Friday, October 21, 2016

நிராகரிக்கப்படும் என்ற அச்சமின்றி நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்!

நீங்கள் விரும்புவதைக் கேட்டுப் பெறக்கூடிய திறமையும், நீங்கள் விரும்புவதைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தால் இந்த உலகம் உங்களுக்கு வேண்டியவற்றைப் பெற்றுத் தரும். சில மனிதர்கள் உண்மையிலேயே கேட்பதிலும், அவர்கள் விரும்புவதைப் பெறுவதிலும் புத்திசாலிகள். ஏனென்றால் அவர்களால் அது முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதிர்ஷ்டத்திற்கு இதில் சிறு பங்குதான் என்றாலும், மற்றவர்கள் இவர்களை மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகத்தான் பார்ப்பார்கள்.

சுய-பரிணாமத்திற்கான உபகரணங்களில் மிக முக்கியமானது தான் விரும்புவதைக் கேட்கக்கூடிய ஆற்றல். பலர் தாங்கள் விரும்பும் அல்லது தங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை எப்படி கேட்பது என்று தெரியாததால் பின் தங்கி விட்டார்கள். அவர்கள் தகவல்கள், வழி, உதவி, புதிய கண்டுபிடிப்புக்கான பண உதவி மற்றும் ஊதிய உயர்வு மூலம் சிறந்த வாழ்க்கை ஆகியவற்றை கேட்டுப் பெற பயந்தவர்கள். அவர்கள் முட்டாள்களாகவோ, தேவை உடையவர்களாகவோ பார்க்கப்பட்டு விடுவோமோ என்ற உணர்வால் தடுக்கப்பட்டவர்கள். ஆனால் நீங்கள் விரும்புவது ஒரு முத்தம், அரவணைப்பு, அடுத்தவரின் பொன்னான நேரம், கவனிப்பு மற்றும் நம்பிக்கையானவர் என்று எதுவாக இருந்தாலும், தேவையென்று நீங்கள் நினைத்தால் கேளுங்கள்.

எது எப்படி இருந்தாலும், கேட்க வேண்டும் என்ற நிலை வரும்போது நம்முள் எழும் மிகப் பெரிய கேள்வி “நீ கேட்பாயா?!” என்பதுதான். மற்றவர்கள் நம்மைப் பற்றி இப்படித்தான் நினைத்து வைத்திருப்பர் என்று ஒரு பொழுதும் முடிவு செய்யாதீர்கள். அவர்கள் உங்கள் எ‎ண்ணங்களை தானாகப் படித்து வேண்டியதைக் கொடுப்பார்கள் எ‎ன்றும் உறுதி செய்யாதீர்கள். எப்பொழுதும் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்களாக அடுத்தவருக்குச் சொல்லும் வரை எவராலும் சரியாகக் கணிக்க முடியாது. நீங்கள் ஆசைப்பட்டதைக் கேட்பதற்கு அச்சப்படுவது உங்கள் வாழ்க்கை மற்றும் கனவுகளின் மூலம் நீங்கள் அடையக்கூடியச் சிறந்தவற்றை தவிர்த்ததாகிவிடும்.

சிறுபிள்ளைதனமோ, முட்டாளோ அல்லது தேவையுடையவரோ நாம் என்ற பய உணர்வு கேட்பதில் இருந்து நம்மைத் திசை திருப்பும். அடுத்ததாக நிராகரிக்கப்பட்டுவிடும் என்ற பயம் நாம் விரும்புவதைக் கேட்பதற்கானத் தைரியத்தையும் தராது. நம்மில் பலருக்கு நிராகரிப்பின் மேல் ஒரு மரணபயம். இந்த நிராகரிப்பின் மீதான மரணபீதி என்பது நாம் உருவாக்கி நமக்கே கொடுத்துக் கொண்ட ஒன்றுதான்.

இது போதாதென்று அடுத்து வருவது "இது மட்டும் இருந்திருந்தால்" என்ற பகுதி. நான் மட்டும் 20 பவுண்டு எடைக் குறைவாக இருந்திருந்தால்; என் தலைமுடியின் நிறம் மட்டும் இன்னும் பளபளப்பாக இருந்திருந்தால்; நான் மட்டும் உயரத்தில் 5’10” இருந்திருந்தால், என்னிடம் மட்டும் சிறந்த மகிழ்வுந்து, சிறந்த மனை இருந்திருந்தால்; நான் மட்டும் ஊரின் அடுத்த பகுதியில் வசித்திருந்தால்…. அவன்/அவள் என்னுடன் இன்றொரு நாள் வெளியில் வந்திருப்பார்கள். ஆதலால் இப்பொழுது நான் குண்டாக, விரும்பத்தகாத, ஏழ்மையான, தவறான தலைமுடி நிறத்துடன் அல்லது ஊரின் தவறான பகுதியில் வசிப்பவர் என்ற முடிவுக்கு வருகிறோம். அது ஒரு நம்பிக்கையாக உருவாகி நமது விருப்பமெல்லாமே

நாம் கேட்பவை நிராகரிக்கப்பட்டுவிடும் என்கிற பயத்தை நமக்குள் உருவாக்கி விடுகிறது.. ‏இறுதியில் ‘இல்லை’ எ‎ன்ற பதில் நாம் நம்மைப் பற்றி முதலில் நம்பியதற்கு வெறும் சாட்சியாகத்தான் வருகிறது.

ஒரு பொருளுக்கு ஆசைப்படும்பொழுது அது கிடைக்காதென்று முடிவு செய்யாமல், அதைப் பெறுவதற்கான அனைத்து நல்ல குணாதிசயங்களும் நமக்குள்ளது என்பதை நம்புவது மிக முக்கியம்.நீங்கள் கேட்கும் நபர் இல்லையென்று சொன்னாலென்ன? எதை இழந்தீர்கள், எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் தொடர்ந்து உறுதியாக மீண்டும் கேளுங்கள்.

நீங்கள் விரும்புவதைக் கேட்கத் தயாராக இருங்கள். அது ஊதிய உயர்வாகவோ, விடுமுறையாகவோ, நீண்ட உணவு இடைவேளையாகவோ, தள்ளுபடியாகவோ மற்றும் ஒப்பந்தமாகவோ இருக்கலாம். தாங்கள் விருப்பப்படுவது எதுவாக இருந்தாலும் கேட்கத் தொடங்குங்கள் மற்றும் பெறுவீர்கள் என்று எதிர்பாருங்கள். மேலும், மீண்டும் கேட்கத் தயாராகுங்கள் கிடைக்கும் வரை.

தங்களுக்குள் தாங்கள் கேட்கும் இந்த மூன்று கேள்விகள் ஒரு சிறந்த பயிற்சியாக அமையும்.

நான் விரும்புவது எனக்கு கிடைக்கப்பெற்றால்:

நான் எப்படி இருப்பேன்?

நான் அதை எப்படி உணருவேன்?

நான் அதனுடன் என்ன செய்யப் போகிறேன்?

அதே தருணத்தில், சில நேரங்களில் தாங்கள் விரும்புவது கிடைக்காமலும் போகலாம். ஆனால் உண்மையில், விரும்புவதைக் கேட்பது உங்களுக்குச் சிறந்த சந்தர்ப்பங்களையும் நீங்கள் விருப்பப்படுவது கிடைக்கும்வரை மீண்டும் மீண்டும் கேட்பதற்கும் கற்றுத் தரும்.

No comments:

Post a Comment