1.மேஷம்
நீங்கள், மேஷ லக்னத்தில் பிறந்தவர். இராசி மண்டலத்தின் முதலாவது ராசி மேஷம். அது, தீயைப்போல உக்ரமானது. உங்கuக்கு அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும். காதல் விவகாரங்களில் நீங்கள் கொஞ்சம்கூட, ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக இருக்கக் கூடியவர்.
நீங்கள், நல்ல சுபாவமும், வலிமையும் படைத்தவர். நீங்கள் பிறருடன் சண்டைபிடிப்பவர் நாசூக்கு அற்றவர் அவசரப்படக் கூடியவர் கோபக்காரர் செவ்வாயினால் ஆளப்படுபவர். நீங்கள் மகிழ்ச்சியுடனிருந்தாலும் மன உணர்ச்சிவெறி கொண்டவரல்ல காமவெறி உடையவரல்ல. நீங்கள் கூரிய புத்தியுடைய அறிவாளி நல்ல பெயர் சேர்க்கக்கூடியவர். அடர்த்தியான புருவங்களைக் கொண்ட நீங்கள், தைர்யம் மிக்கவர். உள்ளத்து உணர்ச்சிகளின் திடீர் உந்தலில் செயல்படுபவர். உங்களுக்கு உயரிய விவேகமும், அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளன. நீங்கள் எப்போதுமே மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய உயரிய லட்சியத்தைக் கொண்டவர்.
நீங்கள், மற்றவர்களுக்கு ஆணையிட்டு, நிர்வகித்திடும் பணிக்குச் சாலப் பொறுத்தமானவர். உங்களுக்கு, தசைப்பற்றுடைய உடல்வாக்கு இருக்கிறது. நீங்கள் விரைவாக செயல்படக்கூடியவர். நீங்கள் கர்வமானவர் சுயகௌரவத்துக்கு, மிகுந்த முக்யத்துவம் தருபவர். மற்றவர்களின் திறமையை, நீங்கள் குறைத்து மதிப்பிடுபவர் இது உக்ரமான ராசியாதலால், நீங்கள் எப்போதுமே, புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் கொண்டவர். இதற்கு செவ்வாயின் ஆதிபத்தியம் இருப்பதால், நீங்கள் சிறிய காயங்கள் மற்றும் பெறும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்
2.ரிஷிபம்
நீங்கள் ரிஷப லக்னத்தில் பிறந்தவர். ரிஷபம், நிலம் சார்ந்த நிலையான, இரண்டாவது ராசியாகும். இதற்கு அதிபதி சுக்ரன் எனவே உங்களுக்கு நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு மற்றும் வாயும், அகலமான தோள்களும், கரிய கண்களும், தலைமுடியும் இருக்கும். உங்களுக்கு சுருட்டை முடி இருக்கலாம். நீங்கள் கோபக்காரராக இருப்பீர்கள். நீங்கள் தீய குணமுடையவர். வாழ்க்கையில், சுகபோகங்களை அடைவதற்கு நீங்கள் விருப்பம் கொண்டவர். நீங்கள் மதுபானத்தில் மிகுந்த விருப்பமுடையவர். உங்கள் எதிர்பாலைச் சேர்ந்தவர்களின் நட்பை நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்களாகவே ரசித்து, அனுபவித்து இன்பம் காணக்கூடியவர். மிகவும் மோசமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் நீங்கள் மிகவும் பொறுமையாக இருப்பவர். ஒளிவு மறைவின்றி, எதிலும் மனம்விட்டு வெளிப்படையாக இருக்கக்கூடியவர்.
நீங்கள் நேர்மையான சுபாவம் கொண்டவராதலால், மற்றவர்கள் உங்கள் கருத்துக்களை சார்ந்திருக்கிறார்கள். நீங்கள் ராஜ தந்திரம் படைத்தவர் உங்கள் மனதைப் புரிந்து கொள்வது, அவ்வளவு எளிதல்ல. நீங்கள் தோட்டங்கள், மனைகள் போன்ற எஸ்டேட் வசதிகளையும் அனுபவிப்பீர்கள். கலையில் ஆர்வம் கொண்ட நீங்கள், கலைசார்ந்த முயற்சிகளில் மிகப் பிரமாத வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு மென்மையான சருமம் இருக்கும். அழகையும் டாம்பீகமான சொகுசையும், மிகவும் விரும்பும் நீங்கள், உங்கள் இல்லத்தில் ஆசை கொண்டவர். உங்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். உங்கள் மனைவி/கணவர் - உயரிய அந்தஸ்தில் இருக்கக்கூடும். நீங்கள் பதட்டப்படாமல், மென்மையாக பேசக்கூடியவர் ஓரளவிற்கு, உங்கள் சுபாவத்தில், பெண்மை குடிகொண்டிருக்கும். இளகிய, கருணை நெஞ்சம் படைத்த நீங்கள், நல்ல மனிதர்களுடன் சம்பந்தப்பட்டவர். உங்களுக்கு நீண்ட பற்கள் இருக்கும். சமுதாயத்தில் நீங்கள் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். ஆழ்ந்த உள்ளத்து உணர்ச்சிகளைக் கொண்ட நீங்கள் அமைதியை விரும்புகிறவர். சமுக மற்றும் குடும்ப ரீதியிலான கடமைப் பொறுப்புக்களை, நீங்கள் எப்போதும் நிறைவேற்றி வைத்திட முயலுகிறீர்கள். காதல் விவகாரங்களில், நீங்கள் எப்போதுமே, விசுவாசத்துடன் இருக்க முயற்சி செய்கிறீர்கள்.
குடும்ப ரீதியில் நல்ல மகிழ்ச்சியை அனுபவிக்கும் நீங்கள், எப்போதுமே குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தில் மிக்க ஆர்வம் கொண்டவர். நல்ல உடுப்புக்களை விரும்பும் நீங்கள் வாழ்க்கையில், பல சுகபோகங்களையும் ரசித்து அனுபவிக்கக் கூடியவர். 36 வயதில், உங்களுக்கு சில தொல்லைகளும் பிரச்னைகளும் ஏற்படலாம்
3.மிதுனம்
நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்தவர். மிதுனம், ஒரு பொதுவான ராசி ராசி மண்டலத்தில், அது முன்றாவது ராசி எனவே, கோதுமை நிறத்தையத்த மாநிறமாக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் சிரித்துப் பேசி சந்தோஷமாக இருக்கும் ஒரு பிறவி. கலைகளிலும் பாடல்களிலும் உங்களுக்கு கொள்ளை ஆசை. உடல் இன்பங்கள் (சிற்றின்பங்கள்) காண்பதில் நீங்கள் மிகுந்த விருப்பம் கொண்டவர்.
நீங்கள் நல்ல காம உணர்ச்சி கொண்டவர். நல்ல கம்பீரமான, எடுப்பான தோற்றமுடையவராக நீங்கள் இருப்பீர்கள். சூது நிறைந்தவர் மற்றவர்களுக்கு உதவக்கூடிய நீங்கள், கவிதையுள்ளம் கொண்டவர். பல சமயத் தலங்களுக்கும் பயணம் செல்லும் நீங்கள், விஞ்ஞான ரீதியில் எதையும் அணூகும் மனப்போக்குடையவர். வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில், உங்களுக்கு சில பிரச்சனைகள் அல்லது தொல்லைகள் இருக்கலாம் ஆனால் உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். 32, 35 ஆம் வயதிலிருந்து, நீங்கள் அதிருஷ்டவசமான ஒரு காலகட்டத்தில் பிரவேசிப்பீர்கள். பல வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பீர்கள். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பானவர். பல புத்தகங்களையும் படிப்பதில் விருப்பம் கொண்ட நீங்கள், புகழை எட்டிவிடத் துடிப்பீர்கள் ஓயாமல் ஏங்குவீர்கள். உங்கள் நீண்ட உடல் உறுப்புக்கள் இருக்கும். நீங்கள், நல்ல உணவை, மிகவும் விரும்புகிறவர். அரசு மற்றும் சமுதாயத்திடமிருந்து, உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் புகழும் கிடைக்கும். கலைகள் மற்றும் விஞ்ஞான அறிவை, நீங்கள் பெற்று விளங்குவீர்கள். ஜலதோஷம், இன்?ப்ளூயன்சா காய்ச்சல், மார்ச்சளி போன்ற நோய்கள் பீடிக்காமல், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். முலநோய், காய்ச்சல், போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்படலாம்.
உங்கள் வாழ்க்கையில், பெருமளவிலான மாற்றங்களை நீங்கள் உணருவீர்கள் அனுபவிப்பீர்கள் உங்களுக்குக் குடும்பத் தொல்லைகள் இருக்கலாம். சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் படைத்த நீங்கள், எதையும் கற்பதில் விருப்பம் கொண்டவர். ஒரே சமயத்தில் பலதரப்பட்ட வேலைகளையும் நீங்கள் மேற்க்கொண்டு விடுவதுதான், உங்களிடம் காணூம் குறைபாடு. நீங்கள் நன்கு உறங்கினால், நல்ல உடல் ஆரோக்கியத்தை, உங்களால் பராமரித்திட முடியும். எதிலுமே குறுக்கு வழி - அதிலும் சுறுக்கு வழியை, நீங்கள் விரும்புவதுதான், உங்களின் ஒரு விநோதமான மனப்போக்கு நீங்கள் மிகவும் திறமை வாய்ந்தவர் பல்வேறு வழிகளையும் கடைபிடிப்பதன் முலம், நீங்கள், உங்கள் திட்டங்களை மிகவும் விரைவாக நிறைவேற்ற முடிகிறது. உங்களுக்கு நல்ல, சிறப்பான உடல்வாகும் உறுதியான மனநிலையும் இருக்கும்
4.கடகம்
நீங்கள் கடக லக்னத்தில் பிறந்தவர் ராசி மண்டலத்தில் நீர் சார்ந்த - நான்காவது ராசி. நீங்கள், ராஜ தந்திரத்துடன், தளுக்காக செயல்படக்கூடியவர் உங்களுக்கு உடல் அமைப்பின் மேல்பகுதி, பெரியதாக இருக்கும். நீங்கள், உங்கள் எதிர்பாலைச் சேர்ந்தவர்களை விரும்புபவர் செல்வ வளத்தை நீங்கள் அனுபவிப்பவர். நீங்கள் தண்ணீரில் விருப்பங்கொண்டவர். உங்கள் நண்பர்களின் எதிர்ப்பு, உங்களுக்கு இருந்து வரும். மிதமான ஒரு உடல்வாகுடைய நீங்கள், சாம்பல் நிறத்தவராய், பழுப்பு நிற முகமும், லேசான மற்றும் பழுப்பு நிற முடியும் கொண்டவராக இருப்பவர். நீங்கள் சற்று பலவீனமான உடல் அமைப்புடன் இருப்பீர்கள். கண்களின் நிறம், வழக்கத்துக்கு சற்று மாறுபட்டதாய் இருக்கும். சில நேரங்களில், நீங்கள், கோழையாகவும், பயந்தாங்கொள்ளியாகவும், மந்தமாகவும், கவனமற்றும் இருப்பவர். வாழ்க்கையில், சந்தோஷத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். நீங்கள் செல்வ வளத்தையும் சுகபோகங்களையும் அனுபவிப்பீர்கள். நீங்கள், மிகவும் மனோபாவமானவர்.
மிகுந்த புத்திசாலி விவேகி கலையிலும் இசையிலும் மிகவும் விருப்பம் கொண்டவர். மற்றவர்களின் சுபாவத்தை விரைவாகப் புரிந்துகொண்டு, அவர்களின் கருத்துக்களை ஈர்த்துக் கொள்ளும் சக்தி, உங்களிடம் இருக்கிறது. உணர்ச்சி மனோபாவம் அதிகமாக இருப்பதால், நீங்கள் நரம்புத் தளர்ச்சிக்கு உட்படக்கூடும். சில சந்தர்ப்பங்களில், நீங்கள் தைர்யம் மிக்கவர் துணிச்சலானவர் நீங்கள், மாறக்கூடிய மனநிலை உடையவர் நல்ல கற்பனை வளம் படைத்த நீங்கள், எப்போதும் அலைந்து திரியும், நிம்மதியற்ற வாழ்க்கை நடத்துகிறீர்கள். உங்கள் விருந்தோம்பலுக்கு, நீங்கள் நன்கு பெயர் பெற்றவர். ஆழ்ந்த உணர்ச்சிகளைக் கொண்ட நீங்கள், விசுவாசமான, கடமைப் பொறுப்புணர்ச்சியுடைய ஒரு மனிதர். ஒரு திட்டத்தை வகுத்து, அதனை நீங்கள், மிகுந்த மன உறுதியுடன் நிறைவேற்றி, வெற்றி காண்கிறீர்கள். பல இடங்களிலிருந்தும் உங்களுக்கு பணவசதி கிடைக்கும். நீங்கள் சுயநலவாதி தாராள சிந்தை கொண்டவர். உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நீங்கள், பலவீனமான உடல் நிலையைக் கொண்டிருந்தாலும் வயதாக வயதாக, நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் மிகப் பெருமளவில் உணர்ச்சி பாதிப்புக்கு உட்பட்டவர் உங்கள் சொந்த நலன்பற்றியே, நினைப்பவர் மாற்றத்தை விரும்புபவர் மார்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் நீங்கள் பாதிக்கப்படலாம்.
5.சிம்மம்
நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவர் உக்ரமான 5 - வது ராசி சிம்மம். உங்களுக்கு கவர்ச்சிமிக்க எடுப்பான தோற்றம் ஒன்று இருக்கும். உங்களுக்கு லேசான கேசமும், பெரிய மற்றும் உருண்டையான முகமும் கொண்ட, உங்கள் சருமத்தின் நிறம், சிவந்ததாய் இருக்கும். நீங்கள், விளையாட்டுப் போட்டிகளில், மிகுந்த நன்னம்பிக்கையுடன் விறுவிறுப்பாக போட்டியிடக் கூடியவர் நீங்கள், பிறரிடம் மரியாதைகாட்டி பணிவுடனும், லட்சியப் பேரவா கொண்டவராகவும் இருப்பவர். நீங்கள் முன்கோபியாக இருப்பீர்கள் தாயாரிடமிருந்து வெகு தொலைவில், வசிப்பீர்கள்.உங்களில் பெரும்பாலானவர்களுக்கும் மிகவும் பிரதானமான, எடுப்பாக முன்தலை இருக்கும். உங்களுக்கு மிகவும் எடுப்பான, கம்பீரமான மற்றும் ராஜ தோற்றம் இருக்கும். உங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள் நீங்கள் ஒரு தொழில் திட்டத்துக்குத் தலைவராக இருந்து, மற்றவர்களுக்கு ஆணையிடக் கூடியவர்.
நீங்கள், எதிலும் ஒளிவு மறைவற்றவர் உங்கள் எண்ணத்தில் மிகவும் உறுதியானவர் கோபக்காரர் கலையிலும் இசையிலும் நீங்கள் மிகவும் நாட்டம் கொண்டவர் விருப்பம் கொண்டவர் உங்கள் திறமையில், உங்களுக்கு மிகப் பெருமளவு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு ஒருசில குழந்தைகளே உள்ளன. நீங்கள், உங்கள் பெற்றோர்களை விரும்புகிறவர் நீங்கள் வெவ்வேறான போக்குகளில் விருப்பமுடையவர். அரசிலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆராய்ச்சியில் ஆர்வமிக்க நீங்கள், உங்கள் எண்ணங்களில், அசையா உறுதிபடைத்தவர் முகஸ்துதிக்கு நீங்கள் இலக்காகிவிடக்கூடாது. காதல் ஈடுபாடு கொண்ட நீங்கள், உங்கள் காதலரை, மிகுந்த ஆற்றலுடன் மகிழ்விக்கிறீர்கள்.
லட்சியக் காதலரான நீங்கள், காதல் வேகத்தில் ஈர்க்கப்படலாம். மிகுந்த உணர்ச்சி வெறியும், சிற்றின்ப நாட்டமும் கொண்ட நீங்கள், வாழ்க்கையில் பல சுகபோகங்களையும் அனுபவிப்பவர். உங்கள் இல்லம், மிகவும் கவர்ச்சியானதாக இருக்கும் நீங்கள் மிகவும் பணக்காரராய், செல்வந்த வாழ்க்கையன்றை நடத்துவீர்கள். உங்களுக்கு, ராஜகுடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களும் இருப்பார்கள். குடும்பத்திலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். மிக உயரிய அளவில் அரசு சலுகைகளையும் ஆதரவுகளையும் நீங்கள் பெறுவீர்கள்.
6.கன்னி
நீங்கள் கன்னியா லக்னத்தில் பிறந்தவர். ராசிமண்டலத்தில் ஆறாவது இடத்தில் இருப்பது கன்யாராசி. உங்களுக்கு உருண்டையான முகமும், நன்கு வடித்தெடுத்தாற்போன்ற உடற்கட்டும் அமைந்திருக்கும். சிவந்த மேனியும், கறுமையான கண்களும் கேசமும் கொண்டிருக்கும் நீங்கள், மிகவும் சுறுசுறுப்பானவர் லட்சியப் பேரவா கொண்டவர். படிப்பதிலும், பலவற்றைக் கற்பதிலும், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல தகுதியும் திறமையும், உங்களுக்கு இருக்கும்.
நீங்கள் மென்மையாகப் பேசுபவர் அதிகம் பேசாதவர். கவர்ச்சியான கண்களைக் கொண்டவர். உங்கள் மனைவி/கணவனிடம், நீங்கள் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்டவர். உங்கள் சகோதரர்களிடமிருந்து, உங்களுக்கு சில எதிர்ப்புக்கள் வரலாம். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் நீங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர். உங்களுக்கு பல புதல்விகள் இருப்பார்கள். சமயப் பணிகளில் நீங்கள் ஆர்வம் கொண்டிருப்பீர்கள் பல அயல் நாடுகளுக்கும் சென்று வருவீர்கள். மன உறுதியும் ஆழ்ந்த உள்ளத்து உணர்வுகளும் உங்களுக்கு உண்டு. உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிக மகிழ்ச்சியானவராக இருந்திருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். 32 - லிருந்து 36 - வயது வரையான காலத்தில், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதுடன், நல்ல பெயரும் புகழும், மதிப்பும் பெற்று விளங்குவீர்கள். சில நேரங்களில், உங்களுடைய விவரமான விளக்கங்கள் காரணமாய் நீங்கள் மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திடலாம்.
உங்கள் செயல்களில், நீங்கள் சுறுசுறுப்புடனும் விரைவாகவும் இயங்குவீர்கள். படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வதில், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கிறது. உங்கள் மனதில் இருப்பதையெல்லாம், நீங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை மனம் திறந்து பேசுவதுமில்லை
7.துலாம்
நீங்கள் துலா லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் 7 - வது ஸ்தானத்தில் இருப்பது துலாம் அதன் அதிபதி சுக்ரன். உங்களுக்கு, எடுப்பான, கவர்ச்சியான தோற்றமிருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். சமய முக்யத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பயணம் செய்வது, உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு, பெரிய - பிரதானமாகத் தெரியும் முக்கு இருக்கும். நீங்கள், நல்ல, தகுதிவாய்ந்த ஒரு வர்த்தகர் ஜோசியத்தில் விருப்பமுடையவர். உங்கள் குரல் இனிமையானது கவர்ச்சியானது நீங்கள் பேராசை பிடித்தவர் அல்ல. நீங்கள் பல இடங்களுக்கும் பயணம் செல்வீர்கள்.
உங்கள் குடும்பத்திலிருந்து விலகி, வெகு தொலைவில்போய் நீங்கள் வசிப்பீர்கள். உங்கள் குழந்தைப் பருவத்தில், உங்களுக்கு சில கஷ்டங்களும், வேதனைகளும் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நீங்கள் மிகுந்த சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுக்கு, வழக்கமான, மாமுலான ஒரு வாழ்க்கை அமையும். 31, 32 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
உங்களுக்குப் பல நண்பர்கள் இருப்பார்கள். நீங்கள் கண்யமான தோற்றமுடையவர். உங்களுக்கு முணூக்கென்றால் இருமல் வந்துவிடும் நல்ல கவர்ச்சியான தோற்றமுடைய நீங்கள், விவேகம் நிறைந்த புத்திசாலி எப்போதும் புன்சிரிப்புடன் காணப்படுகிறீர்கள். கவர்ச்சியான கண்களைக் கொண்ட நீங்கள், கடமை தவறாதவர் சாமர்த்தியசாலி மற்றவர்களின் எண்ணத்தை உங்களால் எடைபோட்டிட முடியும் எதனையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்வதில் நீங்கள் பெயர் பெற்றவர். நீங்கள், ஒரு நல்ல தகுதிவாய்ந்த நிர்வாகி. அமைதியை விரும்பும் நீங்கள் கலையிலும் இசையிலும் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டவர். பெரிய தொழில் முயற்சிகளில், நீங்கள் வெற்றியடைவீர்கள். சிற்றின்பங்களிலும் டாம்பீகமான சொகுசுப் பொருட்கள் மற்றும் வாசனை செண்டுகளிலும், உங்களுக்கு கொள்ளை ஆசை.
நீங்கள் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவரானாலும் வாழ்க்கையில், நன்கு முன்னேறுவீர்கள். அரசாங்கம் மற்றும் சமுக விவகாரங்களில் நீங்கள், மகத்தான வெற்றி காண்பீர்கள். சில தொழில் திட்டங்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். அகலமான முகத்தையுடைய நீங்கள், நல்ல அழகிய, கவர்ச்சியான, வசீகரத் தோற்றமுடையவர். லட்சியப் பேரவா கொண்டவரான நீங்கள், பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். பல நாடுகளுக்கு, நீங்கள் பயணம் செல்வீர்கள். நீங்கள், உண்மை விரும்பி சமுகப் பணியில் ஆர்வம் கொண்டவர்.
8.விருச்சகம்
நீங்கள், விருச்சிக லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் விருச்சிகம், ஏழாவது ஸ்தானத்தில் இருக்கிறது. உங்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், அகலமான மார்பும், தீர்க்கமான கண்களும் உள்ளன. நீங்கள் மிகப் பெருமளவிற்கு புத்திசாலி சாமர்த்தியசாலி உங்கள் சகோதரர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்பு வரலாம். நீங்கள் கருணை உணர்வற்ற கல்நெஞ்சக்காரர்.
உங்கள் காரியம் ஆகவேண்டும் என்று ஏற்பட்டால், உண்மையைக்கூட நீங்கள் பேசமாட்டீர்கள். மற்றவர்களின் எண்ணத்தை, உங்களால் மதிப்பிட முடிகிறது. ஜோசியத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டு. உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், சில துன்பங்களை நீங்கள் அனுபவித்திருக்கலாம் ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில், பெருமளவு மகிழ்ச்சியை நீங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். நீங்கள், மற்றவர்களுடன் அதிகம் பேசிப் பழகாதவர் கோபக்காரர். மிகவும் லட்சியப் பேரவா கொண்ட நீங்கள், வாழ்க்கையில் சுபிட்சத்தைப் பெறுவதற்காக, பல வழிகளைப் பயன்படுத்துவீர்கள். நீங்கள் சந்தேக புத்தி கொண்டவர் முர்க்கத்தனமானவர் எதிலும் அதிகாரத்துவம் செலுத்துபவர். பிரதிகூலமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும், முன்னுக்கு வரக்கூடியவர்.
நீங்கள் எப்போதுமே சுறுசுறுப்பானவர் சோம்பேறித்தனமாக, வேலையே செய்யாமல் சும்மா இருப்பது உங்களுக்கு பிடிக்காது. உங்கள் குறிக்கோள் எட்டப்படும்வரை நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். உங்களுக்கு நல்ல கற்பனை ஆற்றல் உண்டு. நீங்கள் எதையும் உறுதியாக அடித்துச் சொல்பவர் வெற்றிக் கொள்ளத்தக்கவர் உங்களுக்கு மனக் கவலைகளும் பதட்டமும் இருக்கலாம். முளை நோயினால் நீங்கள் பாதிக்கப்படலாம். வீக்கம், காயங்கள், தீப்புண்கள், உயரத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது அல்லது விபத்துக்கள் போன்றவை, உங்களுக்கு நேரிடலாம். நீங்கள் அழகை ரசிப்பவர் சிற்றின்பப்பிரியர் நீங்கள் நடைமுறை ரீதியில் செயல்படுபவர் எதுவுமே நிரூபிக்கப்படாதவரை நீங்கள் அதனை நம்புவதில்லை. நீங்கள் பரந்த மனப்பான்மை உடையவர். எல்லா வகையான கருத்துக்களையும், யோசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்பவர் ஆனால் குடும்பப் பழக்க வழக்கங்களுக்கு மதிப்புக் கொடுப்பவர். நீங்கள் எப்போதுமே, உங்கள் காரியங்களை, கடைசி நிமிடம் வரை ஒத்திப் போடக்கூடியவர்.
உங்களுடைய கடுமையான உழைப்பாலும், அறிவாற்றல் திறனாலும், உங்கள் தொழில் முயற்சிகளில், நீங்கள் முன்னேறுகிறீர்கள். உங்களுக்கு, எளிதில் கோபம் வந்துவிடுகிறது. நீங்கள் திறமை வாய்ந்த ஒரு விளையாட்டு வீரர்.
9.தனுசு
நீங்கள் தனுர் லக்னத்தில் பிறந்தவர். ராசி அமண்டலத்தில் அது 9 - வது ஸ்தானத்தில் உள்ளது அதன் அதிபதி குரு. நீங்கள் ஒரு நல்ல குணவான் உங்களுக்கு அழகிய பல்வரிசை உள்ளது நீங்கள் மிகவும் செல்வச்செழிப்பு படைத்தவர் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். நீங்கள் நன்கு படித்தவர் அறிவாளி விவேகமிக்கவர். நீங்கள், உங்கள் தொழிலில் பலராலும், விரும்பி நேசிக்கப்படுகிறீர்கள். நீங்கள் அயல் நாடுகளுக்குப் பயணம் செல்வீர்கள். நீங்கள் படித்தவர்களையும், பெரியோர்களையும், மதித்து மரியாதை செலுத்துவீர்கள். சுறுசுறுப்பான உங்களுக்கு ஒருசில குழந்தைகளே இருக்கும். உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்திருப்பீர்கள்.
உங்கள் வாழ்க்கையின் பின் பகுதியில், நீங்கள் செல்வச் செழிப்பையும், நன் மதிப்பையும் சிறப்பையும் பெறுவீர்கள். 22 வயதுக்குப் பின்னர், நீங்கள் நன்கு முன்னேறுவீர்கள். நீங்கள் நீண்ட முகத்துடன், மிகுந்த அழகிய தோற்றத்துடன் விளங்குவீர்கள். உங்கள் முன்தலை, பிரதானமாகத் தெரியும். உங்களுக்கு பளிச்சென்று ஒளிவிடும் கண்கள் உள்ளன. நீங்கள் தாராள சிந்தை கொண்டவர். நீங்கள் மிக சுறுசுறுப்பானவர் துணிச்சல்மிக்கவர். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, நீங்கள் விரும்புகிறீர்கள். புகழும் சிறப்பும் அடைவதற்கு நீங்கள், எப்போதுமே பேராவல் கொண்டவர். நீங்கள், அதிகம் உயரமாக இருக்கமாட்டீர்கள் நல்ல கவர்ச்சியான குரல் வளம் கொண்டிருப்பீர்கள். உங்கள் சுய நலனுக்கு, நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நீங்கள் சமய ஈடுபாடு உடையவர் பொது ஸ்தாபனங்களுக்கு நீங்கள் தலைவராக இருக்கலாம். வேதாந்தத்திலும், மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும், உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது. கவர்ச்சியான தோற்றமுடைய நீங்கள், எப்போதுமே சிரித்த முகத்துடன், பகட்டு எதுவுமின்றி இருப்பவர் உண்மையை விரும்புபவர் இளகிய, கனிவுமனம் படைத்தவர்.
மிகவும் சுயேச்சையான கருத்துக்களைக் கொண்டவர். எந்த ஒரு விஷயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் நீங்கள் மிகவும் திறமைசாலி பல விஷயங்களைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்ளவல்ல நீங்கள், கடவுளிடம் பக்தியுடையவர் நன்கு உழைக்கக்கூடிய நீங்கள், சோம்பேறியாக, எந்த வேலையுமே செய்யாமல் சும்மா இருத்தலை விரும்புவதில்லை.
10.மகரம்
நீங்கள் மகர லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் உள்ள பத்தாவது ராசி அது. உங்களுக்கு பயணம் செய்வதில் நல்ல ஆசை இருக்கும் கவர்ச்சியான கண்களை உடைய நீங்கள், மிகவும் தந்திரமானவர் சாமர்த்தியசாலி புத்திசாலி. சில நேரங்களில், கொஞ்சம் சோம்பேறியும்கூட. நீங்கள் பணத்தை அதிகமாக செலவு செய்கிறீர்கள் மதத்தில், நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை கவிதையை ரசிக்கிறீர்கள்.
சாதாரணமாகவே, உங்கள் குழந்தைப் பருவம் இருந்திருந்தாலும், 32 வயதுக்குப் பின்னர், நீங்கள் பெருமளவிற்கு சுகபோகங்களைப் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் மெலிந்த உடல் அமைப்பு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு ஏராளமாய் பணம் இருந்தும், செல்வம் நிலையாய் இருக்காது உயரமாகவும் சிவந்த மேனியுடனும், நீங்கள் தோற்றம் கொண்டிருப்பீர்கள். உங்கள் திட்டங்களிலும் முயற்சிகளிலும் மிகவும் கவனமுடைய நீங்கள், உங்கள் அறிவாற்றல் முலம் வெற்றி காண்பீர்கள். ஓயாமல் பேசும் நீங்கள், கலைகளில் ஆர்வமிக்கவர் கலைசார்ந்த வழிகளில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். நீங்கள், உங்களைப்பற்றியே நினைப்பவர் உங்களுக்கு மிகவும் அடர்த்தியான கேசம் இருக்கும். பணத்தை, வீணாகச் செலவிட்டு விரயம் செய்வீர்கள். குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகவும் பலவீனமாகவும் ஒல்லியாகவும் இருந்திருக்கலாம். பிறகு, போகப்போக, 14 முதல் 19 வயது வரையான காலத்தில், நல்ல உயரமாக வளர்ந்துவிடுவீர்கள்.
உங்களுக்கு மெலிந்த உருண்டையான முகம் இருக்கும். உங்கள் கால் முட்டில் ஒரு தழும்போ, மச்சமோ இருக்கலாம். நீங்கள் அனுபவ ரீதியில் செயல்படுபவர் அரசியலில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் இடர்ப்பாடுகளைக்கண்டு அஞ்சுவதில்லை உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர் பல இயல்களைக் கற்றறிந்தவர். நீங்கள் உங்கள் திட்டங்களை, மிக விரைவாக ஏற்பாட்டுடன் நடத்தி, நிறைவேற்றக் கூடியவர். உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது. நீங்கள் நன்கு படித்தவர் மரியாதைக்குரியவர்
11.கும்பம்
சனியை அதிபதியாகக் கொண்ட கும்ப லக்னத்தில், நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் கும்பம், ராசி மண்டலத்தில் 11 வது ராசி. உங்களுக்கு தடித்த கழுத்து இருக்கும். சுயமரியாதைக்கு நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, உங்களுக்கு எதிர்ப்பு இருக்கும். உங்கள் தலை வழுக்கையாக இருக்கலாம் அல்லது கேசம், மிகவும் குறைவாக இருக்கலாம். உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்களுக்கு, சில துரதிருஷ்டங்களும் துன்பங்களும் இருந்திருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு செல்வச் செழிப்பும், சொத்துக்கள் வசதியும் கிடைக்கும். உங்கள் சகோதரர்களின் கெட்ட சகவாசம் உங்களை பாதிக்கும். 24, 25 வயதில், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள். நீங்கள் ஒரு தத்துவஞானி எந்த ஒரு விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர். நீங்கள் அமைதி விரும்புபவர் நன்கு படித்தவர். நீங்கள் பல விஷயங்களைப் பற்றியும், சதா சிந்தித்துக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிட விரும்புகிறீர்கள்.
கூரிய நினைவாற்றல் கொண்ட நீங்கள், உங்கள் எண்ணங்களில் விரைவாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர் வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். உயரமாக இருக்கும் நீங்கள், நல்ல கவர்ச்சியான, கம்பீரமான தோற்றமுடையவர். உங்களுக்கு பல கஷ்டங்கள் இருந்தாலும், நீங்கள் அச்சமின்றி செயல்படுபவர். நீங்கள் சமயோசிதமாக செயல்படக் கூடியவர் அரசியலில் ஆர்வம் கொள்வீர்கள். பொது நிறுவனங்களிலும், நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டுத் துறையில், உங்களுக்கு விருப்பம் இருக்கும். வலுவான உடற்கட்டையுடைய நீங்கள், மிகவும் தாராள சிந்தை கொண்டவர். நீங்கள், நிலபுலன்களுக்கு சொந்தமாக இருப்பதுடன், மிகுந்த கவனமாகவும் பணத்தை செலவு செய்வீர்கள்.
உங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும், நீங்கள் மிகுந்த உறுதியுடன் இருப்பவர். நீங்கள், பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கிளப்புகளுக்கும் போய்வர விரும்புகிறீர்கள் அதன் விளைவாய் உங்களுக்கு அவப் பெயரும் ஏற்படும். உங்கள் உணர்ச்சிகளையோ, காதலையோ நீங்கள் வெளிப்படையாக, எடுத்துக்காட்டுவதில்லை. நீங்கள் மிகவும் தந்திரம்மிக்க சாமர்த்தியசாலி. நன்கு படித்த, புத்திசாலியான ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ளவே நீங்கள் விரும்புகிறீர்கள்
12.மீனம்
நீங்கள் மீன லக்னத்தில் பிறந்தவர் ராசி மண்டலத்தில் 12 வது வீட்டிலுள்ள மீனத்தின் அதிபதி குரு. உங்களுக்கு, பெரிய, கவர்ச்சியான கண்கள் இருக்கும். உங்களுக்கு மிகவும் கவர்ச்சியான தனித் தோற்றமும் இருக்கும். நீங்கள் மிகவும் அன்பும் கனிவும் கொண்டவர். உங்கள் மனைவியிடம், மிகுந்த ஈடுபாடு கொண்டவர் காதல் கொண்டவர்.
உங்கள் தலை, பெரியதாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து, நீங்கள் மனமகிழ்ச்சி பெறுவீர்கள். சில நேரங்களில், நீங்கள் ஆரோக்கியம் குன்றியவராய் உணருகிறீர்கள். நீங்கள், சிற்றின்பங்களில் பிரியம் கொண்டவர் காம உணர்ச்சி உடையவர். உடல் இன்பங்களை விரும்புபவர். உங்களுக்கு, திடீரென்று சில பாதிப்புக்கள் (அல்லது தோல்விகள்) ஏற்படலாம். உங்கள் குழந்தைப் பருவத்தில், உங்களுக்கு சாதாரணமான வெற்றிகளே கிடைத்திருக்கலாம் உங்கள் வாழ்க்கையின் நடுவயதுக் காலத்தில், சில இடர்ப்பாடுகள் தோன்றலாம் ஆனால் பிற்பகுதியில், பெருமளவிற்கு சந்தோஷங்கள் கிடைக்கும். 21 வயதுக்குப் பின்னர், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள். நல்ல சதைப்பற்று மிக்க கொழுப்பான கன்னங்களும், சாம்பல் வெளுப்பு நிறமும் கொண்ட நீங்கள், எப்போதும் தூங்கிவழியும், மந்தமான கண்களை உடையவர்.
உங்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். நீங்கள் பெருமளவிற்கு தண்ணீர் அருந்துவீர்கள். தண்ணீரில் முழ்கிப் போய்விடக்கூடிய விபத்துக்கள் குறித்து, நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நீங்கள் கடவுளிடம் பக்தியுடையவர் விருந்தோம்பல் இயல்புடையவர். குடும்பப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் நீங்கள், விறுவிறுவென்று, தங்குதடையின்றி பேசும் திறன்படைத்தவர். நீங்கள் படித்த விவேகியாக இருப்பவர்.
அதிகம் உயரமாக இருக்கமாட்டீர்கள். நல்ல அழகிய தோற்றமுடைய உங்களுக்கு, எடுப்பான முக்கும், அழகிய பல்வரிசையும், சுருட்டை மயிரும் இருக்கும். குடும்பத்தில் நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். பணம் சம்பாதிப்பதில், உங்களுக்கு சில சிரமங்கள் இருக்கலாம். நீங்கள் நிறைய பணம் சம்பாதித்தாலும் பெருமளவிற்கு செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். நீங்கள் சமய ஈடுபாடு உடையவர் உங்கள் எதிரிகளுக்குக்கூட உதவி செய்யக் கூடியவர். நீங்களும் உங்கள் மனைவியும், விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள். நீங்கள், கவிதையிலும் இலக்கியத்திலும்கூட, மிகுந்த விருப்பமுடையவர்
No comments:
Post a Comment