மச்சாவதாரம் :
படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மன். பிரம்மன் உறங்கும் காலமே உலகத்தின் பிரளய காலமாகும்.

மீண்டும் அவர் விழிக்கும்போது புது உலகம் சிருஷ்டிக்கப்படும். அவர் ஒரு சமயம் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் வாயிலிருந்து வேதங்கள் கீழே விழுந்து விட்டன.
அச் சமயத்தில், குதிரை முகம் கொண்ட ஹயக்கிரீவன் என்னும் அசுரன் வேதங்களை அபகரித்துக்கொண்டான். வேதங்களின் உதவியால்தான் பிரம்மன் படைக்கும் தொழிலைச் செய்து வருகிறார். அதைக் கெடுக்கவே ஹயக்கிரீவன் அவ்வாறு செய்தான்.
அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி, சத்தியவிரதன் என்ற ராஜரிஷி ( ராஜரிஷி = அரச முனிவர் ), நீரையே உணவாகக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார்.
அவர் பூஜைக்காக நதி நீரைக் கையில் அள்ளும்போது, கையில் ஒரு சிறு மீன் காணப்பட்டது.
அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை அறியாத முனிவர், அந்த மீனை மீண்டும் நீரில் விட முயலும்போது, அந்த மீன், " மகரிஷியே, என்னை நீரில் விடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை இரையாக்கி விடும். என்னைக் காப்பாற்றுங்கள்" என்று வேண்டியது.
அதன்படி முனிவர் அந்த மீனைத் தன கமண்டலத்தில் போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் அக்கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது.
பிறகு, அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டார். அதனுள்ளும் பெரிதாக வளர்ந்து விட்டது. பிறகு குளத்திலும், பெரிய ஏரியிலும் விட்டார்.
அது மிகப் பெரிதாக வளர்ந்து விடவே, இறுதியில், சமுத்திரத்தில் கொண்டுபோய் விட முயலும்போது, " மகரிஷியே, இந்தச் சமுத்திரத்தில் பெரிய திமிங்கலம் இருக்குமே. அது என்னைத் தின்று விடுமே " என்று கேட்டது.
அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை உணர்ந்துகொண்ட முனிவர், அவரிடம், " தாங்கள் இந்த உருவம் பெற்றமைக்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன ? " என்று கேட்டார்.
"மகரிஷியே, பிரம்மன் உறக்கத்தில் இருக்கிறார். ஏழாவது நாளில் சகல லோகங்களும் பிரளயம் ஏற்பட்டு மூழ்கப்போகின்றன. அச் சமயம் பெரிய ஓடம் ஒன்று இங்கே வரும். அதில், சப்த ரிஷிகளோடு ( சப்த ரிஷிகள் = முக்கியமான ஏழு முனிவர்கள் ) , நீங்களும், மூலிகை வித்துக்களையும் ஓடத்தில் ஏற்றிக்கொண்டு, பிரளய வெள்ளத்தில் சஞ்சரிப்பீர்கள். அப்போது, பிரம்மனின் உறக்கம் முடியும்வரை என் வாயுவால் ஓடம் கவிழ்ந்து விடாதவாறு உங்களைக் காப்பாற்றி வருவேன்.
அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்" என்று கூறிவிட்டு மறைந்தார்.
அதன்பின்னர், மச்ச உருவில் தோன்றிய மகாவிஷ்ணுவை நோக்கி, சத்திய விரதன் தியானம் செய்து கொண்டிருந்தார். ஏழாவது நாளில், பெரிய பிரளயம் ( பிரளயம் = மிகப் பெரிய வெள்ளம் ) ஏற்பட்டது. அப்போது, பெரியதோர் ஓடம் அங்கே வந்தது.
மகாவிஷ்ணு கூறியவாறே, சப்த ரிஷிகளோடு மூலிகை வித்துக்களையும் அந்த ஓடத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது, வாயுவால் ஓடம் அலைக்கழிக்கப்பட்டது.
அப்போது மச்சமூர்த்தி தோன்றிப் படகைத் தன் கொம்புடன் சேர்த்து ஒரு பாம்பால் இறுகக் கட்டி ஓடம் கவிழ்ந்து விடாதவாறு இழுத்துச் சென்றார்.
பிறகு, மகாவிஷ்ணு மகரிஷிக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார். பிரம்மனும் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார்.
அடுத்து சிருஷ்டித் தொழில் செய்ய வேண்டும். அப்போதுதான் வேதங்கள் காணாமல் போனது பிரம்மனுக்குத் தெரிந்தது. அதன்பின், ஹயக்கிரீவன் வேதங்களைக் கொண்டுபோய்த் தன் வாயில் மறைத்து வைத்திருப்பதை அறிந்த மச்சமூர்த்தி, ஹயக்கிரீவனோடு போரிட்டு அவனைக் கொன்று, வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் கொடுத்தார்.
பிரம்மனும், தடங்கலின்றித் தன் சிருஷ்டித் தொழிலைத் தொடங்கினார்.
கூர்ம அவதாரம்
மகாவிஷ்ணுவின் அருள் பார்வையால் தேவர்கள் சுகமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
ஒருநாள், துர்வாச முனிவர் வைகுந்தம் சென்று மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் தரிசனம் செய்யும்போது, மகாலட்சுமி மனம் மகிழ்ந்து, துர்வாச முனிவருக்கு ஓர் அழகான தாமரை மலர் மாலையைக் கொடுத்தார்.
அந்தத் தெய்வீக மாலையைக் கையில் ஏந்தியபடி முனிவர் வந்து கொண்டிருந்தபோது, தேவேந்திரன் ( தேவேந்திரன் = தேவர்களின் அரசன் ) தனது ஐராவதம் என்ற யானையின் மீது ஏறி உலா வந்துகொண்டிருந்தான்.
அப்போது, துர்வாசர் அம் மாலையைத் தேவேந்திரனுக்குக் கொடுத்தார். அவன் அதை அலட்சியமாக வாங்கி யானையின் பிடரி மீது வைக்க, அது நழுவிக் கீழே விழுந்தது. அந்தத் தெய்வீக மலர் மாலையை யானை தன காலால் மிதித்தது.
அதனைக் கண்ட முனிவர் கடும் கோபத்துடன், " தேவேந்திரா, மகாவிஷ்ணுவின் அருளினால்தான் நீ இந்தப் பதவியும், சிறப்பும் பெற்றிருக்கிறாய்.அதை மறந்து, மகாலட்சுமி கொடுத்த மலர் மாலையை இழிவு படுத்தி விட்டாய். அதனால், நீ லுட்சுமி கடாட்சத்தையும், தேவே பதவியையும் இழப்பாய்" என்று சாபம் இட்டார்.
துர்வாச முனிவர் இட்ட சாபத்தினால் தேவலோகம் முழுவதும் இருண்டது. தேவலோகத்திலிருந்த அனைவருக்கும், தேவேந்திரனால் சாபம் உண்டானது. தேவர்கள் அனைவரும் தமது பலம் முழுவதையும் இழந்தார்கள்.
அப்போது, அசுரர்களின் பலம் ஓங்கி, அவர்களின் அட்டகாசம் அதிகமாகி, தேவலோகத்திலிருந்து அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். அதனால், தேவேந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் அடைக்கலம் புகுந்தனர்.
பிரம்மனாலும் அவர்களின் துயரைத் தீர்க்க முடியவில்லை. அனைவரும், விமோசனம் வேண்டிப், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார்கள்.
மகாவிஷ்ணு, " தேவேந்திரா, அசுரர்களுடன் போரிட்டு அழிக்கும் சக்தி உங்களிடம் இல்லை. அதனால், நீங்கள் அசுரர்களுடன் சமாதானமாகி, திருப்பாற்கடலைக் கடைந்து, தேவ அமிர்தம் எடுத்து உண்டால் பலம் உண்டாகும். சாகா வரம் கிடைக்கும். பிறகு நீங்கள் இழந்ததைப் பெறலாம்" என்று கூறினார்.
அசுரர்களுடன் சமாதனம் பேச இந்திரனையே அனுப்பினார் பிரம்ம தேவர். இந்திரனும் அசுரர்களுடன் சமாதானம் செய்து, அமிர்தம் கடைவதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட்டனர்.
பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக மந்தார மலையைத் தூக்கிக்கொண்டு செல்லும்போது, பாரம் தாங்காமல் கீழே போட்டுவிட, பலர் மாண்டு போயினர். அப்போது மகாவிஷ்ணுவே அங்கு தோன்றி, அந்த மலையைத் தன ஒரு கையால் ஏந்திப் பாற்கடலின் நடுவே வைத்தார். வாசுகி என்ற பாம்பு மலையைச் சுற்றிக்கொண்டது.
தேவர்கள் பாம்பின் தலையைப் பிடிக்க, அசுரர்கள், " நாங்கள் கேவலமானவர்கள் இல்லை. பாம்பின் வாலை நாங்கள் பிடிக்க மாட்டோம். " என்று வீரம் பேசினார்கள்.
அவர்கள் விருப்பப்படி, தேவர்கள் பாம்பின் வாளையும், அசுரர்கள் தலையையும் பிடித்துப் பாற்கடலைக் கடைந்தபோது, மந்தார மலை பாற்கடலில் அமிழ்ந்து மூழ்கியது.
அச் சமயத்தில் மகாவிஷ்ணு ஒரு பெரிய ஆமை போன்ற கூர்ம அவதாரம் ( கூர்மம் = ஆமை ) எடுத்துக் கடலுக்குள் புகுந்து தன முதுகால் மலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.
மீண்டும் பாற்கடலைக் கடைந்தபோது, பாம்பின் வாயிலிருந்து விஷக்காற்று வெளிப்பட்டது. அதனால், தலைப் பக்கத்திலிருந்த அசுரர்கள் தாக்கப்பட்டுத் தங்கள் பலத்தை இழந்தார்கள்.
அப்போது மிகவும் கொடுமையான ஆலகால விஷம் பாற்கடலிலிருந்து வெளியே வந்தது. அதன் வேகத்தைப் பார்த்துப் பயந்த தேவர்களும், அசுரர்களும் மூளைக்கு ஒருவராக ஓடினார்கள். உடனே, தேவேந்திரன் சில தேவர்களுடன் சென்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் அங்கெ தோன்றிப் பாற்கடலிலிருந்த ஆலகால விஷத்தைத் தமது கையில் எடுத்துப் பருகினார்.
அதைக்கண்ட பார்வதிதேவி, ஆலகால விஷம் கீழே இறங்காதபடி சிவனின் கழுத்தைப் பிடிக்க, விஷம் கழுத்தளவிலேயே நின்று விட்டது. கழுத்து நீல நிறமானது. ( அதனால்தான் சிவபெருமானுக்குத் ' திருநீலகண்டன்' என்ற பெயர் உண்டாகியது.)
மீண்டும் பாற்கடலைக் கடைந்தபோது, காமதேனு என்ற தேவ பசு தோன்ற, முனிவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு, வெண்மையான குதிரை தோன்ற, அசுரர்கள் அதைப் பிடித்துக் கொண்டார்கள்.
அதன்பின், கற்பக மரம் தோன்றித் தேவலோகத்தை அடைந்தது. பிறகு, அப்சரஸ் என்ற நடனப் பெண்கள் தோன்றி, தேவலோகத்தில் நடனமாடச் சென்றார்கள். பிறகு, மகாலட்சுமி தோன்றி மகாவிஷ்ணுவுக்கு மாலை இட்டாள்.
பாற்கடலிலிருந்து வாருணி தேவி தோன்ற, அசுரர்கள் கைப்பற்றினர்.
இறுதியாக, மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி ஒரு தங்கக் கலசத்தில் தேவ அமிர்தத்தை ஏந்தியவாறு தோன்றினார். அசுரர்கள் வேகமாகச் சென்று, தேவர்களை முந்திக்கொண்டு அக் கலசத்தைப் பறித்துக் கொண்டார்கள்.
அப்போது, மகாவிஷ்ணு மோகினி என்ற அழகான பெண் உருவம் எடுத்து, அசுரர்களை மயக்கி, அமிர்தத்தைத் தேவர்களுக்கே பங்கிட்டுக் கொடுத்து, அசுரர்களை ஏமாற்றினார்.
அப்போது, ராகு என்னும் அசுரன் தந்திரமாகத் தேவர்களின் வரிசையில் சூரியன், சந்திரனுக்கு நடுவில் வந்து அமர்ந்து, அமிர்தத்தைப் பருகி விட்டான். அவன் அசுரன் என்பதை அறிந்து மகாவிஷ்ணு தன சக்கராயுதத்தால் ராகுவின் தலையை வெட்டினார்.
தேவ அமிர்தத்தை அருந்தியிருந்ததால், ராகு மரணமடையவில்லை. அப்போது, பிரம்மா ராகுவின் தலையுடன் ஒரு பாம்பின் உடலையும், அவன் உடலோடு பாம்பின் தலையையும் இணைத்துவிட, ராகு, கேது என்று இரு கிரகங்கள் உண்டாயின.
அமிர்த பானத்தை அருந்திய தேவர்கள் புதிய பலமும் சாகாவரமும் பெற்று, அசுரர்களை வென்று அவர்களைப் பாதாள லோகத்துக்கு ஓடும்படி விரட்டிவிட்டு, மீண்டும் தேவ லோகத்தைக் கைப்பற்றினார்கள்.
குறிப்பு: உலகம் முழுவதும் பரவலாக விளையாடப் படும் 'கயிறு இழுத்தல் போட்டி' பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது நீங்கள் கூட விளையாடி இருப்பீர்கள்.
இந்த விளையாட்டின் மூலம் மேலே நாம் வாசித்த கதை தான். இதனை ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளார்கள்.
கம்போடியா எனும் நாட்டில் உள்ள உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலான அங்கோர் வாட் எனும் விஷ்ணு பகவானுக்கான மிகப் பழமையான ஆலயத்தில், தென்புறத்தில், மூன்றாவது இணைப்பு பகுதியிலே, பாற்கடலில் அமிர்தம் எடுக்கும் காட்சி அழகாக விபரிக்கப் பட்டுள்ளது.
வராக அவதாரம்
ஒரு சமயம், மகரிஷிகள் ( முனிவர்கள் ) நால்வர் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் செல்லும்போது, ஏழாவது நுழைவாயிலில் காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் அந்த மகரிஷிகளைத் தடுத்தார்கள்.
எந்த நேரத்திலும் பகவானைத் தரிசிக்கும் அருளைப் பெற்ற அந்த ரிஷிகள் கோபமடைந்து, " நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்" என்று சாபமிட்டார்கள்.
ஜெய, விஜயர்கள் முனிவர்களைப் பணிந்து வணங்கி, " உங்கள் சாபப்படி நாங்கள் எப்பிறவி எடுத்தாலும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தை மறவாதிருக்க அருள் புரிய வேண்டும் " என்று கேட்டனர்.
மகாவிஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம், " இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானதுதான்.
இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து, பின், நம் அருளினால் நம்மையே அடைவார்கள் " என்று கூறினார்.
அதன்படி, இருவரும் கசிப முனிவருக்கும், அதிதிக்கும் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். முதலில் பிறந்தவன் இரண்யகசிபு.
அடுத்துப் பிறந்தவன், இரண்யாட்சன். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவமிருந்து, ' எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது ' என்று வரம் பெற்று, மூன்று லோகங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டான்.
இரண்யாட்சனும் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றுப் பலசாலியாகி, தேவர்களைப் பிடித்துக் கொன்று வந்தான்.
அவனுடைய கொடூரமான உருவத்தைப் பார்த்துத் தேவர்கள் அனைவரும் அவன் கண்ணில் படாமல் ஒளிந்து வாழ்ந்தார்கள்.
அவன் ஆணவம் அதிகமாகி, வருண பகவானை வம்புக்கு இழுத்தான். அதற்கு வருண பகவான், " அசுரனே, விஷ்ணு பகவான் வராக உருவம் ( பன்றி உருவம்) எடுத்து வருவார். அவரிடம் போராடு " என்று சொன்னார்.
அவன் வராக மூர்த்தியைத் தேடிப் பல திசைகளிலும் அலைந்து திரிந்தான்.
பூலோகம் நீர்ப் பிரளயத்தில் மூழ்கியதால், பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். அப்போது அவருடைய சுவாசத்திலிருந்து வெண்ணிறமாக சிறிய வராகம் ( பன்றி ) ஒன்று உருவாகிச் சிறிது சிறிதாக வளர்ந்து பிரம்மாண்டமான உருவம் எடுத்தது.
பிரளயத்தில் மூழ்கியிருக்கும் பூமியை வெளியே கொண்டுவரச் சமுத்திரத்தில் குதித்தது.
இச் சமயத்தில், எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால், இரண்யாட்சன் சோர்வடைந்து, அசுர லோகத்தில் சுகமாக இருந்தான்.
அப்போது நாரதர் அங்கே தோன்றி, " இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக்கொண்டு நீரில் மூழ்கியிருக்கும் பூமியை மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார் " என்று சொன்னார். உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான்.
வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன கதாயுதத்தால் அடித்தான். இருவருக்கும் கடும் போர் உண்டானது.
இரண்யாட்சன் அடித்த அடியால், மகாவிஷ்ணுவின் கதாயுதம் கையிலிருந்து நழுவி விழுந்தது.
தேவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இரண்யாட்சன் மீண்டும் தன கதாயுதத்தால் தாக்க, மகாவிஷ்ணு தம் இடக்காலால் அதைத் தட்டிவிட்டு, தம் கையில் சக்கராயுதத்தை வரவழைத்தார்.
இரண்யாட்சன் சூலாயுதத்தை ஏவினான். சக்கராயுதத்தால் சூலாயுதமும் பொடிப்பொடியானது. இரண்யாட்சன் ஆவேசத்துடன் மகாவிஷ்ணுவின் மார்பின்மீது ஓங்கிக் குத்தினான்.
பின், அவன் மாயமாக மறைந்து, ஆகாயத்திலிருந்து கற்களையும், அனேகவித பாணங்களையும் கொண்டு தாக்கினான்.
சிறிது நேரம் அவனுடைய ஆற்றலை விளையாட்டாக வேடிக்கை பார்த்தார் மகாவிஷ்ணு. அசுரர்கள் பலர், பயங்கரமான உருவங்களில் இரண்யாட்சனுக்கு உதவியாக வந்தனர்.
இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத் தலையின்மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின்மீது விழுந்து மடிந்தான். தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்
நரசிம்ம அவதாரம்
தன் தம்பி இரண்யாட்சன் வராகமூர்த்தியால் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த இரண்யகசிபு கொதித்தெழுந்தான்.
தேவர்களுக்கு மகாவிஷ்ணு துணையாக இருப்பதால், அவரைக் கொன்று விட்டால், தேவர்களை இலகுவாக வெல்ல முடியும் என்று தீர்மானித்தான்.
தேவர்களுக்கும், விஷ்ணுவுக்கும் பலத்தை அளிப்பது பூலோகத்தில் நடத்தப்படும் யாகங்கள்தான் என்பதை அறிந்த இரண்யகசிபு, எங்கெங்கு யாகங்கள் நடத்தப்படுகின்றனவோ, அந்த இடங்களை எல்லாம் நாசமாக்கினான். முனிவர்களை அடித்து வதைத்தான்.
இதனால், தேவர்கள் அனைவரும் அவதியுற்று, பூலோகத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள்.
இரண்யகசிபு பிரம்மனை நோக்கி நீண்டகாலம் தவமிருந்து, எவராலும், எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மனும் வரம் அளித்தார்.
இரண்யன், ஆணவம் மிகுந்து, தேவர்களையெல்லாம் அடிமைகளாக்கி, மூன்று லோகங்களையும் ஆட்சி செய்து வந்தான்.
தேவாதி தேவர்கள் எல்லாம் அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தார்கள். துன்பத்தைத் தாங்க முடியாமல், தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் வெகு விரைவில் இரண்யனைக் கொன்று, அவர்களைக் காப்பாற்றுவதாக அருளினார்.
தேவேந்திரன் இரண்யனைப் பழிவாங்க நினைத்து, இரண்யனின் மனைவி கருவுற்றிருந்தபோது அவளைச் சிலகாலம் ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ்ணுவின் மகிமைகளை அறிய வைத்தான்.
இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, மகாவிஷ்ணுவின் பக்தனாகியது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன்.
அனைவரும் இரண்யனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், இரண்யனின் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான்.
அதைப் பொறுக்க முடியாத இரண்யன், தன் மகன் என்றும் பார்க்காமல் ஆயுதங்களைக் கொண்டு கொல்ல முயன்றான்; தீ மூட்டி அதனுள் தள்ளி விட்டான்; ஆழமான கடலுக்குள் தள்ளினான்; நச்சுப் பாம்புகளை விட்டுக் கடிக்கச் செய்தான். இப்படி எத்தனையோ கொடுமைகளைச் செய்தான்.
ஆனால், எல்லா ஆபத்துகளிலிருந்தும் மகாவிஷ்ணு பிரகலாதனைக் காப்பாற்றினார்.
"தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஹரி என்று அழைக்கப்படுகின்ற மகாவிஷ்ணுவேதான்" என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட இரண்யன், " அந்த ஹரி எங்கே இருக்கிறான் ? " என்று கேட்டான்.
அதற்க்கு பிரகலாதன், " எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் " என்று ஒரு தூணைக் காட்டினான்.
இரண்யன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது, ஸ்ரீமந் நாராயணனாகிய மகாவிஷ்ணு, சிங்க முகமும், மனித உடலும்கொண்ட நரசிம்ம அவதாரத்தில், தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார்.
அவரைத் தாக்கப் பாய்ந்தான் இரண்யன். நரசிம்மர் தன் நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்து, குடல்களை உருவி, மாலையாக அணிந்து கொண்டார்.
பூமியிலும், ஆகாயத்திலும் அவன் உடல் படாமல், தமது மடியில் வைத்துக் கொன்றார். அந்த நேரம் இரவுமின்றி, பகலுமின்றி மாலை வேளையாக இருந்தது.
மகாவிஷ்ணுவின் பயங்கரமான நரசிம்ம உருவத்தைக் கண்டு, தேவாதி தேவர்கள் எல்லாரும் அருகில் வரப் பயந்து, தூரத்திலிருந்தபடியே வணங்கினார்கள். பக்த பிரகலாதன் அவர் அருகில் சென்று இனிய பாடல்களைப் பாடி வணங்கினான். அப்போது, ஸ்ரீ நரசிம்மர் தமது கோபம் தணிந்து, அனைவருக்கும் அருள் புரிந்து மறைந்தார்.
வாமன அவதாரம்
பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் பலி என்ற அசுரன் தாக்கப்பட்டான்.
மற்ற அசுரர்கள் அவனை உயிர் பிழைக்கச் செய்தார்கள். அசுர வம்சத்து முனிவர்களும், அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியரும் அவனுக்குப் பழைய தேக பலத்தையும், சக்தியையும் அளித்தார்கள்.
அவனைப் பெரிய யாகம் ஒன்று செய்ய வைத்தார்கள். அந்த யாகத்திலிருந்து இரதம் ஒன்று வெளியே வர, அதன்மீதேறித் தேவலோகம் சென்ற பலி, இந்திரனை விரட்டியடித்து தேவலோகமான அமராவதியைக் கைப்பற்றினான்.
மகாபலி என்ற பெயருடன் சக்கரவர்த்தி ஆகினான்.
மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆட்சி மூன்று லோகங்களிலும் பரவியது. தேவர்கள் தேவலோகத்தைவிட்டு ஓடி மறைந்தார்கள்.
இதை அறிந்த தேவமாத அதிதி வேதனையுற்றுக் கணவர் காசிபரிடம் முறையிட, அவர், மகாவிஷ்ணுவை நினைத்து விரதமிருக்கும்படி கூறினார். அவளும் பன்னிரண்டு நாட்கள் கடுமையான விரதமிருந்தாள்.
மகாவிஷ்ணு காட்சியளித்து, " தேவமாதாவே, மகாபலிச் சக்கரவர்த்தி பிராமணர்கள் செய்த யாகத்தினால் வலிமையடைந்திருக்கிறான்.
அதனால், அவனிடமிருந்து தேவலோகத்தை மீட்க, உனக்குப் புத்திரனாக நானே அவதரிப்பேன்." என்று அருளினார். அதன்படியே, அதிதியின் கருவில், வாமனமூர்த்தியாக அவதரித்தார், மகாவிஷ்ணு.
வாமனமூர்த்தி தம் குள்ளமான உடலுடன் மகாபலிச் சக்கரவர்த்தியின் அசுவமேத யாகசாலைககுச் சென்றார். மகாபலி அவரை வரவேற்று, உபசரித்து, உட்காரவைத்து அவருடைய பாதங்களைக் கழுவினான்.
கழுவிய நீரைத் தன தலைமேல் தெளித்துக்கொண்டான்.
பின் அவரிடம், தன்னை நாடி வந்த நோக்கம் என்ன என்று கேட்டான். எதுவாக இருந்தாலும் தருகிறேன் என்று வாக்குறுதியளித்தான்.
"மகாபலியே, கேட்பது எதுவாக இருந்தாலும் கொடுப்பதாக வாக்களித்து விட்டாய். எனக்கு வேண்டியது, என் கால்களால் அளந்த மூன்று அடி மண்தான். அதைக்கொடு " என்று கேட்டார்.
அதைக்கேட்ட மகாபலி மகிழ்ச்சியுடன், " மூன்று லோகங்களையோ, ஓர் இராஜ்யத்தையோ கேட்காமல், மூன்றடி நிலம் கேட்கிறீர்கள். அப்படியே தருகிறேன் " என்று கூறினான்.
அச் சமயத்தில் சுக்கிராச்சாரியார் குறுக்கிட்டு, " குள்ளமான உருவத்தில் வந்திருப்பது உன் குலவிரோதி மகாவிஷ்ணுதான் "என்று கூற, மகாபலி பதிலாக," என் குலவிரோதியானாலும், நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் " என்று கூறிவிட்டுத் தன மனைவி கொண்டுவந்த நீர் நிரம்பிய கெண்டி ( கேத்தல் போன்ற பாத்திரம் ) யிலிருந்து தண்ணீரை ஊற்றித் தாரை வார்க்க முயன்றார்.
உடனே சுக்கிராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, தண்ணீர் வெளியே வராமல் கெண்டியின் துவாரத்தை அடைத்து நின்றார்.
இதையறிந்த வாமனர், தன கையிலிருந்த தர்ப்பைப் புல்லால் துவாரத்தைக் குத்த, வண்டு ஒரு கண்ணை இழந்தது.
இதனால் சுக்கிராச்சாரியார் ஒற்றைக்கண் உடையவர் ஆனார். மகாபலி, கெண்டியிலிருந்து நீரைத் தாரை வார்த்துத் தானம் கொடுத்தவுடன், வாமனரின் உருவம் வளர்ந்தது, மிகவும் வளர்ந்து பிரம்மாண்டமானது. மகாபலி அவரை அண்ணாந்து பார்த்தான்.
வாமனர் வானத்தை ஓர் அடியாலும், நிலத்தை மறு அடியாலும் அளந்தார். பின், " ஓர் அடியால் விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்து விட்டேன்.
மூன்றாவது அடியை எங்கே வைப்பது ? " என்று கேட்டார். மகாபலி சற்றும் தயங்காமல், " ஸ்ரீ மகாவிஷ்ணுவே, தங்கள் மூன்றாவது அடியை என் தலைமேல் வையுங்கள் " என்று கூறித் தலை சாய்ந்து, வணங்கி நின்றார்.
மகாவிஷ்ணு தமது ஒரு பாதத்தை அவன் தலைமீது வைத்து அழுத்த, மகாபலியும், அவனைச் சேர்ந்த அசுரர்களும் பாதாள லோகத்தை அடைந்தார்கள்.
பிரம்மனும், பிரகலாதனும், மகாபலிககுத் துன்பம் நேராதவாறு காக்கும்படி மகாவிஷ்ணுவை வேண்ட, "வரப்போகும் சாவர்ணி மனுயுகத்தில் மகாபலி இந்திரபதவியை அடைவான். அதுவரை, அவனை நானே காத்து வருவேன் " என்று கூறி, அனைவர்க்கும் அருள் புரிந்தார்.
பரசுராம அவதாரம்
புரூரவசுவுக்கும், தேவலோக அழகியான ஊர்வசிக்கும் பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவன் காதி.
காதி சந்திர வம்சத்தில் பிரசித்தி பெற்ற மன்னன். காதிக்கு சத்தியவதி என்ற மகள் இருந்தாள்.
அவளை ரிஷிகன் என்ற பிராமணன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். தன மகளை ஒரு ஏழைப் பிராமணனுக்குக் கொடுக்க விரும்பாத அரசன், " ஒரு காது பச்சையாகவும், மற்ற அம்சங்கள் வெண்மையாகவும் உள்ள ஆயிரம் குதிரைகளை நீ கொடுத்தால் என் மகளைக் கொடுக்கிறேன் " என்று சொன்னான்.
ரிஷிகனால் அதைக் கொண்டுவருவது முடியாத காரியம் என்று அரசன் நினைத்தான். ரிஷிகனோ, வருண பகவானை வேண்டி, அரசன் கேட்டவாறு ஆயிரம் குதிரைகளைப் பெற்று வந்து அரசனிடம் கொடுத்து சத்தியவதியைத் திருமணம் செய்துகொண்டான்.
சிறிது காலத்துக்குப் பிறகு, சத்தியவதிக்கு ஒரு பிள்ளை வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. சத்தியவதியின் தாய் தனக்கு ஒரு மகள் இல்லையே என்று கவலைப்பட்டாள்.
இருவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற எண்ணிய ரிஷிகன், விசேஷ சக்தி கொண்ட பால்சோறு தயாரித்து அதை இரண்டு பாகமாகப் பிரித்து முதல் பாகத்தைத் தன மனைவிக்கும், இரண்டாவது பாகத்தை அவள் தாய்க்கும் கொடுக்கும்படி வைத்துவிட்டு, நீராடச் சென்று விட்டான்.
அச் சமயத்தில் சத்தியவதியின் தாய் அங்கே வந்து, இரண்டாம் பாகத்தைத் தன மகளுக்குத் தந்து, முதல் பாகத்தைத் தானே உண்டுவிட்டாள். சிறிது நேரம் கழித்து வந்த ரிஷிகன், நடந்ததை அறிந்து பதறினான்.
தன மனைவியிடம், " பிராமண மந்திரம் ஏற்றிய உணவை உன் தாய் அருந்திவிட்டாள். அவளுக்குப் பிறக்கும் மகன், பிரம்ம ஞானியாகப் பிறப்பான். க்ஷத்ரிய மந்திர உருவேற்றியதை நீ அருந்தியதால், உனக்குப் பிறக்கும் மகன் கொடிய அரச குணங்களோடு விளங்குவான் " என்று கூறி வருந்தினான்.
ரிஷிகனின் மனைவிக்கு ஜமதக்னி என்னும் மகன் பிறந்தான். அதன்பிறகு, ஜமதக்னி ரேணுகாதேவியை மணம் புரிந்து, அசுமணன் முதலிய பல புத்திரர்களைப் பெற்றான். அவர்களில் ஒருவன்தான் பரசுராமன். இவன் மகாவிஷ்ணுவின் அவதாரம்.
பரசுராமன் தன்னைப் பலம் மிக்கவனாகவும், தனக்கு நிகர் யாரும் இல்லைஎன்றும் எண்ணிப் பூமியை இருபத்தொரு முறை வலம் வந்தான். க்ஷத்ரியர்களக் கொன்று பழி தீர்த்தான்.
சூரிய வம்சத்தில் பிறந்தவனாகிய கேகய நாட்டு மன்னன்திருதவீரியனின் மகன் கார்த்தவீரியார்ச்சுனன் என்பவன்.
இவனுக்குப் பிறவியிலேயே கால்கள் இல்லை. பன்னிரண்டு வயதுக்குமேல்,தாத்தாத்ரேயரிடம் ஞான உபதேசம் பெற்றுப் பலசாலியாக நாட்டை ஆண்டு வந்தான்.
கார்த்தவீரியார்ச்சுனன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது, அவனுக்கும் அவனது படையினருக்கும் கடும் பசி உண்டானது.
அப்போது, ஜமதக்னி முனிவர், தன்னிடமிருந்த காமதேனு என்னும் தேவ பசுவின் உதவியால் அவர்கள் அனைவர்க்கும் அறுசுவை உணவளித்தார். மன்னன் என்ற திமிர் படைத்த கார்த்தவீரியார்ச்சுனன், " காட்டில் வாழும் முனிவருக்குக் காமதேனு தேவையில்லை. ஆகவே, அதை எனக்கே கொடுங்கள்" என்று கேட்டான்.
முனிவர் மறுக்கவே, மன்னன் அந்தத் தேவ பசுவைப் பலவந்தமாகத் தன நாட்டுக்குப் பிடித்துச் சென்றான்.
அதையறிந்து கோபம் கொண்ட ஜமதக்னியின் மகன் பரசுராமன், கவசம் அணிந்து, வில்லையும் கோடரியையும் ஏந்திக்கொண்டு விரைந்து சென்றான்.
தனியாகவே வீரத்துடன் போராடி, மன்னனின் தலையை வெட்டி வீழ்த்திவிட்டுக் காமதேனுவை மீட்டு வந்தான்.
இதையறிந்த ஜமதக்னி முனிவர், " அரசனைக் கொன்றது ஒரு பிராமணனைக் கொன்றதைவிட அதிக பாவமான காரியமாகும். அதனால், அப்பாவம் தீர நீ யாத்திரை செய்து வருவாயாக " என்று கூறி அனுப்பி வைத்தார். அவ்வாறே, பரசுராமன் யாத்திரை சென்று வந்தான்.
ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவி ஒருமுறை மனச் சபலமுற்று, ஹோம காலத்துக்குள் தண்ணீர் கொண்டுவரத் தாமதமாகி விட்டதால், கடும் கோபம் கொண்ட முனிவர், " அவளைக் கொன்று விட்டு வா " என்று தன மகனிடம் ஆணையிட, பரசுராமன் தன கோடரியால் தன தாயை வெட்டி வீழ்த்தினான்.
" மகனே, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் " என்று தந்தை கூற, பரசுராமன் அதற்கு, " என் தாயாரும், சகோதரர்களும் பிழைத்து எழ வேண்டும் " என்று கேட்க, முனிவரும் அவ்வாறே அருள் செய்தார். தாயும், சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள்.
தன்னுடைய தந்தைக்கு இவ்வளவு சக்தி அவரது தவ வலிமையால்தான் கிடைத்தது என்று எண்ணிய பரசுராமன் தானும் தவம் செய்யக் காட்டுக்குச் சென்றான்.
அந்நேரத்தில், கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்கள் பரசுராமனைப் பழிவாங்க நினைத்து, பரசுராமனின் தந்தை ஜமதக்னியின் தலையை வெட்டி விட்டனர். அதைப் பார்த்த ரேணுகாதேவி அலறினாள். அவளது அழுகையொலி கேட்டுப் பரசுராமன் கடும் கோபம் கொண்டு, கோடரியை ஏந்திக்கொண்டு, கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்களை வெட்டி வீழ்த்தினான்.
அத்தோடு கோபம் தீராமல், " இருபத்தொரு தலைமுறைகள் க்ஷத்ரியர் வம்சம் தழைக்காமல் இருக்க அவர்களை நாசம் செய்வேன்" என்று சபதம் ஏற்றான்.
பின், தந்தையின் தலையையும், உடலையும் ஒன்று சேர்த்து அக்கினியில் சம்ஸ்காரம் செய்தார். ஜமதக்னி முனிவர் சப்தரிஷி மண்டலத்தில் நட்சத்திரமாகப் பிரகாசித்தார்.
பரசுராமன் தான் செய்த சபதப்படி, இருபத்தொரு முறை உலகை வலம் வந்து க்ஷத்ரியர்களை வதம் செய்து, பூமியை முழுவதும் கைப்பற்றிக் காசிபர்க்குத் தானம் செய்துவிட்டு, மகேந்திர பர்வதத்தை அடைந்து தவம் இயற்றிக்கொண்டு வருகிறார்.
அவர் இப்போதும் உயிர் வாழ்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. அவர் சாகாவரம் பெற்றவராகையால், அவர் சிறந்சீவிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்
ராமாவதாரம்
வைகுந்தத்தில் துவார பாலகர்களாக இருந்த ஜயன், விஜயர்கள் அடுத்த ஜென்மத்தில் இராவணன், கும்பகர்ணன் ஆக பூமியில் பிறந்தார்கள்.
விசுவரசு என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சளி என்பாளுக்கு குபேரனும், இரண்டாவது மனைவி கேகயி என்பவளுக்கு இராவணனும் பிள்ளைகளாக பிறந்தனர்.
கேகயி, தன் மகன் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என நினைத்து மகனை அதற்காக தவம் செய்யுமாறு கூறினார். இராவணனும் கடும் தவம் புரிந்தான்.
தவத்தின் இறுதியாக, தனது தலையை திருகி, அக்கினியில் இட்டு, தவத்தினை பூர்த்தி செய்ய நினைத்து, தனது தலையை திருகப் போகும் போது பிரம்மன், அவன் முன் காட்சி அருளினார்.
இராவணன், அவரிடம் தனக்கு, தேவர்களாலோ, அரக்கர்களாலோ, விலங்குகளாலோ மரணம் நேர கூடாது என்ற வரத்தினை பெற்றுக்கொண்டான்.
இவ்வாறு தான் பெற்றுக்கொண்ட தவ வலிமையினால் தேவலோகத்தினை அதிரச் செய்தான். தேவேந்திரனை வென்று அமராவதியை கைப்பற்றினான்.
பூலோகத்தில், இலங்கை முதலில் குபேரனிடம் இருந்தது. குபேரன், தன் தம்பி இராவணன், இலங்கையை விரும்பி கேட்டு விட்டதால், அவனுக்கே அதனை கொடுத்து, இலங்கேசுவரன் என்ற பட்டத்தினையும் சூட்டினான்.
எனினும் பறக்கும் தன்மை கொண்ட புஷ்பக விமானத்தினை குபேரன் தனக்கு தராமல், தன்னுடன் கொண்டு சென்று விட்டான் என கோபம் அடைந்து, அண்ணன் என்று கூட பாராது, படை எடுத்து சென்று, அவனிடம் இருந்த புஷ்பக விமானத்தினை கைப்பற்றினான்.
இராவணனின் செயல்கள் நாளுக்கு நாள் வரம்பு மீறி சென்று கொண்டிருந்ததால், தேவர்கள் வேறு வழி இன்றி பிரம்மாவிடம் சென்று முறையிட, வரம் அளித்த பிரம்மாவோ அவனை அளிக்க வழி தெரியாமல் சிவனிடம் சென்றார். சிவனோ அனைவரையும் அழைத்து கொண்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.
இராவணன், பிரம்மனிடம் சாகாவரம் கேட்டு கொள்ளும் போது தனக்கு 'மனிதனால்' மரணம் நேர கூடாது என கேட்கவில்லை. இதனை கூறிய மகாவிஷ்ணு, தான் ராமவதாரம் எடுத்து இராவணனை அளிப்பதாக அறிவித்தார்.
பூமியிலே, சூரிய வம்சத்தினை சேர்ந்த தசரத சக்கரவர்த்தி என்பவர் அயோத்தியை ஆண்டு வந்தார். அவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேகி என மூன்று மனைவிகள்.
நீண்ட காலமாக மூன்று பேருக்கும் குழந்தைகள் இல்லாததால் புத்திர காமாட்சி யாகம் செய்து மூவரும் குழந்தை பாக்கியம் பெற்றுக்கொண்டனர்.
கோசலைக்கு மகாவிஷ்ணுவின் அம்சமாகிய ராமனும், சுபத்திரைக்கு சேஷசம்சமாக இலட்சுமணனும், சங்கின் அம்சமாக சத்துருக்கனும், கைகேயிக்கு சக்கரத்தாழ்வார் அம்சமாக பரதனும் பிறந்தனர்.
நால்வரும் வசிஷ்ட முனிவரிடம் கல்வி பயின்று வந்தனர். விசுவாமித்திரர் எனும் முனிவர், தாம் செய்ய விருக்கும் யாகத்திணை அசுரர்களிடம் இருந்து காக்க, இராமன், இலக்சுமன் ஆகியோரை அழைத்து சென்றார்.
அவர்களுக்கு சில மந்திரங்களையும் உபதேசித்தார். யாகம் முடிந்த பின், விசுவாமித்திரர் இரு இளவரசர்களையும் மிதிலைக்கு அழைத்து சென்றார். அங்கே ஜனகர் எனும் அரசர் வைத்திருந்த வில்லை ஒடித்து ஜானகியை திருமணம் செய்து கொண்டார் இராமன்.
மன்னர் தசரதர், இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய விரும்பி அதற்கான ஏற்பாட்டை செய்தார். அனால் கைகேகி, கூனி என்பாள் பேச்சினை கேட்டு தசரதர் இடம் தன் மகன் பரதனே நாட்டை ஆளவேண்டும், இராமன் காடு செல்ல வேண்டும் என்று வாதாடி, அதனை நிறைவேற்றிக் கொண்டாள்.
அதன் படியே இராமன், சீதை, லட்சுமணன் மூவரும் வனவாசம் சென்றார்கள். பிள்ளைகள் காடு சென்ற அதிர்ச்சி தாங்காமல் தசரதர் உயிர் துறந்தார்.
இராமன் காட்டில், குகன் எனும் ஓடக்காரரின் உதவியுடன் பரந்துவாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு சென்றார். பின் சித்ரக்கூடத்தில் இராமன் தன் மனைவி தம்பியுடன் தங்கி இருந்தார்.
அண்ணனின் பட்டாபிசேக விழாவுக்கு, ஏனைய மன்னர்களை அழைக்க சென்று இருந்த பரதன் ஊர் திரும்பி தனது தாயின் இழி செயலை கண்டு குமுறி இராமனை அழைத்து வர சித்திர கூடம் சென்றான். அனால் இராமர், பதினான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் தான் நாடு திரும்புவேன் என கூறி பரதனை அனுப்பி வைத்தார்.
அதன் பின்னர் மூவரும் சித்திர கூடத்தில் இருந்து வெளியேறி தண்டகரன்யத்தில் முனிவர்களுடன் வாழ்ந்து வந்தனர். அப்பகுதிக்கு வந்த இராவணனின் தங்கை சூர்ப்பனகை இராமன் மீது மோகம் கொண்டு அணுகியதால், மூக்கறுபட்டாள்.
இதனால் சூர்ப்பனகை தன் அரக்கர் கூட்டத்தினை அழைத்து வந்து இராமனுடன் போரிட, பல அரக்கர்கள் அழிந்தார்கள். இந்த நிகழ்வே இராவணன் அழிவுக்கு ஆரம்ப காரணமாக அமைந்து விட்டது.
மூக்கு அறுபட்ட சூர்ப்பனகை, இராமனை பழி வாங்கும் நோக்குடன் இலங்கை சென்று, சீதையின் பேரெழில் குறித்து, இராவணனிடம் வர்ணித்தாள்.
இது இராவணன் மனதில் ஆசையை தூண்ட, அவனும் வஞ்சகமாக சீதையினை கவர்ந்து வந்து இலங்கையிலே அசோகவனத்திலே சிறை வைத்தான்.
சீதையை மீட்க இராம, லட்சுமணருக்கு வாயு புத்திரன் ஆன அனுமன் உதவி கிடைத்தது. அனுமன் தன் ஆற்றலினால் இலங்கை சென்று சீதை இருக்குமிடத்தை அறிந்து வந்தார்.
அதன் பின் அனுமனின் உதவியுடன் கடலில் பாலம்அமைத்து இலங்கை சென்றனர். இராமனின் படைக்கும் இராவணன் படைக்கும் மிக கடும் யுத்தம் நடந்து இறுதியில் இராமன் இராவணனை அழித்து, அவனது தம்பி விபிசணனை, இலங்கை வேந்தனாக முடி சூட்டினார்.
இராவணன் சிறையில் இருந்த சீதை, தீக்குளித்து, தான் மாசற்றவள் என உலகிற்கு நிரூபித்த பின்னரே, இராமர், அயோத்தி திரும்பி பட்டாபிசேகம் செய்தார்.
எனினும் தன்னைப்பற்றி குடிமக்கள் சிலர் அவதூறாக பேசுவதை பொறுக்க முடியாமல், இராமன், கருவுற்று இருந்த சீதையினை காட்டுக்கு அனுப்பி வைத்தார்.
சீதை, வால்மீகி முனிவரது ஆசிரமத்தில் தங்கி இருக்கையில் லவ, குச எனும் இருவரை ஈன்றாள். அதன் பின் தன் வாழ்வு நீங்கி பூமியினுள் மறைந்தாள்.
இராமனும் இறுதியில் சரயு நதியில் இறங்கி தன் ராமாவதாரத்தினை முடித்து கொண்டு வைகுந்தம் சென்றார்.வைகுந்தத்தில் துவார பாலகர்களாக இருந்த ஜயன், விஜயர்கள் அடுத்த ஜென்மத்தில் இராவணன், கும்பகர்ணன் ஆக பூமியில் பிறந்தார்கள்.

அதன் பின் அனுமனின் உதவியுடன் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்றனர். இராமனின் படைக்கும் இராவணன் படைக்கும் மிக கடும் யுத்தம் நடந்து இறுதியில் இராமன் இராவணனை அழித்து, அவனது தம்பி விபிசணனை, இலங்கை வேந்தனாக முடி சூட்டினார்.

இராமனும் இறுதியில் சரயு நதியில் இறங்கி தன் ராமாவதாரத்தினை முடித்து கொண்டு வைகுந்தம் சென்றார்.
கிருஷ்ண அவதாரம்
அசுரர்களின் அக்கிரம செயலால் பாவங்கள் அதிகரித்து பாரம் தாங்காமல் பூமாதேவி பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டாள். அதற்கு பிரம்மாவோ, சிவன் மற்றும் தேவர்களையும் அழைத்து கொண்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள்.
மகாவிஷ்ணுவும் அவர்கள் குறையை தீர்த்து வைப்பதாக கூறினார்.
யது வம்சத்தில் போஜகுலத்தில் தோன்றிய உக்ரசேனனின் மகன் கம்சன். இவன் வட மதுராவை ஆண்டு வந்தான். இவனுக்கு கம்சை, தேவகி என இரண்டு சகோதரிகள். இதில் தேவகி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான் கம்சன். தேவகியை, சூரசேன மகாராஜாவின் மகனான வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.
இவர்கள் இருவரையும், கம்சன் தன் ரதத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்ற போது, தீடிரென ஆகாயத்தில் இருந்து அசரீரி ஒன்று, ''கம்சா, தேவகியின் எட்டாவது பிள்ளையால் நீ கொல்லப்படுவாய்'' என்று கூறியது.
இதனால் கடும் குழப்பமடைந்த கம்சன் தன் தங்கையை கொல்ல முற்பட, வசுதேவர் தடுத்து, ''இவளால் உனது உயிருக்கு பிரச்சினை இல்லையே. எனவே இவளை விட்டு விடு.
இவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் உன்னிடம் கொடுத்து விடுகிறேன். அவற்றைக் கொன்றுவிடு''. என்று கூற, அதனை ஏற்று தேவகியை உயிருடன் விட்டான். எனினும் அவர்கள் இருவரையும் சிறையுள் வைத்திருந்தான். தேவகிக்கு சிறையுள் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொலை செய்தான்.
எழாவது குழந்தையாக ஆதிஷேசன் கருவில் தங்கினான். ஏழாவது மாதத்தில் மகாவிஷ்ணுவின் மாயையால் வசுதேவரின் முதல் மனைவி ரோகினியின் கருவில் சேர்க்கப்பட்டு பலராமனாக பிறந்தார்.
தேவகிக்கு பிறக்க போகும் எட்டாவது குழந்தைக்காக ஆவேசத்துடன் காத்திருந்தான் கம்சன். எட்டாவது குழந்தையாக அவதரித்தார் மகாவிஷ்ணு.
அவருடைய ஆணைப்படி அக்குழந்தையை கோகுலத்தில் இருந்த நந்த கோபரின் மனைவி யசோதையிடம் மாற்றி அவள் பெற்ற பெண் குழந்தையை தேவகியிடம் கொண்டு சேர்த்தார் வசுதேவர்.
கம்சன் பெண் குழந்தை என்றும் பாராமல் அதனை கொல்ல முயன்ற போது அது அவன் பிடியில் இருந்து தப்பி வானத்தில் பறந்து சென்றது. ''கம்சா!, நீ என்னை கொல்ல முடியாது. உன்னை கொல்பவன் ஏற்கனவே பிறந்து விட்டான்''. என்று கூறி மறைந்தது.
கோகுலத்தில் பலராமனும், கிருஷ்னனும் ஒன்றாகவே வளர்ந்து கன்றுகளை மேய்த்து வந்தனர்.
கம்சன் தன்னை அழிக்கப் பிறந்திருக்கும் குழந்தையை தேடி அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். எதுவுமே வெற்றி பெறவில்லை.
கிருஷ்ணனை கொல்ல நினைத்த கம்சனின் முயற்சிகள் பலவும் வீணாகின.
ஆயர்பாடியில் கிருஷ்ணன், வருடாந்த இந்திர விழா தடுக்கப்பட்டதால், கோபம் அடைந்த இந்திரனின் ஆணவத்தினை, கோவர்த்தன மலையை குடையாக ஏந்தி, மக்களை காத்ததன் மூலம் அழித்தான்.
இறுதியாக கம்சன், மல்யுத்த வீரர் இருவரை அனுப்பி பலராமன், கிருஷ்ணன் இருவரையும் மல்யுத்தம் மூலம் கொல்ல முயன்றான். எனினும் இருவரும் கொல்லப்பட கம்சன் தானே கிருஷ்ணனுடன் மோத முயன்றான்.
இறுதியில் கிருஷ்ணன், கம்சனை தரையில் தள்ளி அவன் மீது பாய்ந்து மேலே அமர்ந்ததும் பாரம் தாங்காமல் கம்சன் இறந்தான.
பின்னர் பலராமனும், கிருஷ்ணனும் சிறையில் இருந்த தமது தாய், தந்தையரை விடுவித்தனர். அதன் பிறகு இருவரும் கோகுலத்துக்கு செல்லாமல் வசுதேவருடனே இருந்து வந்தனர்.
இருவருக்கும் சாந்தீப முனிவர் கல்வி போதித்து வந்தார். குருதட்சனையாக குருவின் இறந்து போன மகனை மீட்டு கொடுத்தார்கள்.
கம்சனின் மரணத்தினை தாங்காது அவனது மனைவிகள் தமது தந்தை ஜராசந்தனிடம் அழுது புலம்ப அவன் கோபம் கொண்டு யாதவ குலத்தினையே அழித்துவிடுவதாக கூறி படை எடுத்து வந்தான். ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து செல்லும் போதும் மனம் தளராது மீண்டும் மீண்டும் வந்தான்.
இதனால் யாதவ குலத்தினை காக்க, விஸ்வகர்மா மூலமாக துவாரகை எனும் பெரும் பட்டணத்தை நிருமானித்து அதில் யாதவர்களை குடியேற செய்தான் கிருஷ்ணன்.
விதர்ப்பராஜாவின் மகளான ருக்மிணி, தனது தந்தை தன்னை சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயத்திருபதனை அறிந்து, தன்னை காப்பாறும்மாறு கிருஷ்ணனிடம் தகவல் அனுப்ப அவளை மீட்டு பின்னர் மணந்து கொண்டான்.
உறவினரான குந்திதேவி, கணவரை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் கஷ்டப்படுவதனை அறிந்து உதவிகள் புரிந்தார்.
அவளது பிள்ளைகளான பாண்டவர்களுக்கு சேர வேண்டிய நாடு, நகரங்கள் எல்லாவற்றையும், துரியோதனன் வஞ்சகமாக, சூதாட்டம் மூலம் பறித்து கொண்டு, அவர்கள் மனைவி பாஞ்சாலியையும் மானபங்கம் செய்தான்.
அவர்கள் வனவாசம் சென்று வந்தால் நாடு, நகரங்கள் எல்லாவற்றையும் திருப்பி கொடுப்பதாக சொன்ன சொன்ன துரியோதனன் அவ்வாறு செய்யவில்லை. இது குறித்து தூது சென்ற கிருஷ்ணனையும் இழிவாக பேசினான்.
இதனால் பாரத போர் மூண்டது. கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு தேர்ரோட்டியாக இருந்து போரை நடத்தினான். ஒரு சமயம் தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, தன் விசுவரூபம் காட்டி பகவத் கீதையை உபதேசித்தார்.
பாரத போர் முடிவில் பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தினை ஆண்டு வந்தனர்.
அதே வேளையில் துவாரகையில், கிருஷ்ணன், பலராமன் இருப்பதனால் தம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என யாதவர்கள் இறுமாப்பு அடைந்து பெரும் அக்கிரமங்களில் ஈடுபட்டனர். கிருஷ்ணன், பலராமன் கூட அவர்களை அடக்க பெரும் சிரமப்பட்டனர்.
ஒருசமயம் துவாரகை வந்த முனிவர்கள் சிலரை ஏளனம் செய்து, ஒரு ஆடவனை கர்ப்பவதி போல காட்டி இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என கேட்க, கோபம் கொண்ட முனிவர்கள் 'இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே உங்கள் குலத்தினையே அழிக்கும்''. என சாபமிட்டனர்.
முனிவர்கள் கூறியவாறே இரும்பு உலக்கை அவன் வயிற்றில் இருப்பதை கண்டு பயந்து அதனை பொடிப் பொடியாக்கி கடல் நீரில் கரைத்தனர். எஞ்சிய சிறிய துண்டையும் நீரில் எறிந்தனர். அந்த துண்டை மீன் ஒன்று விழுங்கி விட்டது.
அந்த மீன் ஒரு மீனவன் கையில் சிக்கி விட்டது. மீனை வெட்டும் போது அதன் வயிற்றில் இருந்த இரும்பை வீசி எறிய அது ஒரு வேடன் கையில் கிடைத்தது. அதனை அவன் ஒரு அம்பு நுனியில் பொருத்தினான்.
கடல் நீரில் கரைந்த பொடிகள், கரையில் இரும்பு கோரைப்புற்களாக வளர்ந்து இருந்தன. ஒரு சமயத்தில் பெரும் போதை மயக்கத்தில் இருந்த யாதவர்கள் கோரைகளை பிடுங்கி தமக்கிடையே சண்டை இட்டு இறந்து போயினர். பலராமனும் அக்கடற்கரையினில் அமர்ந்து தன் சரீரத்தினை விடுத்தது வைகுண்டம் சென்றார்.
வேடன் மிருகம் ஒன்றுக்காக எய்த அம்பு பட்டு கிருஷ்ணன் தனது அவதாரப் பணியை முடித்து வைகுண்டம் சென்றார்.
புத்தஅவதாரம்
கிருஷ்ணர் வைகுண்டம் சென்ற பின்னர் கலியுகம் உண்டானது. இந்து மதம் தன்னுடைய புனித தன்மையை இழந்தது. வேதங்கள் அனைத்தும் கேள்வி குறியானது. தவறான முறையில் கடவுள் பூஜிக்கப்பட்டார்.
இதனால் மகாவிஷ்ணு மீண்டும் அவதாரம் எடுத்து மக்களை சரியான முறையில் வழி நடத்த தீர்மானித்தார்.
கபிலவஸ்து நகரை ஆட்சி புரிந்து வந்த சுத்தோதனர் என்ற மன்னரின் மனைவி மாயாதேவி. இவள் ஒருநாள் உறங்கி கொண்டு இருந்த போது ஒரு வெள்ளை யானை ஒன்று ஆறு தந்தங்களுடன் பிளிறிக் கொண்டு வருவது போல கனவு கண்டாள்.
சில மாதங்களுக்கு பிறகு மாயாதேவி கருவுற்றிருந்த போது தனது பெற்றாரினை காண 'லும்பினி பூங்கா' வழியே சென்றாள். அப்போது சற்றுநேரம் ஓய்வு எடுக்க அரச மரத்தடியில் அமர்ந்தாள்.
தீடீரென பிரசவ வலி எடுக்க, முழு பவுர்ணமி நிலவில் அங்கேயே தன் மகனை ஈன்றாள்.
இளவரசரை பார்க்க அரண்மனை வந்த அஷ்சிகா முனிவர் குழந்தையை பார்த்து 'இவன் ஒரு பெரும் சக்கிரவர்த்தியாக வருவான். அவ்வாறு இல்லையேல் முற்றும் துறந்த முனிவர் ஆவான்.' என்று கூறினார்.
குழந்தைக்கு 'சித்தார்த்தர்' என பெயரிட்டது. மகன் முனிவர் ஆவதனை விரும்பாத கபிலவஸ்து மன்னர், தன் மகன் வறுமை, நோய், முதிர்வு, இறப்பு, இவற்றைப் பற்றி எல்லாம் தெரியாமல் வளர வேண்டும் என நினைத்தார்.
அரண்மனை காவலரிடம் சித்தார்த்தர் அரண்மனையை விட்டு வெளியே போகாதவாறு பார்த்து கொள்ளுமாறு சொல்லி இருந்தார்.
வளர்ந்து குடும்ப வாழ்வில் ஈடுபடுகையில் முனிவர் ஆக விரும்பார் என கருதி இருந்தார்.
அதன்படியே சித்தார்த்தர் வறுமை, நோய், முதிர்வு, இறப்பு இவை எல்லாம் தெரியாமல் வளர்ந்தார். பருவ வயதினை அடைந்த பின் சாக்கிய மன்னர் மகள் யசோதாவை மணந்து ஒரு மகனை பெற்று கொண்டார்.
ஒரு நாள் தனது தந்தையிடம் சென்ற சித்தார்த்தர், தந்தையே! நான் வெளி உலகத்தினை பார்க்க விரும்புகிறேன் என்று கூறினார்.
தந்தையும் அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.
சில நாட்களில் சன்னா என்பவர் ரதத்தினை ஓட்ட சித்தார்த்தர் அரண்மணையில் இருந்து வெளியேறி நகரின் எல்லைக்கு சென்றார்.
அரண்மனை திரும்ப முயன்ற சன்னாவிடம், நகருக்கு வெளியே ரதத்தினை ஒட்டுமாறு கூறினார் சித்தார்த்தர். சற்று தொலைவில் சென்றபின் ஒரு முதியவர் கோலுடன் கூனி நடப்பதனை பார்த்து அதற்கான காரணத்தினை சன்னாவிடம் கேட்டார்.
அதற்கு சன்னா, 'இளவரசே, அவருக்கு வயதாகிவிட்டது. இது போலவே எல்லாருக்கும் ஏற்படும். இப்படி தான் உங்களுக்கும் எனக்கும் ஏற்படும்.' என விளக்கமளித்தார்.
அரண்மனை திரும்பிய சித்தார்த்தர் மனது இது குறித்தே சிந்தித்தது. மறுநாளும் நகரை சுற்றி பார்க்க புறப்பட்ட அவர்கள் இம்முறை வலியினால் வருந்தும் நோயுற்ற மனிதர் ஒருவரை கண்டார்கள்.
அவர் ஏன் வலியினால் துடிக்கிறார் என சித்தார்த்தர் கேட்டார். அதற்கு சன்னா, 'இளவரசே, அவர் ஒரு வலி மிகுந்த நோயினால் வருந்துகிறார்', என்று கூறினார். 'நோய் விசித்திரமானதா?' என்று சித்தார்த்தர் கேட்டார்.
'இல்லை இளவரசே, நீங்களும், நானும் கூட நோய்வாய்ப் படலாம்' என்று சன்னா கூறினார்.
தான் வளரும் பருவத்தில் அறிந்து கொள்ள முடியாததை அறிந்து கொள்ள ஆவல் கொண்டு மேலும், மேலும் பயணங்களை மேற்கொண்டார். ஒருமுறை சிலர் ஒரு மனிதனை தூக்கி செல்வதனை அவதானித்தார்.
'ஏன் அந்த மனிதரை தூக்கி செல்கின்றனர்? அவருக்கு முதிர்வா?, நோயா?' என்று கேட்டார் சித்தார்த்தர்.
'இல்லை இளவரசே, அது மிகவும் துயரமானது. அந்த மனிதர் இறந்து விட்டார்'. அதனால் அவரை தூக்கி செல்கின்றனர்' என்று கூறினார். அதற்கு சித்தார்த்தர் 'நாம் கூட இறக்க வேண்டியவர்கள் தானா?' என்று கேட்டார்.
'ஆம் இளவரசே! நாம் எல்லோரும் இறக்க தான் வேண்டும்' என்று சன்னா கூறினார்.
சுகமான அரண்மனை வாழ்க்கை நடாத்தி வந்த சித்தார்த்தர் தாம் கண்ட காட்சிகளை பற்றியே சிந்திக்கலானார். எதிலும் நாட்டமின்றி, மகிழ்வின்றி துன்பப்பட்டார்.
மீண்டும் ஒரு பயணத்தின் போது அமைதி தவழும் ஒரு முதியவரை பார்த்தார், அவர் யார் என்ன சன்னாவிடம் கேட்டார். 'அவர் ஒரு முற்றும் துறந்த துறவி' என சன்னா கூறினார்.
அன்று இரவே ஒரு முடிவு எடுத்தார் சித்தார்த்தர். 'என்னுடைய ஆடம்பர வாழ்க்கையை துறந்து வாழ்வின் உண்மையான நோக்கத்தினை கண்டு கொள்வேன்' என்று தீர்மானம் செய்தார்.
அதன்படியே அரண்மனை வாழ்க்கையை துறந்து பல ஆண்டுகள் பல போராட்டங்களுக்கு பின்னர் போதி மரத்தின் அடியில் தியானத்தில் இருக்கையிலே ஞானோதயம் பெற்றார்.
சித்தார்த்தர், புத்தர் ஆக மெய்யறிவு பெற்றவராக மாறினார். தான் அறிந்து கொண்டவற்றை வாரணாசியில் சராநாத் எனும் இடத்தில் மான்கள் நிறைந்த பூங்காவில் தனது முதல் உபதேசத்தினை ஆரம்பித்தார்.
'ஆசையே துன்பத்திற்க்கு காரணம்'. ஆசையை ஒழித்தால் துன்பமின்றி வாழலாம். எனவே ஆசையை ஒழிக்க வேண்டும் என கூறினார்.
கல்கி அவதாரம்
நடந்து கொண்டிருக்கும் கலியுக காலத்தின் இறுதியில், மகாவிஷ்ணு எடுக்கவிருப்பதே கல்கி அவதாரம் ஆகும்.
கலியுகத்தின் முடிவில் யசாஸ் எனும் பிராமணரின் மகனாக, மகாவிஷ்ணு பிறப்பு எடுப்பார்.
கவர்ச்சியான முகத்துடன், சகல வல்லமையும் பெற்றவராக திகழ்வார்.
சிரஞ்சீவியான பரசுராமர் இடம் சென்று சகல கலைகளையும் கற்று, உபதேசமும் பெற்றுக் கொள்வார்.
பின் வெள்ளை குதிரை மீதேறி மூன்று நாட்களில் உலகினை சுற்றி வருவார். அக்கிரம செயல்களை எதிர்த்து, அதர்ம செயல்கள் புரிவோரை அழித்து தருமத்தினை நிலை நாட்டுவார்.
அத்துடன் கலியுகம் முடிவுக்கு வரும்.

No comments:
Post a Comment