இன்றைய நவீன உலகம் போட்டி நிறைந்தது அதில் யார் சவால்களை சமாளித்து எதிர் நீச்சல் போடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியடைய முடியும் யார் அடுக்கடுக்கான தோல்விகளை சந்தித்து சோர்வடைகிரார்களோ அவர்கள் வெற்றி பாதையை கடக்க முடியாது .
உங்களுக்குள் நீங்களே அறியாத ஒரு சக்தி புதைந்து இருக்கிறது என நினைத்து தோல்வியில் துவளாது செயலில் இறங்கினால் நிச்சயம் வெற்றி உங்களுக்கு கதவினை திறக்கும் அத்துடன் அல்லாஹ் நமக்கு துணை நிற்கிறான் என நினைப்பீர்களானால் உங்களை யாரால் தோற்கடிக்க முடியும்?
தோல்வியில் மனம் சோர்ந்து போகும்பொழுது ஒரு மனிதனை நிம்மதியிழக்க செய்கிறது அந்த நேரத்தில் அமைதியாக சற்று அல்லாஹ்வின் படைப்புகளையும் அவைகளின் செயல்பாடுகளையும் சற்று சிந்தித்து பாருங்கள் ஓடும் நீரோடைகள் கரடு முரடுகளை கடந்து சலசலக்கும் ஓசையுடன் சென்று எவ்வாறு மக்களுக்கு பயனளிக்கிறது என்று சற்று சிந்தித்து பாருங்கள் .
முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எண்ணி துணிக கருமம் என்ற தெளிவான கொள்கையினை வைத்திருப்பார்கள் அதைனையே சமுதாயமும் மேற்கொண்டால் சமுதாயம் வளர்ச்சியடையும் அதற்க்கு முக்கியமாக கருதபடுவது நாணயம்,அறிவு,நம்பிக்கை,தெளிவான பாதை,தயாளம்,பயமின்மை,பொறுமை,உண்மையினை ஒத்துகொள்ளுதல்,கிடைத்த பொருளை மட்டும் வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வது,குறித்த காலத்தில் வேலையினை முடிப்பது, வேலைபளுக்கிடையில் குடும்பத்தினை காப்பது போன்ற செயல்களால் முன்னேற்றம் பாதையில் வீறுநடை போடலாம் .
வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தும் போது மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையே..அதனை வாழ்கையில் ஒரு அங்கம் என நினைக்க வேண்டும் நவீன உலகத்தில் மன அழுத்தத்தினை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் .மன அழுத்தத்தினை கீழ்க்கண்ட அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .கவனக்குறைவு,சக்திகுறைவு,உற்சாக குறைவு,கோபம்,எரிச்சல்,தலைவலி,வாழ்கையில் வெறுப்பு .போன்றவைகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெற வேண்டியது அவசியம் .
கீழ் காணும் வழிமுறைகள் மூலம் மன அழுத்தத்தினை போக்கலாம்.மன அழுத்தம் வாழ்வில் ஒரு அங்கம் என எடுத்துகொள்ள வேண்டும்,இதற்க்கான காரணத்தை ஆராய வேண்டும் ,மன அழுத்தத்தினை நீக்க முடியவில்லை என்றால் ஒரு பேப்பரில்எழுதி வைத்து மனதளவில் ஏற்றுகொள்ளும் மன பக்குவம் வேண்டும் ,நாம் எதிர்பார்த்த இழப்பைவிட மிக குறைந்த அளவே இழந்திருக்கிறோம் என அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல வேண்டும் ,இதுபோன்ற உறுதியான நம்பிக்கை கொண்டவர்களே வாழ்வில் ஏற்றம் பெற்று திகழ முடியும் .
No comments:
Post a Comment