ஸ்ரீ மத் ராமாயணத்தில் கலியுகத்தில் என்னென்ன நடக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.
அவை:
1. மனம் போனபடி நடப்பதே வழி என்பார்கள்.
2. ஒவ்வொருவருக்கும் தனித் தனி நியாயம்.
3. நீதி நூல்கள் படிக்கக் கிடைக்காது.
4. அறங்கள், தீயவர்களின் தூண்டுதல் மற்றும் பேராசையில் நடத்தப்படும்.
5. சுய விளம்பரம் செய்பவன் அறிவாளி ஆவான்.
6. போலிகள் புகழும் பெருமையும் பெறுவார்கள்.
7. உள்ளன்று வைத்துப் புறம் பேசுவோர் மகான்கள் ஆவார்கள்.
8. ஊரார் பொருளைக் கொள்ளையடிப்பவர்கள் கெட்டிக்காரர்கள் ஆவர்.
9. நெறிப்படி நடப்பவர் அறிவிலிகள்.
10. துறவிகள் அநியாயமாக செல்வம் சேர்ப்பர்.
11. ஞானம், தவம் ஆகியவை கேலிக்குள்ளாகும்.
12. பொய் பேசுபவர்கள் புலவர்கள்.
13. உண்மையாக உழைப்பவர்கள் ஏழையாக இருப்பார்கள்.
14. தற்பெருமைக்காக தானம் வழங்குவர்.
15. ஆயுதங்கள் முக்கியமாகும்.
16. விரசமான நூல்கள் பெருகும்.
17. மக்கள் உடலை வளர்ப்பார்கள்; உறுதியை மதிக்க மாட்டார்கள்.
18. மனைவி வந்த பின் பெற்றவர்களை அலட்சியப்படுத்துவார்கள்.
No comments:
Post a Comment