Monday, March 25, 2013

சாமுத்ரிகா லட்சணம் என்றால்...


சாமுத்ரிகா லட்சணம் என்பது மிக சிறப்பான ஒன்று. அதாவது அங்க அடையாளங்கள் என்று சொல்லலாம். அங்கங்களின் அமைப்பு.

இதில் பிரதானமாக அமைவது மூக்கும், கண்களும்தான். கண்களுக்கு மட்டுமே 100 முதல் 120 குறிப்புகள் சாமுத்ரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உருண்டையான கண்கள், உள் வாங்கிய கண்கள், அகண்டு விரிந்த கண்கள் என்பது போன்றவை சொல்லப்பட்டுள்ளது.

இதுபோன்றுதான் மூக்கின் அமைப்பும் சொல்லப்பட்டுள்ளது. மூக்கு கூர்மையாக இருந்தால் எப்படி, தட்டையாக இருந்தால் எப்படி என்று பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது.இதற்கு அடுத்தபடியாக விரல் அமைப்புகளைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. 

நீண்ட விரல்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் அறிவாளிகளாகவும், சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.கைகள் நீண்டு இருந்தாலும் சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. காமராஜர், நேருவிற்கு எல்லாம் கைகள் நீண்டு கால் முட்டியை அவர்கள் கை தொடும் என்று சொல்வார்கள். நீண்ட விரல்கள், நீண்ட கைகளும் ராஜ யோகம், நாடாளும் யோகம் கொண்டது என்று சொல்வார்கள்.

காலின் கட்டை விரல் எந்த அளவிற்கு கனமாக இல்லாமல் இருக்கிறதோ அந்த அளவிற்கு நல்லது என்று சொல்வார்கள். கட்டை விரலின் தடுத்து, உருண்டு காணப்படுவதை விட மெல்லிய விரலாக இருப்பது நல்லது.
இரண்டாம் விரலை விட சற்று தடிமனாக கட்டை விரல் இருந்தாலே போதும் என்று சொல்கிறார்கள்.

கட்டை விரல் வலது பக்கமாகத் திரும்பியிருக்கும், அதாவது வலது காலின் கட்டை விரல் வலது பக்கமாகவும், இடது காலின் கட்டை விரல் நுனி இடது பக்கமாகவும் சற்று திரும்பியபடி இருப்பவர்கள் சூட்சும சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆவிகளை உணரக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெண் பார்க்கும் படலத்திற்கு இந்த சாமுத்ரிகா லட்சணம் மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது, எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இதை அனுபவ ரீதியாகவும் பார்த்துள்ளோம்.

கட்டை விரல் வளைந்து காணப்பட்டால் நன்மை என்று சொல்லியிருக்கிறோம். ஒரு சில பெண்களுக்கு ஒரு.காலின் கட்டை விரல் வளைந்தும், மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். 

கண் புருவம் மெல்லியதாக இருப்பதைத்தான் சாமுத்ரிகா லட்சணம் பெருமையாக சொல்கிறது. சிலருக்கு கட்டையாக இருக்கும். அதை விட மெல்லிய புருவ அமைப்பு நல்லது என்று சொல்கிறது.

மேலும், பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம், அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.கை விரல்கள் நீண்டு இருந்தால் அவர்களிடம் கலை உணர்வு இருக்கும். மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி, அரசாளும் யோகம், அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு. எலியைப் போன்ற மூக்கு, அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள். ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும், சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள். மூக்கின் அடிப்பகுதி, நடுப்பகுதி, நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள். ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும், நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும், நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.வாசிம் யோகம்... வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம், வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

கண்களை எடுத்துக் கொண்டால், உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான், அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல... 

மான் விழி என்று சொல்வார்கள், மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும், எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும்

இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு. 

உருண்ட விழி அதிர்ஷ்டம், மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும், பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும், பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.

விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள். 

சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே... அதுபோல இருப்பார்கள். 

மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள். 

விழி மற்றும் விழிப்பின்னணி, இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.

வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும். 

சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. 

உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை, அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல. 

செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும். அடுத்ததாக முடியை எடுத்துக் கொண்டால், “கோர முடி குடியைக் கெடுக்கும், சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.

அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும், சுற்றுத்தார், நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை கஷ்டப்படுத்துபவர்களாகவும், குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப கஷ்டப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.

கடினமான, மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்கு கஷ்ட ஜீவனம் இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.

முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய், தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.

சேலை கட்டிய பெண்ணை நம்பினால் தெருவில் நின்று தவிப்பாய் என்று ஒரு சித்தர் பாடல் உண்டு.சித்தர்கள் எப்போதும் சங்கேத பாஷையில் பேசக்கூடியவர்கள். எனவே சேலை கட்டிய என்பது சேலையைக் குறிப்பது அல்ல. சேலை என்பது மீனைக் குறிக்கும் சொல். மீனைப் போன்ற கண்கள் கொண்ட பெண்களை (அதாவது பரந்து விரிந்த) நம்பினால் என்பதுதான் அந்த பாடலின் பொருள்.

மேலும், உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.சாமுத்ரிகா லட்சணத்தை வைத்து வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யலாமா?ஒருவரது ஜாதகத்தை அது அவருடையதுதானா என்பதை தோற்றத்தை வைத்துப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment