Thursday, March 28, 2013

யாரோ சொன்னது


1."உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்."

2."துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்."

3."போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்(நேரம்)."

4."பரிசுத்த இதயத்தைப் பெற்று இருப்பதே மனிதனின் முதல் தகுதி."

5."ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இருமடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு." (பெண்கள் வருந்தற்க)

6."அழகுக்கு ஆற்றல் அதிகம்; ஆயினும் அதைவிட ஆற்றலுடையது பணமே!"

7."செலவுக்குமேல் வரும்படி உள்ளவன் செல்வன்; வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை."

8."பெண்ணை ஒரு பொருள்போல் நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன."

9."எழுதப்படும் சொல்லைவிட நாக்கால் பேசப்படும் சொல்லே வலிமை மிக்கது."

10."நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது."

11."உன்னை நீ நம்பினால் ஊர் உன்னை நம்பும்."

12."பொறுமைசாலிக்குக் கோபம் வரும்பொழுது எச்சரிக்கையுடன் விலகி
இருந்துகொள்வது நல்லது."

13."துன்பங்கள் நிலையானவை அல்ல; அவை ஆற்றில் ஓடும் தண்ணீர்போல் ஓடிவிடும்."

14."வல்லமையற்ற நீதி ஆற்றலற்றது; நீதியற்ற வல்லமை கொடுங்கோன்மை."

15."எந்த ஒரு முட்டாளும் பணம் ஈட்டமுடியும்; ஆனால் அறிவாளியால் மட்டுமே அதைக் காப்பாற்ற இயலும்."

16."ஒருவனைத் தனிமையில் கண்டிக்கவேண்டும்; பலர் முன் பாராட்டவேண்டும்."

17."சிந்தனையாளனுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம்; செயலற்றவர்கட்கோ துன்பியல் நாடகம்."

18."இயலுமாயின் பிறரைவிட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் கூறாதே!"

19."நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது."

20."துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம் துன்பத்தைவிடக் கொடியது; துயரமானது."

21. உன்னுடைய விருப்பங்கள் மகிழ்ச்சி தருவதில்லை; பிறர் உன்னை விரும்புவதே மகிழ்ச்சி தரும்.

22. "பண்போடு பொருந்தாத அனுதாபம் எல்லாம் மறைமுகமான் தன்னலமேயாகும்."

23. "உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொருவனைவிட முந்தச் செய்கிறது."

24. "நாளைய நன்மைக்காக இன்றைய தேவைகளைக் குறைத்துக் கொள்."

25. "சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த செயல்களாகின்றன."

26. "உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்."

27. "மன உறுதியைப்போல் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்."

28. "உண்பதற்காக வாழாதே! வாழ்வதற்காக உண்."

29. "நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது; இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்." 

30. "எழுதுவது அருமை; எழுதியதைப் பழுதறக் கற்றல் அதிலும் அருமை; அதன்படி நடத்தல் அருமையோ அருமை."

31."மலையைக் கடுகாக நினைத்தால் வெற்றி நிச்சயம். கடுகைக்கூட மலையாக நினைத்தால் தோல்வியே மிஞ்சும்."

32."இயற்கை, பொறுமை, காலம் ஆகியவைகள்தான் மூன்று சிறந்த மருத்துவர்கள்."

33."செயல்களைக் கடுமையாக்குவது சோம்பேறித்தனம்; அவைகளை எளிமையாக்குவது உழைப்பு."

34."வியப்பு புகழும்; அன்பு ஊமையாய் இருக்கும்."

35."அடிக்கடி கோபம் கொள்ளாதே; அது உன் அழிவுக்கு வழி வகுக்கும்."

36."விரைவில் உயர்வது பெரியது அல்ல. எப்பொழுதும் உயர்ந்தபடி இருக்கவேண்டும். அதுவே பெரிது."

37."ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை."

38."மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை; அறிவாளி புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை."

39."உண்மையான அறிவாளி(அனைவரும்) தன் இரகசியத்தைத் தானே வைத்துக்கொள்ள வேண்டும்."

40."எப்பொருளிலும் யாரிடத்தும் ஒருபோதும் பற்றுதல் வைக்காதே."

No comments:

Post a Comment