Monday, March 25, 2013

நவராத்திரி: 9 நாள் வழி காட்டி


பராசக்தி நவராத்திரியை முன்னிட்டு மூன்று சக்திகளாக 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்? 

என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். "மாலைமலர்'' வாசகர்களுக்காகவே நவராத்திரி 9 நாட்கள் வழிபாட்டை தொகுத்து கொடுத்துள்ளோம். 9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம். 

1-வது நாள்-  

வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்) 
பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும். 
திதி : பிரதமை 
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும். 
பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். 
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை. 
ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும். 
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும். 

2-வது நாள் -

வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்) 
பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும். 
திதி : துவிதியை 
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக் களால் பூஜிக்க வேண்டும். 
நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம். 
ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம். 
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும். 
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும். 

3-வது நாள் 

வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்) 
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும். 
திதி : திருதியை 
கோலம் : மலர் கோலம் போட வேண்டும். 
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல். 
ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி. 
பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும். 

4-வது நாள் 

வடிவம் : மகாலட்சுமி (சிங் காசனத்தில் வெற்றி திருக் கோலம்) 
பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும். 
திதி : சதுர்த்தி 
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும். 
பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக் களால் அர்ச்சிக்க வேண்டும். நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல். 
ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம். 
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம். 
பலன் : கடன் தொல்லை தீரும். 

5-வது நாள் 

வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்) 
பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும். 
திதி : பஞ்சமி 
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும். 
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும். நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல். 
ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம். 
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். 

6-வது நாள் 

வடிவம் : சண்டிகாதேவி (சர்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்) பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண் டும். 
திதி : சஷ்டி. 
கோலம் : கடலை மாவினால் தேவி நாமதத்தை கோலமிட வேண்டும். பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம். நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம். 
ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம். 
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும். 

7-வது நாள் 

வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற்பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்) 
பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும். 
திதி : சப்தமி. கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும். 
பூக்கள் : தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை. 
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு. 
ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும். 
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும். 

8-வது நாள்

வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்) 
பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும். 
திதி : அஷ்டமி 
கோலம் : பத்ம கோலம் 
பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி. நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல். 
ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம். 
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும். 

9-வது நாள் 

வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்) 
பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும். 
திதி : நவமி 
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும். 
பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள். 
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை. 
ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும். 
பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கிய மாக இருப்பார்கள். 

10-வது நாள் 

வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)
திதி : தசமி 
பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும். 
நைவேத்தியம் : பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள். பூக்கள் : வாசனைப் பூக்கள். *

No comments:

Post a Comment