின் ஆணவத்தையும், தேவை களையும் புரிந்துகொண்டு, அவர் க ளின் போக்கில் செல்வது தான் அவர்களை கட்டுப்படுத்தும் ஒரே வழி. அதனால் இப்பொழுது இப்படிப்பட் டவர்களை சமா ளிக்க சிறந்த வழிகள் சிலவற்றை பார்க்கலா ம்.
மனம்போன போக்கில் நடந்துகொள்பவர் களை கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!!!
1. வாக்குவாதம் செய்வதை தவிர்த்தல்:
இப்படிப்பட்டவர்களோடு எப்பொழுதுமே வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்களால் தனது தோல்வி யை சந்திக்க முடியாது. அதனா ல், உங்கள் காரியத்தை சாதித் துக்கொள்ள அவர்கள் சொல்வ து சரிஎன்று கூறிவிட்டு உங்கள் தேவையை நயந்து கேளுங்கள். இதனால் அவர்களுக்கு தன்னை முக்கியமாக கருதுவதற்கும் அவர்களின் வேலையை தானே செய்வதற்கும் வழிவகுக்கும்.
2. எதிர்மறையாக நினைக்காதீ ர்கள்:
இவர்கள் நம் வாழ்வில் நல்ல தை செய்யாவிட்டாலும் தீர்வு எடுப்பதிலும் ஏற்பாடு செய்வதி லும் சிறந்தவர்கள். அதனால் அவர்களின் கெட்ட நடவடிக்கைகளை தவிர்த்து நல்லதையே எடுத்துக்கொள்ளுவோம்.
3. ஜோக் அடியுங்கள்:
எல்லோரிடமும் அவர்களது மன நிலையை மாற்றகூடிய வழி ஒன்று இருக்கும். எல்லோரும் கண்டிப்பாக நல்ல நகைச்சுவைக் கு சிரிப்பார்கள்.இதுவே இப்படிப்ப ட்டவர்களை கையா ளுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று.
4. எதுமே ரியாக்ட் செய்யாத நிலையில் இருப்பது:
சிலர் நாம் எதை பயன்படுத் தவேண்டும் எதை செய்ய வேண்டும் என்பதில் அறிவு ரை கூறுவார்கள். அது ஷா ம்பூவில் இரு ந்து உங்கள் கேர்ள் ப்ரெண்ட் மற்றும் உணவு உட் கொள்ளுவது வரை இருக்கும். எந்த சிறு விஷயமாக இருந் தாலும் அறிவுரை அளிப்பார்கள். இவர்களை மாற்றுவதற்கு ம் கையாளுவ தற்கும் ஒரே வழி அவர்களை தவிர்த்து எந்த ரியக் ட்ஷனும் காட்டாமல் இருப்பது தான். நீங்கள் அவர்களின் அறிவு ரைகளை எதிர்த்து செயல்படா மல் இருந்தால் அதனை பெரிது படுத்த மாட்டார்கள். அதனால் பொருட்படுத்தாமை பேரின்பம் அளிக்கும் என்பது இவ்வகை மனிதர்களை கையாள உதவும்.
5. விட்டு விலகுதல்:
இவர்கள் உங்கள் வாழ்வை பாழாக்குவதாக இருந்தால் இன் னும் ஏன் அவர்களோடு இருந்து வருந்தவேண்டும். அவர்களைவிட்டு விலகி அவ ர்களை தவிர்ப்பதே சிறந்த வழியாகு ம். இதன் முடிவாக உங்களுக்கு அவர்களின் குறுக்கீடு பிடிக்க வில்லை என்பதை அறிவார்கள்.
இவையே இப்படிப்பட்டவர்களை கையாள்வதற்கான ஒருசில டிப்ஸ்கள். இவை கடினமாக இல்லா விட்டாலும் தொடக்கத்தில் இப்படி ப்பட்டவர்களை கையாள்வது மிக வும் கடினம்தான். அதுமட்டுமின்றி, இந்த டிப்ஸ்களுடன் அவர்கள் கட்டு ப்படுத்து வதை கேட்காமல் இருப்பதும் சிறந்த வழி தான்.
No comments:
Post a Comment