Sunday, March 17, 2013

நீங்களும் ஜீனியஸ்தான்


10,000 மணி நேரம் X பயிற்சி = ?

கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர்
நீங்களும் ஜுனியஸ் ஆக விரும்புகிறீர்களா? பார்முலா இதுதான்.

ஜுனியஸ் = 10,000 மணி நேரம் X பயிற்சி

இளையராஜாவை, ஏ.ஆர்.ரஹ்மானை இசைத்துறையில் ஜீனியஸ் என்கிறோம். காரணம் அளவிடமுடியாத அவர்களின் இசைஞானம். இசை அறிவு அவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

ராமனுஜத்தை, சகுந்தலாதேவியை கணிதத் துறையில் ஜீனியஸ் என்கிறோம். இந்த மேதை குணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

சுஜாதா ஒரு எழுத்துலக ஜீனியஸ். இந்த ஆற்றல் அவருக்கு எப்படி வந்தது?

தங்கள் இலட்சியமாக கருதிய துறையில் தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட பயிற்சிதான், அத்துறையில் அவர்களை கைதேர்ந்தவர்களாக மாற்றியது.
ஒருநாள் இரண்டு நாள் அல்ல ஒவ்வொரு நாளும் முனைப்போடு அவர்கள் செய்த பயிற்சி. பயிற்சி என்பதை விட தவம் என்று சொல்லலாம்.
எல்லோரிடமும் கனவிருக்கிற அளவிற்கு உழைப்பு அதிகமாக இல்லை என்பதுதான் நிறைய ஜீனியஸ்கள் உருவாகாமல் போனதிற்கான காரணம். ஜீனியஸ் என்று கண்டறியப்பட்ட யாருக்கும் உணவோ உடையோ மற்ற எதுவுமோ ஒரு பொருட்டாக இருந்ததில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தங்கள் துறையில் மேம்பட வேண்டும் என்ற எண்ணமும் உழைப்பும் மட்டும்தான்.

நீங்களும் ஜீனியஸ் ஆகலாம் பத்தாயிரம் மணி நேரம் பயிற்சி செய்தால்… இன்றிருந்து பயிற்சியை துவங்கினால் நீங்கள் எப்போது ஜீனியஸ் ஆவீர்கள் என்பதையும் பார்த்துவிடலாம்.

என்ன பட்டியலைப் பார்த்தவுடன் மலைப்பாக இருக்கிறதா? இப்படி பலர் மலைப்பதனால்தான் சிலர் மட்டுமே ஜீனியஸ் ஆகியிருக்கிறார்கள்.

உண்மையில் உங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் சாதிக்கவேண்டும் என்றதகிக்கும் விருப்பம் இருந்தால் உங்கள் பயிற்சியை உடனே துவங்குங்கள். உடனே சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதிக நேரம் பயிற்சி செய்யுங்கள்.

எந்த ஒரு துறையில் நாம் ஆழ்ந்த திறமை பெற்றிருந்தாலும் அதில் இன்னும் நாம் திறன் பெறமுடியும் என்பதை மட்டும் மறந்துவிடக்கூடாது. எனவே உங்கள் முயற்சியின் அளவையும் பயிற்சியின் அளவையும் அதிகரித்துக்கொண்டே இருங்கள். நீங்களும் ஜீனியஸ்தான்.

பயிற்சி நேரம்
(மணி நேரம்/நாள் ஒன்றிற்கு) ஜீனியஸாக ஆகும் காலம்
1. 7 வருடம் & 5 மாதம்
2. 13 வருடம் & 8 மாதம்
3. 9 வருடம் & 2 மாதம்
4. 6 வருடம் & 10 மாதம்
5. 5 வருடம் & 5 மாதம்
6. 4 வருடம் & 7 மாதம்
7. 3 வருடம் & 11 மாதம்
8. 3 வருடம் & 5 மாதம்

No comments:

Post a Comment