காயத்ரி மந்திரம் -ரிக்வேதம் 3:62:10
விசுவாமித்திரர் இயற்றிய (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10) உள்ள மந்திரம் தான் காயத்திரி மந்திரம் ஆகும். இது மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகும். இதை தினமும் செப்பித்தால், எல்லா சௌபாக்யங்களும் கிட்டும்.
| ஓம் | என்றால் பரம்பொருளாகிய இறைவன்.
| பூர்: | என்பது பூர்ஹ் என்று உச்சரிக்கப்படுதல் ஆகும். பூர்: என்றால் பூமி எனப் பொருள்படும். இறைவன் பூமியில் நம்முடனே இருக்கிறார். எவ்வுயிரிலும் இருக்கிறார். பூமி முழுவதும் எங்கும் நிறைந்திருக்கிறார். இந்த பூமி நம்மால் பார்த்து, உணரக்கூடிய ஓர் இடம். இறைவன் நம்மால் பார்த்து, உணரக்கூடிய நிலையிலும் இருக்கிறார்.
| புவ: | என்பது புவஹ் என்று உச்சரிக்கப்படுதல் ஆகும். புவஹ் என்றால் வானம். இறைவன் வானமெங்கும் நிறைந்திருக்கிறார். வானத்தை நம்மால் காண மட்டுமே முடியும். அதை நாம் தொட்டு, உணர இயலாது. இறைவன் நம்மால் காணமட்டுமே முடிந்த உணரமுடியாத ஒன்றாகவும் இருக்கிறார்.
| ஸுவஹ | என்பது ஸ்வஹ என்று உச்சரிக்கப்படுதல் ஆகும். ஸ்வஹ் என்றால் வானத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. அதுவே ஆங்கிலத்தில் ’beyond universe’ எனப்படுகிறது. இந்த நிலையை நம்மால் காணவும் முடியாது உணரவும் முடியாது.. அங்கும் இறைவன் நிறைந்திருக்கிறார். அந்த தன்மை இறைவனுக்கும் உண்டு.. இறைவன் நம்மால் காண முடியாத உணர முடியாதவராகவும் இருக்கிறார்.
| தத் ஸவிதுர் | என்றால் ‘அந்த ஞானஒளி’
| வரேண்யம் | என்றால் ‘அளவுக்கடந்த பக்திக்கும் அன்பிற்கும் உரியவரே’
| பர்கோ | என்றால் பிரகாசமான சுடரொளி
| தேவஸ்ய | என்றால் தெய்வீகமான
| தீமஹி | என்றால் எங்கள் முழுச்சிந்தனையும் உன்னோடு செலுத்தி உன் எண்ணத்திலேயே தியானத்தில் மூழ்குகிறோம்
| தியோ: | என்றால் ஞானம், விவேகம், சிந்திக்கும் திறன்
| யோந: ப்ரச்சோதயாத் | என்றால் நீயே எங்களுக்கு அறிவைப் புகட்டு
இம்மந்திரத்தின் குறுகிய அர்த்தம் என்னவென்றால், பூர்: புவ: ஸ்வஹ என்ற மூன்று நிலையும் கொண்ட, உணர்ந்த அந்த ஞானஒளியாக திகழும் பரம்பொருளே,.. எங்களின் அளவுக்கடந்த பக்திக்கும் அன்பிற்கும் உரியவரே,.. பிரகாசமான சுடரொளியே, தெய்வீகமானவரே, எங்கள் முழுச்சிந்தனையும் செலுத்தி உன்னையே நினைவில் கொண்டு தியானத்தில் மூழ்குகிறோம். எங்களின் ஞானம், விவேகம், சிந்திக்கும் திறன், புரிந்துணர்வு, பேராற்றல் ஆகிய அனைத்தையும் நீயே எங்களுக்கு புகட்டுவாயாக.
காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் (பாடல் எண்; 153) பின்வருமாறு பாடியுள்ளார்.
"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"
இம்மந்திரத்தைக் காலை எழுந்து நீராடிவிட்டு பூஜை அறையில் அமர்ந்து தியானிக்கும் போது செப்பித்தால் மிக்க நன்மை உண்டாகும். எல்லா இந்துக்களும் அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டிய முதல் மந்திரம் இதுவாகும். அனைவரும் இம்மந்திரத்தை செப்பித்து நல்பேறு பெறுவோம்.
No comments:
Post a Comment